இன்று நாம் இந்த உலகில் உள்ள மிகவும் ஆபத்தான பத்து உயிரினங்கள் எவைகள்? என்பதை பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்தப் பூமியில் நம் மனிதர்களைப் போலவே, கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் முதல் மிகப் பெரிய யானைகள் உட்பட பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் ஒரு சில உயிரினங்கள் மட்டும் தான் மனிதனுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இப்படி மனிதனுக்கு மிகவும் ஆபத்தான பத்து உயிரினங்களின் பட்டியலைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். மிகவும் ஆர்வமாக இருக்கப் போகிறது இந்தப் பதிவு. அதிலும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் உயிரினங்கள், உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தும் என்று நம்புகிறேன்.
இந்த லிஸ்டில் பத்தாவதாக இருப்பது முதலைகள்.
பொதுவாக, உலகம் முழுக்கவே பல வகையான முதலைகள் இருக்கிறது. நன்னீர் முதலைகள், உப்பு நீர் முதலைகள், இவ்வளவு ஏன், சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள் கூட இருக்கிறது. கிட்டத் தட்ட ஐந்தரைக் கோடி ஆண்டுகளாக இந்தப் பூமியில் முதலைகள் வாழ்ந்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், இந்த முதலைகளின் வேட்டையாடும் திறனும், சுற்றுச் சூழலுக்கு ஏற்றார் போல் தங்களை தகவமைத்துக் கொள்வதும் தான். எது, கிடைத்தாலும் சாப்பிடும் இந்த முதலைகளுக்கு எதிரி என்பதே யாரும் கிடையாது என்று தான் நாம் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட இந்த முதலைகளால் வருடத்திற்கு, ஆயிரம் மனிதர்கள் இறக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் தான் முதலைகளால் இது போன்ற அதிகளவு இறப்புகள் ஏற்படுகிறது.
இந்த லிஸ்டில் ஒன்பதாவதாக வருவது, ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த நாடாப் புழு.
அதாவது, டேப் வான் என்னும் ஒரு புழு தான். இந்த நாடாப் புழு விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. குறிப்பாகச், சரியாகச் சமைக்கப்படாத பன்றி இறைச்சிகளின் மூலமாக மனிதனுக்குள் பரவுகிறது. இப்படி இந்தப் புழுக்கள் மனிதனின் உடலுக்குள் சென்றவுடன் நாம் சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாக உறிஞ்சி, சுமார் இரண்டிலிருந்து மூன்று மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது. இந்தப் புழுக்கள் ஒரு முறை நம் உடலுக்குள் சென்று விட்டால், அதன் பிறகு அதை வெளியேற்றுவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும். இந்தப் புழுவால் அதிகளவு பாதிக்கப்படுவது சுகாதாரமற்ற இடங்களில் வாழும் மனிதர்கள் தான். இந்த நாடாப் புழுவால் வருடத்திற்கு 700க்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அதாவது, W.H.O.தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த லிஸ்டில் எட்டாவதாக வருவதும் ஒரு புழு தான். அஸ்காரிஸ் லும்ரிகாய்ரஸ் என்ற ரவுண்டுவார்ம்,
மனிதர்களுக்கு, அஸ்கைரியாசிஸ் என்ற நோயை உண்டாக்குகிறது. இந்தப் புழுவால் மட்டுமே ஒரு வருடத்திற்கு 4,500 க்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்று W.H.O. நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புழுவும் சுகாதாரமற்ற இடங்களில் வாழ்வதாலும், சுகாதாரமற்ற பொருட்களைச் சாப்பிடுவதாலும், மனிதர்களுக்குள் பரவுகிறது. மனிதனின் சிறுகுடலுக்குள் வாழும், இந்தப் புழுக்கள் கிட்டத் தட்ட ஒரு அடிக்கு மேல் வளருமாம். இந்தப் புழுவால் அதிக அளவு பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். உலகம் முழுவதும் இந்தப் புழுவால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று W.H.O. நிறுவனம் கூறுகிறது.
அடுத்ததாக இந்த லிஸ்டில் ஏழாவது வருவது, பார்ப்பதற்கு மிகவும் சாதனமாக நம் வீட்டில் இருக்கும் ஈக்களைப் போன்று உள்ள, "செட்ச ஈக்கள்"
மிகவும் கொடூரமான ஒரு ஈ வகையைச் சேர்ந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் இந்த ஈக்கள், இரவு நேரங்களில் மனிதனின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கக் கூடியது. இப்படி குடிக்கும்போது, ட்ரிப்போனசோம்மா என்ற ஒரு வகை புரோட்டோசோவா மனிதனுக்குள் சென்று விடும். இப்படி மனிதனின் உடலுக்குள் செல்லும் இந்த ஒட்டுண்ணியால், "ஆப்பிரிக்கன் ஸ்லீப்பிங் சிக்னஸ்". அதாவது, ஆப்பிரிக்க தூக்க வியாதி என்ற நோய் வரும். இந்த நோயால், நமது மூளையின் செயல்பாடுகள் மொத்தமாகப் பாதிக்கப்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக இறந்து விடுவார்கள். இந்த இந்த "ஆப்ரிக்கன் ஸ்லீப்பிங் சிக்னஸ்" என்ற நோயால் வருடத்திற்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனிதர்கள் இறந்து போகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் இந்தச் "செட்ச ஈக்கள்" தான்.
இந்த பட்டியலில் ஆறாவது வருவது, "அசாஸிங் பக்ஸ்" அல்லது "கிஸ்ஸிங் பக்ஸ்" என்ற ஒரு வகை பூச்சி தான்.
