தென் அமெரிக்கா நாட்டில் உள்ள மிகப் பெரிய அமேசான் காடுகளைப் பற்றி நாம் அனைவரும் ஏதாவது ஒரு சமயத்தில் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவிற்கு இந்தப் பூமிக்கு மிகவும் முக்கியமான ஒரு காடு தான் அமேசான் காடு. இன்று பூமியில் இருக்கும் ஆக்சிஜனில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது, 20 சதவீதம் ஆக்சிசனை வெளியிடுவது இந்தக் காடுகளில் இருக்கும் மரங்கள் தான். இந்தக் காடு எவ்வளவு பெரியது என்று பார்த்தால், கிட்டத் தட்ட 55 லட்சம் சதுர கிலோ மீட்டர். இந்தியாவின் மொத்த பரப்பளவு கிட்டத் தட்ட 33 லட்சம் சதுர கிலோ மீட்டர் தான். அதாவது, இந்தியாவை விட மிகப் பெரியது இந்த அமேசான் காடு.
இன்று இந்த உலகத்தில் இருக்கும் பத்து உயிரினங்களில் ஒரு உயிரினம் இந்தக் காட்டில் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதே போல் விளம்பரங்களில் கூறுவது போல, இந்தக் காட்டில் மட்டுமே பத்தாயிரத்துக்கும் அதிகமான அரிய வகை மூலிகைத் தாவரங்கள், செடிகள் கிடைக்கின்றன. இதே போல் சுமார் 25 லட்சம் வகை பூச்சி இனங்கள் இந்தக் காட்டில் வாழ்ந்து வருகின்றன. இது மட்டுமில்லாமல் 2000 வகை பறவை இனங்கள். அதாவது, உலகத்தில் இருக்கும் பறவை இனத்தில் ஐந்தில் ஒரு வகை பறவை இனம் இந்தக் காட்டில் வாழ்ந்து வருகின்றன. இதோடு சேர்த்து பல வகையான மீன் இனங்களும், பாலூட்டி இனங்களும் இந்தக் காடுகளில் வாழ்ந்து வருகின்றன. இவைகள் கூடவே, சுமார் பல்லாயிரம் ஆண்டுகளாக 400 வகைச் சேர்ந்த 10,00,000 அதிகமான பழங்குடியின மலை வாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இது எல்லாவற்றையும், விடப் புவி வெப்பமயமாதலைத் தடுப்பதில், இந்தக் காடு மிக முக்கிய பங்கு வைக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. இந்தக் காடு மட்டும் இல்லை என்று சொன்னால், பூமியின் வெப்பநிலை சுமார் 2 டிகிரி அதிகரித்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இன்று நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சுக் காற்றுக்கும், இந்த அமேசான் காட்டுக்குத் தான் நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். இதனால் தான் இந்தக் காட்டைப் பூமியின் நுரையீரல் அதாவது, லங்ஸ் ஆப் தி எர்த் என்று சொல்வார்கள்.
சரி இதெல்லாம் ஏன், இப்பொழுது சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காடு (7.8.2019) முதல் (23.8.2019) வரை கடந்த இரண்டு வாரங்களாகக் காட்டுத் தீயால் பற்றி எரிகிறது. காட்டுத் தீ வருவது சாதாரண விஷயம் தானே என்று அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியாது. ஏன், அப்படி என்றால் இந்தத் தீ இயற்கையாக வரவில்லை. மனிதனின் பேராசையால் செயற்கையாகப் பற்ற வைக்கப்பட்டது. அன்று 4 ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு நிமிடமும், கிட்டத் தட்ட ஒரு கிரிக்கெட் மைதான அளவிற்கு அமேசான் காடுகள் தீயால் அழிந்து வந்தது. இதற்கெல்லாம் காரணம் மனிதனின் பேராசை தான்.
உணவு உற்பத்திக்காக, விவசாயம் செய்வதற்கு இந்த விலை மதிப்பற்ற இந்தக் காட்டைக் கண்ணிமைக்கும் நேரத்தில் பெருமளவு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள் அங்கிருக்கும் பெரும் முதலாளிகள். பெரும்பாலான அமெரிக்கா கம்பெனிகளுக்குத் தென் அமெரிக்க வளங்களின் மீது எப்பொழுதுமே ஒரு கண். அங்கிருக்கும் பல வளங்களைக் கொள்ளை அடிக்கப், பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கவின் பெரும் நிறுவனங்கள். அப்படிப் பட்ட நிறுவனங்களில் ஒன்றான "யுனைடெட் ஃபுருட்ஸ்" என்ற கம்பெனியைத் தான், கியூபாவிலிருந்து விரட்டி அடித்தார்கள் சே குவேராவும், பிடல் கேஸ்ட்ரோவும்.
