நாம் இறந்த பிறகு, நம் ஆன்மா எங்கே போகிறது?

 


அனைவருக்கும் வணக்கம். இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மா எங்கே போகும்? அதன் பிறகு என்ன நடக்கும்? இந்தப் பூமியில் நாம் மறுபடியும் பிறப்போமா? அதாவது, மறுபிறவி எடுப்போமா? இந்த மாதிரியான கேள்விகளுக்கு விஞ்ஞானிகளால் கூட, இந்த நாள்வரைக்கும் சரியான ஒரு பதிலைத் தர முடியவில்லை. ஆனால், அவர்கள் பல ஆராய்ச்சிகள் செய்தபிறகு பல அறிவியல் ரீதியான கருத்துக்களை முன் வைத்தார்கள். அப்படி அவர்கள் சொன்ன விஷயங்கள் நம்ப முடியாத வகையில் இருந்தாலும், அவர்கள் சொன்னதைக் கேட்டு, நிறைய பேர் பயங்கரமாக ஆச்சரியப்பட்டார்கள். 


ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர், எழுதப்பட்ட புனித நூல்களில் இறப்புக்கு பின்னர், என்ன ஆகும் என்ற கேள்விக்குச் சொல்லப்பட்ட சம்பந்தமான விஷயங்கள் எல்லாமே, விஞ்ஞானிகள் கூறிய அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு எதிர்மறையாக இருக்கிறது. இதைப் பற்றிக் கிறிஸ்தவர்களின் புனித நூலான, ஹோலி பைபிள் என்ன சொல்கிறது என்றால், ஒரு மனிதன் இறந்த பிறகு, அவனுடைய ஆன்மா முழுமையாக ஓய்வு நிலையில் இருக்கும். அதன்பிறகு, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு கடைசி தீர்ப்பு வரும். நாம் நல்ல செயல்களையும், நன்மைகளையும் செய்து இருந்தால் நம்முடைய ஆன்மா சொர்க்கத்திற்கு செல்லும். அதுவே பாவம் செய்திருந்தால், அந்த ஆன்மா கண்டிப்பாக நரகத்திற்குத் தான் செல்லும்.  இந்து மதத்தின் படி ஒரு மனிதன் இறந்த பிறகு, அவன் செய்த நன்மை, தீமைகளை வைத்து, அவருடைய ஆன்மா சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா? நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்று முடிவு செய்யப்படும். 


அப்படி அந்த ஆன்மா அங்குச் சில காலம் வாழ்ந்தபிறகு மறுபடியும் நம்முடைய ஆன்மாவை மற்றொரு உடலுக்குள் அனுப்புவார்கள். அது மனித உடலாகவும் இருக்கலாம், ஒரு மிருகத்தின் உடலாகவும் இருக்கலாம். இவை எல்லாமே ஒரு சுழற்சி முறையில் நடக்கும். ஆனால், ஒரு மனிதன் இறந்ததற்குப் பின்னால், என்ன நடக்கும் என்ற விஷயத்தைப் பற்றி அறிவியலால் துள்ளிதமாகச் சொல்ல முடியவில்லை. அவர்கள் ஒரு சில கருத்துக்களை முன் வைத்தாலும், அது கண்டிப்பாக அப்படித் தான் நடக்கும் என்பதை, அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான பேராசிரியரான, சாம் பேர்னியோ என்பவர், ஒரு மனிதன் இறந்த பிறகு, என்ன நடக்கும் என்பதை கண்டுபிடிக்க நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 


அப்படி அவர் செய்த ஆராய்ச்சியின் மூலமாக அவர் என்ன கூறினார் என்றால், மனிதனின் இறப்புக்கு பின்னால், அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை கூறினார். இதை நிரூபிக்கச் சாம் பேர்னியோ சில ஆதாரங்களைத் திரட்டினார். அறிவியலின் படி மனிதனின் இதயம் எப்பொழுது துடிப்பது நிற்கிறதோ, அப்பொழுது மனிதன் இறந்ததற்கு சமம். இதை மருத்துவ மொழியில், "டெத் பைக் கார்டியோபிளம்னரி க்ரைட்ரியா" என்று சொல்வார்கள். இதயம் துடிப்பது நிற்கும்பொழுது, ரத்தம் மற்றும் ஆக்சிஜன் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லாது. அதனால் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் வேலை செய்யாது. அதே போல் மனித உடலில் இருக்கும் நான்கு வகையான டிஷ்யூஸ். அதாவது, கனெக்டிவ், எபிதீரியல், மசில்ஸ் மற்றும் நேர்வஸ் டிசூஸ் இந்த நான்குமே இறந்து போகும். ஆனால், உடலின் ஒரு பகுதி மட்டும் வேலை செய்யும் அது தான் மனிதனின் மூளை. 


