சிந்து சமவெளியில் வாழ்ந்தது தமிழர்களே | சிந்து சமவெளி நாகரிகம் வரலாறு

  தென்னிந்தியர்களாகிய நாம் அனைவரும் அதிலும் குறிப்பாக, தமிழர்களாகிய நாம் அனைவரும் மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒரு செய்தியைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.


அப்படி என்ன செய்தி என்றால், சிந்து சமவெளியில் வாழ்ந்தது நாம் தென்னிந்தியர்கள் தான் என்று அறிவியல் பூர்வமாகவும், ஆராய்ச்சிப் பூர்வமாகவும் நிரூபித்து 2 கட்டுரைகள் கடந்த வாரம் வெளியாகி இருக்கிறது. இது உண்மையிலேயே, தமிழர்களாக நாம் அனைவரும் மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒரு செய்தி தான். ஏன், அப்படி என்றால் இதற்கு முன்பு, இந்திய வரலாறு அப்படி என்று சொன்னால், இந்திய அரசாங்கமும் சரி, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சரி ஆரியர்களின் வருகைக்குப் பின்பு தான் இந்தியாவில் நாகரிகம் தோன்றியது. 


அதற்கு முன்பு வரைக்கும், இந்தியாவில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஒரு அரை பழங்குடியினர்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சிந்து சமவெளிக்கும், ஆரியர்களுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. அங்கு வாழ்ந்தது தென்னிந்தியர்கள் தான் என்பதை ஆதாரப்பூர்வத்துடன்  ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அதைப் பற்றிய விரிவான செய்தியைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து, இது எங்களுடைய நாகரீகம் தான் என்று தென் இந்தியர்களும், வட இந்தியர்களும்  ஒருவருக்கொருவர் உரிமை கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். 


இதில் வட இந்தியர்கள் கைத்தான் ஓங்கி இருந்தது. ஏன், அப்படி என்றால், தற்பொழுது சிந்து சமவெளி பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருப்பது வட இந்தியர்கள் தான். அது மட்டுமில்லாமல், அதிகாரமும் அவர்கள் கையில் தான் இருந்தது.  அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிந்து சமவெளி நாகரிகம் ஒரு ஆரிய நாகரிகம் தான். அது ஒரு வேத கால நாகரிகமும் கூட, இந்தியாவின் முதல் நாகரிகமும் சிந்து சமவெளி நாகரிகம் தான். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஒரு அரை பழங்குடியினர்கள் தான் என்று இந்த உலகத்தையும், நம் இந்தியர்களையும் நம்ப வைத்துக் கொண்டிருந்தார்கள். 


ஆனால், இதை நிரூபிக்க அவர்களிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இதெல்லாம் ஒரு புறம் இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்தச் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு மர்மமாகவே இருந்தது. 4500 ஆண்டுகளுக்கு முன்பே, அழகாகக் கற்களை வைத்து வீடு கட்டி, வடிகால் அமைத்து வாழ்ந்தவர்கள் ஏன், அதை விட்டு விட்டார்கள் எங்குப் போனார்கள்? அங்கு வாழ்ந்தவர்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசி இருப்பார்கள்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மர்மமாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சிந்து சமவெளி பகுதியில் இருந்த ஹரியானாவில் உள்ள ராக்கி காடி என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புக் கூடுகள் பதில் சொல்லியது. அந்த எலும்பு கூட்டிட்டின் டி.என்.ஏ. வை ஆராய்ச்சி செய்து பார்த்தபிறகு, அந்த டி.என்.ஏ. தமிழ் நாட்டில் உள்ள இருளர் பழங்குடியினருடன் ஒத்துப் போனது. இது இந்திய வரலாற்றையே மாற்றி எழுதக் கூடியதாக இருந்தது. 


சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களாக இருக்கின்ற, 114 ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆராய்ச்சி முடிவான, மிகவும் மதிப்பு மிக்கதான அறிவியல் என்ற சேனலில் ஒளிபரப்பு செய்தார்கள். இதில் உலகின் பல இடங்களில் கிடைத்த 523 வகையான எலும்புக் கூடுகளை ஆராய்ச்சி செய்து, சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், ஆரியர்கள் அதாவது, பிராமணர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமில்லை என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல், ஆரியர்களின் வருகை ஆரியன் இன்வென்சென் தியரியும் உண்மை தான் என்று நிரூபித்து இருக்கிறார்கள். சரி, ஆரியர்கள் என்றால் யார் என்று கேட்கிறீர்களா? சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் தான் ஆரியர்கள். 


ஆரியர்களின் கூற்றுப்படி தமிழர்களாகிய நமக்கு, நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தது அவர்கள் தான் என்று அவர்கள் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிற்குள், அதாவது, சிந்து சமவெளி நாகரிகத்திற்குள் வருவதற்கு சரியாக ஆயிரம் வருடத்திற்கு முன்பாகவே, நம்முடைய மூதாதையர்கள் அதாவது, தென்னிந்தியர்கள் நாகரிகத்தோடு அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். இது மட்டுமில்லாமல், ஆரியர்கள் பேசிய சமஸ்கிருத மொழியோடு, திராவிட மொழிகள் மிகவும் பழமையானது என்று இந்த ஆராய்ச்சியின் மறைமுகமாக நிரூபணமாகி இருக்கிறது. சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய உக்கிரன் ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள புல்வெளிகளிலிருந்து கிளம்பி, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் வழியாக, ஹிந்து குஷ் மலைகளைக் கடந்து, கைபர் பூரான் கணவாய் வழியாக, சுமார் 4000 லிருந்து 5000 ஆண்டுகளுக்குள் சிந்து சமவெளி வந்து சேர்கிறார்கள். 


அவர்கள் கூடவே, இந்து ஆரியன் மொழி சான்ஸ்கிரிட் மொழியையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு வந்து சேர்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சிந்து சமவெளியில் மக்கள் நாகரிகத்தோடு, நன்றாகச் செழிப்பாக வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள். இந்த ஆராய்ச்சி முடிவின் படி நாம் பார்த்தோமானால் சிந்து சமவெளி மக்கள் பேசிய மொழி கண்டிப்பாகச் சமஸ்கிருத மொழியாக இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. ஏன், அப்படி என்றால் ஆரியர்கள் அங்கு வருவதற்கு முன்பாகவே, சிந்து சமவெளியில் மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள். இதற்கு முந்தைய ஆய்வுகள் என்ன கூறியது என்றால், சிந்து சமவெளி மக்கள் ஒருவேளை ஈரானிய விவசாயிகளாக இருந்திருக்கலாம் என்று கூறினார்கள். 


ஆனால் கடந்த வாரம் செல் என்ற ஒரு குறிப்பேடு வெளியான இன்னொரு ஆராய்ச்சி கட்டுரையில், ராக்கி காரி என்ற இடத்தில் எடுத்த டி.என்.எ. கண்டிப்பாக ஈரானிய விவசாயிகளுடன் ஒத்துப் போகவில்லை. ஏனெனில், அங்கு வாழ்ந்தது ஈரானிய விவசாயிகளும் இல்லை, ஆரியர்களும் இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள். அப்படி என்றால், சிந்து சமவெளி வாழ்ந்த மக்கள் யாரென்று பார்த்தால், தென்னிந்தியர்கள் தான் என்று நிரூபணமும் ஆகி இருக்கிறது. ஆனால், அரசியல் அழுத்தத்தின் காரணமாக இதை அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடவில்லை. இது மட்டுமல்ல, இந்த ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டது, வட இந்திய தொழில் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான். அவர்களைப் பொறுத்த வரைக்கும், இந்தியர்களுக்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தது ஆரியர்கள் தான் என்று இந்த உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறார்கள். 


