Did you know these facts about Germany

 ஜெர்மனி பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?

ஜெர்மனி, ஐரோப்பியக் கண்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கூட்டாட்சி குடியரசு நாடான இது, அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டைப் பற்றிய சில முக்கியமான தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். 


ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடாக ஜெர்மனி விளங்குகின்றது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், புலம் பெயர்ந்த மக்களுடன் 81 மில்லியன் மக்கள் இங்கே வசிக்கிறார்கள். பரப்பளவு அடிப்படையில் ஐரோப்பாவின் ஏழாவது பெரிய நாடாகவும், உலகின் 62 வது பெரிய நாடாகவும் அமைந்திருக்கும் இந்த நாடு, 


"ஆஸ்திரியா", "சுவிட்சர்லாந்து", "பிரான்ஸ்", "லக்சம்பர்க்", "பெல்ஜியம்", "நெதர்லாந்து"ஆகிய நாடுகளை நில எல்லைகளாகக் கொண்டு இருக்கிறது. உலகின் மிகப் பெரிய கார் தயாரிக்கும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் ஜெர்மனி, 2011 ஆம் ஆண்டு அதிக பட்சமாக 60 லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கின்றது. "வேல்ஸ்வேகன்", "மெர்சிடிஸ்", "ஆடி" மற்றும் "பி.எம்.டபிள்யூ". போன்றவைகள் ஜெர்மனியில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. 


இதில் "வேல்ஸ்வேகன்" கார்களே, அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட கார்களாக உள்ளன. உலகில் முதன் முதலில் காகிதத்தில் அச்சிடப்பட்டு புத்தக வடிவில் வெளியான மொழி ஜெர்மன் மொழி தான். இன்றளவும் உலக அளவில் ஒவ்வொரு வருடமும், 90 ஆயிரத்திற்கு அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளி வருகின்றன. இது தவிர, உலகின் முதல் மேகஸின் எனப்படும் பத்திரிகையை, 1663 ஆம் ஆண்டு வெளியிட்டதும் ஜெர்மனி தான். உலகெங்கிலும் பரவலாகப் பேசப்படும் மொழிகளில், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மன் மொழியானது, ஜெர்மனி தவிர, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் போன்ற நாடுகளிலும் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. 


கல்லூரிகளில் இலவச படிப்பினை வழங்கும் ஜெர்மனி நாடானது, அதற்கென்று கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. 2014 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும், இந்த முறை பிற நாட்டு மாணவர்களுக்கும் பொருந்தம். ஜெர்மனியில் 300 க்கும் அதிகமான ரொட்டி வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் 1500 க்கும் அதிகமான பியர் மதுபான வகைகளைத் தயாரிக்கும் ஜெர்மனியில், பியரானது அங்கு அன்றாடம் உண்ணப்படும் உணவுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பியர் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஜெர்மனி. 


ஜெர்மனியில் பொது இடங்களில் புகைப் பிடிப்பது சட்டப் படி குற்றமாகும். ஆனால், பொது இடங்களில் மது அருந்துவதற்கு, எந்த விதத் தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "புட்பால்" எனப்படும் "கால்பந்து" விளையாட்டு ஜெர்மனியில் மிகவும் பிரபலமான ஒன்று. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு "ஃபுட்பால் பேன்ஸ் கிளப்" ஜெர்மனியில் தான் அமைந்திருக்கின்றன. கிறிஸ்துமஸ் தினங்களில் அலங்கரிக்கப்படும், "டேனபம்" இன்று அழைக்கப்படும் "கிறிஸ்துமஸ் ட்ரீ" பாரம்பரியமானது,  ஜெர்மனி நாட்டிலிருந்து தான் உருவானது. 


உலக அளவில் அதிக விலங்கியல் பூங்காக்களைக் கொண்ட இடமும் ஜெர்மனி தான். ஜெர்மனியில் சிறையிலிருந்து, தப்பிக்க முயற்சிக்கும் கைதிகளுக்கு, ஜெர்மனி அரசு எந்த விதத் தண்டனையும் வழங்குவதில்லை. மனிதர்களின் அடிப்படை உள் உணர்வாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம். ஜெர்மனியில் முதலாம் உலகப் போரின்போது நிறைய ஆண்கள் இறந்து போனதால், அந்தச் சமயத்தில் மூன்று பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதமே இருந்துள்ளது.  ஜெர்மனி ஜப்பான் ஆகிய நாடுகள் மிகக் குறைந்த அளவிலே பிறப்பு விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. 


இதன் காரணமாகவே 1989 முதல் 2009 வரை 2000 க்கும் அதிகமான, பள்ளிக் கூடங்கள் மூடப் பட்ட வினோதமும் இந்த நாட்டில் நடந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது கொக்கோகோலா போன்ற குளிர் பானங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், உருவானது தான் "பேண்டா" என்ற ஜெர்மனி நாட்டு குளிர் பானம். பொதுவாக வடக்கு மற்றும்  கிழக்கு ஜெர்மனியென இரண்டாகப் பிரிக்கப் பட்ட இந்த நாட்டினை, விண்வெளியிலிருந்து பார்த்தால் கூட, நம்மால் தனித் தனியே அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஏனெனில், இரு பகுதிக்கும் வெவ்வேறு வண்ணங்களிலேயே தெரு விளக்குகள் பயன் படுத்தப்படுகின்றன.  இதனாலையே இந்த நாட்டினை, இரவில் விண்ணிலிருந்து பார்த்தால் கூட மிகவும் வித்தியாசமாகக் காட்சி அளிக்கும்.

You have to wait 80 seconds.

FULL PROJECT

Post a Comment

0 Comments