ஆரம்பத்தில் இதயம் துடிப்பது நின்றபிறகு, ஒரு ஐந்து நிமிடம் மட்டும் தான் மூளை இயங்கும் என்று விஞ்ஞானிகள் நினைத்தார்கள். ஆனால் பல ஆராய்ச்சிகள் செய்தபிறகு, தெரிய வந்தது என்னவென்றால், மனிதனின் மூளை இறந்த பிறகு, சில மணி நேரங்கள் வேலை செய்யும் என்று. அப்படி மூளை வேலை செய்யும் நேரத்தில், மூளைக்குள் பல விதமான யோசனைகள் ஓடிக் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தான் உணர்வுகள். அதாவது, "கான்சியஸ்னஸ்" என்று அறிவியல் ரீதியாகச் சொல்கிறார்கள். 


ஆனால், இந்த உணர்வுகள் நம் மூளையின் நர்வஸ் சிஸ்டமில் சரியாக எங்கிருக்கிறது என்று இதுவரைக்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது சம்பந்தமான ஆராய்ச்சிகள், இப்பொழுது கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், இதயத்துடிப்பு நின்றபிறகு நம்முடைய "கான்சியஸ்னஸ்" வெளியே வருமா? அறிவியல் ரீதியாக, இதைக் "கான்சியஸ்னஸ்" என்று சொன்னாலும், ஆன்மீக ரீதியாக, இது ஆன்மா என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகள் செய்தபிறகு, முக்கியமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். அது என்னவென்றால், ஒரு மனிதன் "கிளினிக்கலி டெத்" என்று சொன்னாலும், அவர் இறந்த பிறகு, அவருடைய உணர்வுகள் சிறிது நேரம் அவர் உடம்பைச் சுற்றிக் கொண்டிருக்கும் என்று. 


இந்த மாதிரியான நிலைமைகளில் அதாவது, இதே துடிப்பு நின்றவுடனே, நாம் இறந்து போகமாட்டோம். உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் செயல்படும். ஆனால், மெதுவாக ஒவ்வொரு உறுப்புகளும்  செயலிழக்க ஆரம்பிக்கும். கடைசியில் அந்த உடல் முழுமையாக இறந்து போகும். ஒருவேளை நம் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழைப்பதற்கு முன்னால் நம்மைக் காப்பாற்ற முடியும் என்றால் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர், சாம் பேர்னியோ, இதயத்துடிப்பு நின்றபிறகு, உயிர் பிழை கிட்டத் தட்ட 120 க்கும் அதிகமான, நோயாளிகளை நேரில் சென்று பேட்டி எடுத்தார். 


அப்படி அந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்தது என்னவென்றால், மனிதன் இறந்த பிறகு, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பது. நிறைய பேருக்கு அவர்களின் இதய துடிப்பு நின்றபிறகு, அவர்களைச் சுற்றி என்ன நடந்தது என்பதை அவர்களால் உணர முடிந்தது. இன்னும் சில பேர் ஒரு பிரகாசமான ஒளியைப் பார்த்ததாகச் சொன்னார்கள். மூளைக்கு இருக்கும் ஒரு தனித்துவம் என்னவென்றால், இதயத்துடிப்பு நிற்கும்போது மூளைக்கு ஆக்சிஜன் செல்லாது. ஆனால், மூளையினால் நினைவுகளை உருவாக்கவும் முடியும், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உணரவும் முடியும். மரணத்திலிருந்து மறுபடியும் உயிரோடு எழுந்து வந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், இறந்து போன அவர்களின் அப்பா, அம்மா அவர்களுக்கு வழிகாட்டியாக, ஏதோ ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றதாகச் சொன்னார்கள். 