இது மட்டுமில்லாமல், ராக்கி காரில் கிடைத்த டி.என்.எ. வை 2015 லேயே ஆய்வு செய்து முடித்து விட்டார்கள். ஆனால், அந்த ஆய்வு முடிவை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார்கள். ஏன் அப்படி என்றால், அவர்கள் அந்த ஆய்வு முடிவை வெளியிட்டார்கள் என்றால், அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று இந்த உலகத்திற்கு தெரிந்து விடும். ஆனால், நீண்ட நாட்களுக்கு இந்த ஆராய்ச்சி முடிவை அவர்களால் மறைத்து வைக்க முடியவில்லை. ஏனென்றால், இந்த ஆராய்ச்சியின் முடிவுக்காகப் பல உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, பாதி உண்மையை மட்டும் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் தென்னிந்தியர்கள் தான் அங்கு வாழ்ந்தார்கள் என்பதை அவர்கள் (ஆரியர்கள்) மறைத்து விட்டார்கள். 


ஆனால், அவர்கள் என்ன தான் இந்த உண்மையை மறைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அறிவியல் குறிப்பேட்டில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரையில், சிந்து சமவெளி வாழ்ந்தது திராவிட மொழிகள் பேசிய தென்னிந்தியர்கள் தான், அதாவது, "ஆன்சர் ஸ்ட்ரீட்" "சவுத் இந்தியன்" தான் என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  இதற்கு அவர்கள் தமிழ்நாட்டில் கிடைத்த எழுத்துக்களும், சிந்து சமவெளிகளில் கிடைத்த எழுத்துக்ளும் ஒரே மாதிரி இருக்கிறது என்று ஐரவதா மகாதேவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையை மேற்க்கோள் காட்டி இருக்கிறார்கள். 


இந்த இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகளின் முடிவின் படி, ஆரிய, பிராமணர்களால் பல நூற்றாண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்துள்ள பொய்கள் வெளிவந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சியைப் போலவே தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த, எலும்புக் கூடுகளை முறையாக ஆய்வு செய்வதன் மூலமாக, தமிழர்கள் தான் இந்தியாவின் மூத்த குடிகள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். இது மட்டுமில்லாமல், இந்தியாவிற்குள் நாடோடிகளாக வந்த ஆரியர்கள் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிற காப்பியங்களும், புராணங்களும் தமிழர்களுடன் தான் இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏன், அப்படி என்றால், இப்படி நாடோடிகளாக அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்களால், புராணங்கள் எழுதவோ, காப்பியங்கள் எழுதுவோ அவர்களுக்கு நேரம் இருக்காது. அவர்களின் முழு நேர வேலையே உணவுத் தேடுவதாகத் தான் இருக்கும். ஆனால், அதே நேரத்தில் ஒரே இடத்தில் இப்படி நாகரிகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் மட்டும் தான் இந்த மாதிரி நாகரிகங்களும், புராணங்களும் படைக்க முடியும். எது எப்படியோ, இவ்வளவு பெரிய அடக்குமுறைகளைத் தாண்டி, சிந்து சமவெளி நாகரிகம், தென்னிந்திய நாகரிகம் அதிலும் குறிப்பாக, தமிழர்கள் நாகரீகம் என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொண்டது. இதுவே நாம் எல்லோருக்கும் கிடைத்த முதல் வெற்றி தான். 


சிந்து சமவெளியில் வாழ்ந்தது தென்னிந்தர்கள் தான் என்பதை அனைத்து வரலாற்றுப் புத்தகங்களிலும் மாற்ற வேண்டியதாக இருக்கும். இது மட்டுமில்லாமல், ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சி முடிவுகளை, முறையாக வெளியிடுவதன் மூலமாகத் தமிழர்கள் தான் இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். இந்தப் பதிவில், நான் கூறிய ஆராய்ச்சி முடிவுகளை எந்த ஒரு இந்திய ஊடகமும் வெளியில் கூறாது. ஏன், அப்படி என்றால், அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்துவது ஆரியர்கள் தான். தமிழர்களாக நாம் தான் இந்தச் செய்தியை மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டும்.

You have to wait 30 seconds.

FULL PROJECT

Post a Comment

0 Comments