சமீப காலமாக வளர்ச்சி என்ற பெயரில் அமேசான் காடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்கும், வேட்டையாடுவதற்கும் அமெரிக்காவின் பல நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போடுகின்றன. அதற்கு உடந்தையாக இப்பொழுது இருக்கின்ற பிரேசில் நாட்டு பிரதமர் ஜேர் போல்சனேரோ இருக்கிறார். அமேசான் வளங்களை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோம் என்று சொல்லி, கடந்த 2019 ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமேசான் நிலங்களைக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பனைக்கு ஏலம் விட்டு விட்டார். இதே போல் அமேசான் காட்டில் இருக்கும் மற்றொரு நாடான ஈக்வடாரும் அமேசானின் நிலங்களை எண்ணெய் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய ஏலம் விட்டார்கள்.
ஆனால் இதை எதிர்த்து, அங்கு வாழும் வவ்ராணி என்ற பழங்குடியின மக்கள் கொடுத்த வழக்கில், அந்த நாட்டு நீதிமன்றம் பழங்குடியினரின் அனுமதி கேட்காமல், அந்த இடத்தை விற்கக் கூடாது என்று 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதித்தது. இந்தத் தீர்ப்பைக் கேட்ட, அந்தப் பழங்குடியின மக்கள் மிகவும் சந்தோசமாக, இது எங்கள் முன்னோர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லிக் கொண்டாடினார்கள். அவர்களுடன் சேர்ந்து, இந்தத் தீர்ப்பைக் கேட்டு, இந்த உலகமே மகிழ்ச்சியில் கொண்டாடியது. ஆனால், இந்தத் தோல்வியைத் தாங்க முடியாத கார்ப்பரேட் நிறுவனங்கள்.
ஒரே மாதத்தில் அதற்குப் பழி தீர்க்கும் விதமாக, அமேசான் காட்டின் பல இடங்களில் தீ வைத்து விட்டார்கள். இப்படி அமேசான் காடு முழுவதுமாக எரிந்து சாம்பலான பிறகு, அந்த நிலங்களை அவர்கள் நினைத்தது போலவே விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொழுது இருக்கும் பிரேசில் பிரதமர் ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்திற்கு உள்ளேயே, சென்ற ஆண்டு விட 88 சதவீதம் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது என்று அறிக்கை வெளியிட்ட அந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் துறை தலைவர் கடந்த வாரம் (17.8.2019) வேலையை விட்டு நீக்கப்படுகிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தான், இது கார்ப்பரேட் மற்றும் பிரேசில் நாட்டு அரசின் வேலை என்று உலகின் பலர் சந்தேகம் கொள்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை எல்லாம் பொய் என்று மறுக்கும் பிரேசில் நாட்டு பிரதமர், என்ஜியோக்கள் மேல் இந்தப் பழியைத் திருப்பிப் போடுகிறார்.
இப்படி மாறி, மாறிப் பழியைத், திருப்பிப் போட்டுக் கொண்டே, இந்தப் பிரேசில் அரசாங்கம், இந்தக் காட்டுத் தீயை அணைப்பதற்கு, எந்த வித ஒரு முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது. இதனால் இந்தத் தீயின் தாக்கம், விண்வெளியிலிருந்து பார்த்தால் கூடத் தெரியும் அளவிற்கு பயங்கரமாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதே போல் இந்தக் காடு தொடர்ந்து எரிவதால் வரும் புகை மூட்டம் சுமார் 1800 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பிரேசில் நாட்டின் இன்னொரு நகரமான "சாவு பாலோ "என்ற நகரத்தியை இருளில் மூழ்கடித்து விட்டது என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
ஆனால், இதை எந்த ஒரு ஊடகமும் வெளியில் சொல்லவில்லை. அதற்கு முக்கிய காரணம், அந்த அனைத்து ஊடகங்களுமே அந்தக் கார்ப்பரேட் கம்பெனிகளிடம், பணத்தை வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பவர்கள் தான். எப்பொழுதுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் நினைத்ததை சாதிப்பதற்காக, எந்த ஒரு எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த உதாரணம். இதே போல் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற ஒரே ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்காக, 13 அப்பாவி உயிர்களை, நமது அரசாங்கமே சுட்டுக் கொன்றது.
இப்பொழுது பல உலக நாடுகளிடம் உள்ள அரசுகள், கார்ப்பரேட் கம்பெனிகளிடம், பணத்தை வாங்கிக் கொண்டு தான் ஆட்சிக்கு வருகிறார்கள். இதனால் கார்ப்பரேட் கம்பெனிகள், என்ன சொன்னாலும் அதை அவர்கள் செய்து தான் ஆக வேண்டும். இதே மாதிரியான வளச் சுரண்டல்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. தீவிரவாதம் என்ற பெயரில் காஷ்மீரை பிடித்து, அதில் அம்பானியை ஒரு லட்சம் கோடியை முதலீடு செய்ய வைக்கிறது நம் இந்திய அரசு. இதே போல் தான், பல கார்ப்பரேட் கம்பெனிகள், காவிரி, டெல்டா போன்ற பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மீத்தேன், ஈத்தேன், எடுக்கிறேன் என்று சொல்லி நம் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் நாம் வேடிக்கை மட்டும் பார்க்காமல், முடிந்த அளவிற்கு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கார்ப்பரேட்டுகளின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய, வருங்கால சந்ததிக்குத் தேவையான அளவிற்கு, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, வைத்து விட்டுச் செல்ல முடியும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.
0 Comments