ஒரு தடவை சாம் பேர்னியோ ஆராய்ச்சியும்போது, ஒரு மனிதன் இறந்து போனார். அதாவது, தன் இதயத்துடிப்பு நின்று விட்டது. சில நிமிடங்கள், கழித்து தன் இதயத்துடிப்பு துடிக்க ஆரம்பித்தது. அந்த நபருக்குச் சுயநினைவு வந்தபிறகு, அந்த அறையில் இருந்தவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அவர் தெளிவாகச் சொன்னார். இதைக் கேட்டு அங்கிருந்த மருத்துவர்கள் அனைவரும் பயங்கரமாக ஆச்சரியப்பட்டார்கள். கடைசியாக இதற்கான காரணம் அவருடைய ஆன்மா என்று கூறினார்கள். ஆற்றலை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வடிவத்திலிருந்து, மற்றொரு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும். இதை நம் மனித உடலுடன் ஒப்பிடும்போது நம் உடல் என்பது ஒரு பொருள். இதுவே, நம் ஆன்மா ஒரு ஆற்றல்.  


அந்த ஆன்மாவை யாராலும் உருவாக்கவும், அழிக்கவும் முடியாது. ஆனால், அந்த ஆன்மா மனித உடலிலிருந்து, மற்ற விலங்குகளின் உடலுக்குள் உருமாற்றம் அடையும் என்று சில பேர் கூறுகிறார்கள். ஆனால், இது அறிவியல் ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மரணத்தின் விளிம்புவரை சென்று வந்தவர்கள், என்ன கூறினார்கள் என்றால், அவர்கள் இறந்த பிறகு, அவர்களை ஏதோ ஒரு உருவம் அழைத்துக் கொண்டு சென்றதாகச் சொன்னார்கள். இந்துப் புராணத்தின் படி, அது எமதர்மனாக இருக்கலாம். கிறிஸ்தவப் புராணத்தின் படி, அது தேவ தூதர்களாக இருக்கலாம் என்று சில பேர் சொல்கிறார்கள். ஆனால், இதுவும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இதுவரை மரணத்தின் விளிம்புவரை சென்று வந்த அனைவரும், சாதாரணமாக உயிர் பிழைக்கவில்லை. அவர்கள் சி.பி.ஆர். மற்றும் எலக்ட்ரிகல் கார்டியோ வெர்ஷன் மூலமாக உயிர் பிழைத்தார்கள். 


அப்படி கார்டியோ அரஸ்டிலிருந்து, உயிர் பிழைத்த ஒரு ஆறு வயது சிறுவனிடம், சாம் பேர்னியோ, நீ சுய நினைவு இல்லாமல் இருக்கும்பொழுது, உனக்கு ஏதாவது நடந்ததா என்று கேட்டார். அதற்கு, அந்தச் சிறுவன் எனக்கு ஒரு வித்தியாசமான வெளிச்சம் ஒன்று தென்பட்டது. அதிலிருந்து வந்த ஒரு உருவம் தன்னை தைரியப்படுத்தியதாகச் சொன்னான். இன்னும் சில வழக்குகளில், க்ளினிக்களி டெத் ஆன நோயாளிகளை, மருத்துவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவர்களைக் காப்பாற்றிய பிறகு, அந்த நோயாளிகள் சுய நினைவு இல்லாமல் இருக்கும்பொழுது, தன்னை சுற்றி நடந்த விஷயங்கள் அனைத்தையும், மருத்துவர்களிடம் கூறி இருக்கிறார்கள். இன்னும் சிலரின் ஆன்மா அவர்களின் உடலை விட்டு வெளியே வந்து அவர்களுக்கு நடந்த ஆபரேஷன்களையும் பார்த்ததாகச் சொன்னார்கள். 


இதெல்லாம் கேட்பதற்கே, பயங்கரமான ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! 28 வயதான டேவிட் என்னும் நபர். இராணுவத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென்று ஏற்பட்ட பயங்கரமான தாக்குதலால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்னும் சொல்லப்போனால், கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு டேவிட்டிற்கு இதய துடிப்பே இல்லை. அதனால் மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற ரொம்ப முயற்சி செய்தார்கள். கடைசியில்  டேவிட் உயிரோடு எழுந்து வந்து, அந்த 20 நிமிடத்தில் அவருக்கு என்ன நடந்தது என்று அவர் சொன்னதைக் கேட்டு, மருத்துவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அப்படி டேவிட் என்ன கூறினார் என்றால், அவர் கண்களைத் திறந்து பார்க்கும்பொழுது, ஏதோ ஒரு அழகான இடத்தில் இருந்தாராம். 