இந்த பூச்சிக்கு "கிஸ்ஸிங் பக்ஸ்" என்ற பெயர் ஏன் வைத்தார்கள் என்று தெரியுமா? இது மனிதர்கள் முகத்தில் மட்டும் தான் கடிக்குமாம். பொதுவாக, நாம் தூங்கும் போது, நமக்கே தெரியாமல் நம்மைக் கடிக்குமாம் இந்த பூச்சி. இப்படி இந்த பூச்சி, நம்மைக் கடிக்கும் போது, அதன் எச்சியில் உள்ள "ட்ரிப்போனசோம்மா க்ரூசி" என்ற ஒட்டுண்ணி நம் உடம்பில் உடம்பிற்குள் செல்வதால், சாகாஸ் என்ற ஒரு நோய் நமக்கு வருமாம். இந்த நோய் வருவதால் மனிதனுக்கு இதயத் துடிப்பு ஏற்பட்டு, இறுதியில் மனிதன் இறப்பதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம். சில சமயங்களில் 10 முதல் 25 ஆண்டுகள் கழித்துக் கூட இதன் பாதிப்புகள் மனிதனுக்கு ஏற்படுமாம். இந்த சாகாஸ் நோயால் மட்டும் வருடத்திற்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, மனிதர்கள் இறந்து போகிறார்களாம். அதற்குக் காரணம் இந்த "கிஸ்ஸிங் பக்ஸ்" என்ற பூச்சி தான்.
சாதாரணமாகக் குளத்திலும், குட்டைகளில் இருக்கும் நத்தைகள் தான் ஐந்தாவது ஆபத்தான உயிரினம்.
இந்த நத்தைகளால் நேரடியாக நமக்குப் பாதிப்புகள் எதுவும் கிடையாது. ஆனால் இந்த நத்தைகளில் இருக்கும் பாக்டீரியாக்களால் மனிதர்களுக்கு "சிஸ்டோசோமியாசிஸ்" என்ற ஒரு நோய் வரும். இந்த நோய் வந்தால் கடுமையான வயிற்று வலி, சிறுநீர் மற்றும் மலத்தில் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் கூட ஏற்ப்பட வாய்ப்பு இருக்கிறதாம். இந்த நத்தையிலிருந்து பரவும் இந்த நோயினால், வருடத்திற்கு 20 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை மனிதர்கள் இறக்கிறார்கள் என்று W.H.O. நிறுவனம் கூறுகிறது.
இந்த பட்டியலில் நான்காவது வருவது, நாய்கள் தான்.
சாதாரண நாய்கள் கடித்தால் நமக்கு பெரியதாக பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், வெறி நாய் கடித்தால் கண்டிப்பாக இறப்பு தான் ஏற்படும். அதற்குக் காரணம் ரேபிஸ் என்னும் நோய் தான். இப்படி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட, வெறி நாய்கள் கடித்தால் உடனே அதற்கான ஊசி, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி நான் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அந்த வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக மூளைக்குள் சென்று, பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படி இந்த ரேபிஸ் நோயால் மட்டுமே, வருடத்திற்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்று W.H.O. நிறுவனம் கூறுகிறது. அதில் 99 சதவீதம் இறப்பு நாய்களால் தான் வருகிறதாம்.
பாம்புகள் தான் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இந்த பூமியில் அண்டார்டிகாவைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் பாம்புகள் அதிக அளவு இருக்கிறது. கிட்டத் தட்ட 3600க்கும் மேற்பட்ட, பாம்பு வகைகள் இந்த உலகத்தில் இருந்தாலும், ஒரு சில பாம்பு வகைகள் தான் அதிக அளவு விஷம் உடையது. இப்படி இந்தப் பாம்புகள் கடிப்பதால் மட்டுமே, வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்து போகிறார்களாம். இவ்வளவு பேர் இறந்து போனாலும், பாம்புக் கடிக்கான, விஷமுறிவு மருந்துகள் பல இடங்களில் இன்னும் கிடைக்காமல் தான் இருக்கிறது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருப்பது மனிதர்களாகிய நாம் தான்.
என்ன மனிதர்கள் ஆபத்தான உயிரினமா என்று கேட்கிறீர்களா? இந்தக் கேள்வியே மிகவும் தவறு. ஏனென்றால், மனிதர்களால் மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. மனிதர்களால் இந்தப் பூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மற்ற உயிரினங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் தான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த பட்டிியில் நாம் தான் முதலிடத்தில் இருந்திருக்க வேண்டும். மனிதர்களாகிய நாம், ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்வதாலும், ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்வதாலும், தீவிரவாதத் தாக்குதலாலும், போர்கள் போன்றவற்றாலும் ஒரு வருடத்திற்கு நான்கு லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேலான மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்த உலகத்திலேயே எந்த ஒரு உயிரினமும் தங்களுக்குள்ளேயே இந்த அளவிற்கு சண்டை போட்டுக் கொண்டு சாகது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தப் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது உருவத்தில் சிறிய அளவில் இருக்கும் கொசு தான்.
இந்தக் கொசுக்களால் மட்டுமே, ஒரு வருடத்திற்கு ஏழு லட்சத்து 25 ஆயிரம் பேர் இறந்து போகிறார்கள் என்று W.H.O. நிறுவனம் கணித்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், இந்தக் கொசுக்கள் மனிதர்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, சிஹா வைரஸ், மஞ்சள் காமாலை, யானைக் கால் நோய், மூளைக் காய்ச்சல் போன்ற பல நோய்களைப் பரப்புவதால் தான். தமிழ்நாட்டில் சமீபத்தில் கூட, டெங்குவால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். W.H O. அறிக்கையின் படி, இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களில் பாதி பேர், இந்தக் கொசுவால் ஏற்படும், ஏதாவது ஒரு நோய்களில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். எனவே சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டால், இது போன்ற பல ஆபத்தான விலங்குகளிடமிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
Full Project Download
0 Comments