பிரான்ஸ் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா

  பிரான்ஸ் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?

கடந்த 500 வருடங்களுக்கும் மேலாக, ஐரோப்பாவிலும், உலகிலும் பண்பாடு, பொருளாதாரம், இராணுவம், அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்கை கொண்டிருக்கும் ஒரு நாடாக விளங்கி வரும் பிரான்ஸ் நாடு தான், ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நிலப் பரப்பைக் கொண்ட நாடாகும்.

இந்த நாட்டைப் பற்றிய சில சுவாரசியமான, தொகுப்புகளைத் தான் இன்று நாம் இந்தப் பதிவில் பார்க்க இருக்கின்றோம். மொத்தம் இரண்டு லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட பிரான்ஸ் நாட்டின் நிலப் பரப்பானது, பல வேறுபட்ட புவியியல் நில அமைப்புகளைக் கொண்டதாகும். ரோம பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இங்கே பெரு வாரியான மக்கள் குடியேறியதன் விளைவாகவே, உருவாகிய இந்த நாடு, 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் மிகப் பெரிய, குடியேற்ற நாடாகவும் விளங்கி இருக்கின்றது.

உலகின் மிக வளர்ச்சி அடைந்த மதச் சார்பற்ற குடியரசு நாடான பிரான்ஸ், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் மிகப் பெரிய ஐந்தாவது பொருளாதாரத்தையும், ஐரோப்பிய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஐரோப்பாவிலே செல்வ வளம் மிக்க நாடான பிரான்ஸ், உலகின் நான்காவது மிகப் பெரிய நாடாகவும் உள்ளது. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணுச் சக்திகள் கொண்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று.

பிரான்ஸ் தான் உலகிலேயே, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகும். இங்கே ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்கிறார்கள். உலகின் பெரும்பான்மையான நாடுகளில் முட்டை வெண்மை நிறத்தில் இருந்தாலும், பிரான்ஸ் நாட்டில் முட்டைகள் அனைத்தும் பழுப்பு நிறத்தில் தான் அமைந்திருக்கும். பல நூற்றாண்டுகளாகவே, பிரான்ஸ் விவசாயிகள் பல்வேறு விதமான கலப்பினக் கோழிகளைக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம்.

உலகிலேயே இலக்கியத்திற்காக, அதிக அளவில் நோபல் பரிசுகளை வென்ற நாடாகப் பிரான்ஸ் விளங்குகின்றது. இதுவரை 15 க்கும் அதிகமான நோபல் பரிசுகளைப் பெற்று இருக்கிறது இந்த நாடு. உலகிலேயே முதன் முறையாக வாகனப் பயணப் போக்குவரத்து அமைப்பினை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ் தான். 1660 ஆம் ஆண்டுகளிலேயே இது நடைமுறையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ரேடார் கருவிகளைக் கொண்ட கப்பல் பிரான்ஸ் நாட்டில் தான் உள்ளது. "வாங்" என்று அழைக்கப்படும் இது தொடர்ந்து அணுச் சக்தி ஏவுகணைகளைக் கூடத் தொடர்ந்து கண்காணிக்கும், வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய துரித உணவுகளை வழங்கும் நிறுவனமான "மெக்டொனால்ட்ஸ்" உலகம் முழுவதும் தனது கிளைகளைக் கொண்டிருந்தாலும், அமெரிக்காவிற்கு வெளியே, அதிக லாபம் பெறும் இடம் பிரான்ஸ் தான். பிரான்ஸ் நாட்டில் மட்டும் 1000 க்கும் அதிகமான ரெஸ்டாரண்டுகளைக் கொண்டிருக்கிறது "மெக்டொனால்ட்ஸ்" நிறுவனம். உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் பிரான்சில் உள்ள, பாரிஸ், மேஸ்லி, ஃபோர்ட்டேக்ஸ் போன்ற இடங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும். பாரிஸில் உள்ள "ஈபிள்" டவரைக் காண்பதற்காக மட்டும் உலகெங்கிலும், இருந்து வருடத்திற்கு 80 லட்சம் மக்கள் வருகை தருகிறார்கள்.

இன்று நாம் பயன்படுத்தும் கேமரா தொழில்நுட்பம் கொண்ட செல்போன்கள் அனைத்தும் முதன் முதலில் பிரான்சில் தான் உருவாக்கப்பட்டது. "ஃபில்பிகான்" என்பவரால், 1997 ஆம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. 1748 முதல் 1772 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பிரான்சில் உருளைக்கிழங்குகள் பயிரிடுவதும், சாப்பிடுவதும் சட்ட விரோதமாக இருந்தது. தொழு நோய்கள் பரவும் என்ற வதந்தியே இந்தத் தடைக்குக் காரணம். வாகனங்களில் முதன் முதலில் "நம்பர் பிளேட்டை" அறிமுகப்படுத்தியதும் பிரான்ஸ் தான். பிரான்ஸ் நாட்டில் 96 சதவீதத்திற்கும் அதிகமான "ஹை ஸ்கூல்" என்னும் பள்ளிகளில், காட்டன்களைக் கொண்ட வெண்டிங் மிஷின்களை அமைத்து இருப்பார்கள்.

"பிரெஞ்சு" மொழி பிரான்ஸ் நாட்டின் அதிகார மொழியாக இருந்தாலும், உலக அளவில் "பிரெஞ்ச்" மொழி பேசும் மக்கள் அதிக அளவில் ஆப்பிரிக்காவில் தான் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் நகரில் "டாக்ஸி டிரைவர்கள் லைசன்ஸ்" பெறுவதற்கு மட்டுமே, இரண்டு லட்சம் யூரோக்கள் அதாவது, இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எனவே தான் பாரிசில் டாக்ஸிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.

You have to wait 80 seconds.

FULL PROJECT

Post a Comment

0 Comments