அவருக்கு, அடிபட்டது மாதிரியான எந்த ஒரு உணர்வும் இல்லையாம். அங்கு டேவிட் ரொம்பவும் சந்தோஷமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்திருக்கிறார்.  அதன் பிறகு, கொஞ்சம் தொலைவில் கேட்ட, ஒரு இனிமையான இசையை நோக்கிப் போகும்பொழுது, அங்கு ஒரு பிரகாசமான வெளிச்சம் தென்பட்டது. அங்கிருந்து ஒரு பிரம்மாண்டமான கை வெளியே வந்து, என் கையைப் பிடித்ததாகச் சொன்னார். அந்த வெளிச்சம் ரொம்பவும் பிரகாசமாக இருந்ததால், அந்த நபர் டேவிட்டுக்கு மிக அருகில் இருந்தாலும், டேவிட்டால் அந்த நபரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. அப்படி டேவிட் அந்த வெளிச்சத்தை கடந்து சென்றபிறகு, அவர் ஒரு அதிசயமான காட்சியைப் பார்த்திருக்கிறார். அது மாதிரியான ஒரு காட்சியைத், தன் வாழ்நாளில் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்று கூறினார். 


அவருடைய இடது பக்கத்தில் மிகப் பிரமாண்டமான பெரிய மரங்களும், வலது பக்கத்தில் பல விதமான வண்ணங்களில் மிக அழகான பூக்களும் இருந்ததாகச் சொன்னார். அதன் பிறகு அவரைக் அழைத்துக் கொண்டு வந்த நபர் திடீரென்று காணாமல் போனதால், டேவிட் மெதுவாக முன்னோக்கி நடக்க ஆரம்பித்து இருக்கிறார். அப்படி அவர் நடந்து போகும்போது அவருக்கு முன்பு, அடர்த்தியான ஒரு காடு இருந்தது. அப்படி அவர் அந்தக் காட்டிற்குள் சென்றவுடன் அவருடைய குழந்தை பருவத்திலிருந்து, இந்த நாள்வரைக்கும் நடந்த அனைத்து விஷயங்களும் அவருடைய கண்ணுக்கு முன்னால் தெரிந்ததாகச் சொன்னார். அதில் சில நினைவுகள் கசப்பாகவும், இனிமையாகவும் இருந்தாலும் அவரால் எதையும் மறக்கவே முடிய வில்லை. தனக்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் உணரும்போது, அவருக்கு முன்பு ஒரு பெரிய மேகம் தென்பட்டது. அந்த மேகத்திற்குள்ளே இருந்து ஒரு பெரிய கை வெளியே வந்தது. அப்படி அந்தக் கையை நோக்கி இவருடைய கையை நீட்டும்போது, அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 


உனக்கான நேரம் இது இல்லை. நீ திரும்பப் பூமிக்கு போ. நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்று அந்தக் குரல் சொன்னதாம். அடுத்த நிமிடம் டேவிட் கண்களைத் திறக்கும்போது,  மருத்துவமனையில் உள்ள படுக்கையில் வலியுடன் படுத்துக் கொண்டு இருந்தார். அதுமட்டுமில்ல, இந்த நோயாளி இறந்து போய் 20 நிமிடம் ஆனதாக, அருகில் ஒரு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. டேவிட் மிகவும் கஷ்டப்பட்டு மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டாலும், அவருக்குத் திரும்பப் பூமிக்கு வர மனதே இல்லையாம். ஏனென்றால், அது மாதிரியான ஒரு மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தன் வாழ்நாள் முழுக்க அனுபவித்தது இல்லை என்று கூறினார். இது டேவிட் தனிப்பட்ட ஒரு அனுபவம். சி.பி.ஆர். மூலமாக உயிர் பிழைத்து வந்து, இது மாதிரி நிறைய பேர், அவர்கள் பார்த்த விசயங்களைக் கூறி இருக்கிறார்கள். இது மாதிரியான நிறைய நிகழ்வுகள் மூலமாக, கண்டிப்பாக மனிதனுக்கு மரணத்திற்குப் பிறகு, ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று பேராசிரியர் சாம் பேர்னியோ கூறி இருக்கிறார்.

You have to wait 30 seconds.

SHAKE EFFECT

Post a Comment

0 Comments