இன்று நாம் தீபாவளி தமிழர் பண்டிகையா? என்பதைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
தீபாவளி வரப் போகிறது எல்லோரும் புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் இதெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு தீபாவளியைக் கொண்டாடத் தயாராகக் காத்திருப்பீர்கள். உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி மட்டும் தான். இந்தியா போன்ற பல்வேறு மொழி, மதங்கள், பண்பாடு, கலாச்சாரம் போன்றவைகளைக் கொண்ட ஒரு நாட்டில், அனைவராலும் ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றால், அதுவே ஒரு ஆச்சரியமான மிகப் பெரிய விஷயம் தான்.
என்ன தான் எல்லோரும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடினாலும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு வேறு வேறு காரணங்களுக்காகத் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாகவே, வட இந்தியர்களும், தென்னிந்தியர்களும் முழுக்க, முழுக்கவே, வேறு, வேறு காரணங்களுக்காகத் தான் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள். நாம் ஒரு வட இந்தியரிடம், நீங்கள் தீபாவளி எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டால், அதற்கான பதிலை அவர்கள் யோசிக்காமல் சொல்வார்கள். இதுவே நம்ம ஊரில் சென்று, நம் தமிழர்களிடம் கேட்டால், யாருக்குமே சரியான பதில் தெரியாது. அப்படி அவர்கள் பதில் கூறினாலும், அது நம்பக்கூடிய பதிலாக இருக்காது. நீங்களே உங்கள் பாட்டியிடமோ, அம்மாவிடமோ கேட்டுப்பார்கள் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
இந்தப் பதிவில் தீபாவளி தமிழர்கள் பண்டிகையா? இந்தியாவில் இருக்கும் மக்கள் ஏன், வேறு வேறு காரணங்களுக்காகத் தீபாவளி கொண்டாடுகிறார்கள்? தீபாவளியைப் பற்றித் தமிழ் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? தீபாவளி பற்றிய குறிப்புகள் சங்க கால நூல்களில் இருக்கிறதா போன்ற சுவாரஸ்யமான தகவல்களைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்தத் தீபாவளியை பற்றிப் பார்க்கலாம். இந்தத் தீபாவளிப் பண்டிகை உலகம் முழுவதும் இருக்கின்ற இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகை. அதில் தமிழர்களும் அடங்கும். இந்துக்கள் மட்டுமல்லாமல், சமணர்களும், சீக்கியர்களும், பௌத்தர்களும் இந்தத் தீபாவளியை ஃபெஸ்டிவல் ஆப் லைட் என்ற பெயரில் கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, வட இந்தியாவில் இந்தத் தீபாவளி கிட்டத் தட்ட ஐந்து நாட்கள் கொண்டாடப்படும்.
- இந்த ஐந்து நாட்களில் முதல் நாள் தாந்திராஸ் என்றும்,
- இரண்டாவது நாள் நரக சதுர்த்தசி அதாவது, நரகாசுரன் இறந்த நாள்,
- அதன் பிறகு, மூன்றாவது நாள் லக்ஷ்மி பூஜா என்று கொண்டாடுவார்கள், அது தான் உண்மையான தீபாவளி.
- நான்காவது நாள் அண்ணாகட் அதாவது, பாலிபிரத்திபடா என்று சொல்வார்கள்.
- ஐந்தாவது நாள் பாய் துஜ் அதாவது, சகோதரர்கள் தினமாகக் கொண்டாடுவார்கள்.
ஆனால், தமிழ்நாடு உட்பட பெரும்பாலான இடங்களிலும் தீபாவளி பண்டிகை என்பது ஒரு நாள் பண்டிகையாகத் தான் இருக்கும். இந்தத் தீபாவளி பண்டிகையை இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவரும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகிறார்கள் என்று கூறினேன். என்னென்ன காரணங்கள் என்று இப்பொழுது பார்க்கலாம்.
இதில் முதல் காரணம் என்னவென்றால், பொதுவாகத் தீபாவளி பண்டிகை எப்பொழுது வரும் என்றால், தசரா என்ற ஒரு பண்டிகை முடிந்து, கிட்டத் தட்ட 20 அல்லது 21 நாட்கள் கழித்து தான் தீபாவளி பண்டிகை வரும். இந்தத் தசரா பண்டிகை என்னவென்றால், இலங்கையில் நடந்த போரில் இராமன், இராவணனைக் கொன்ற நாள் தான் இந்தத் தசரா பண்டிகை. அந்தத் தசரா பண்டிகை அன்று என்ன செய்வார்கள் என்றால், இராவணனின் உருவ பொம்மை எரித்து, வடநாட்டில் இன்றும் கொண்டாடிக் கொண்டு தான் இருப்பார்கள்.
இப்படி இலங்கையில் நடந்த போரில், இராமன், இராவணனை வீழ்த்தியப் பிறகு, நடந்தே அயோத்திக்கு சென்ற நாள் தான் தீபாவளி. அன்று அயோத்தி மக்கள் பட்டாசு வெடித்து, விளக்குகளை ஏற்றி, இராமனை வரவேற்று இருக்கிறார்கள். அந்த நாளைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் ஒரு சில பேர் என்ன கூறுகிறார்கள் என்றால், 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து இராமன் திரும்பவும் அயோத்திக்குச் சென்ற நாள் தான் தீபாவளி என்று கூறுகிறார்கள்.
இது மட்டுமில்லாமல், தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற ஒரு சில மாநிலங்களில் தீபாவளி எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்றால், நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் சத்தியவதம் என்ற அவதாரம் எடுத்துக் கொன்ற நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலும் தமிழர்களாகிய நாம் அந்தக் காரணத்துக்காகத் தான் தீபாவளி கொண்டாடி வருகிறோம். அது மட்டுமில்லாமல் சமணர்கள் எதற்குத் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றால், அவர்களின் கடவுளான மகா வீரர் மோட்சம் அடைந்த நாள் தான் தீபாவளி.
இதே போல், சீக்கியர்கள் எதற்குத் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றால், அவர்களின் மதக் கடவுளான குரு கர்கோவிந்த் என்பவரை முகலாயர்களின் சிறையிலிருந்து விடுவித்த நாளைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். சரி, காரணங்கள் எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது? இதில் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? உண்மையிலேயே இந்தத் தீபாவளிக்கு பின்னால், ஒரு மிகப் பெரிய இன அரசியல் ஒன்று இருக்கிறது.
அதாவது, வட நாட்டவர்கள் தமிழ் மன்னனான இராவணன், இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளி. ஆனால், தமிழர்கள் எப்படி தங்களுடைய மன்னர் இறந்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவார்கள். இதற்காக ஆரிய பிராமணர்கள், தமிழர்களுக்காகவே புதியதாக ஒரு கதையைக் கட்டமைத்தார்கள். அவர்கள் கூறிய கதையைக் கேட்டால் மிகவும் காமெடியாக இருக்கும்.
அதாவது, முன்னொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியைப் பாய் போலச் சுருட்டி கடலுக்கு அடியில் ஒளித்து வைத்து விட்டானாம். உடனே, பிரம்மா சென்று விஷ்ணுவிடம் முறையிட்டாராம். விஷ்ணு பன்றியைப் போல மாறி, அந்த அரக்கனிடம் சண்டை போட்டு அவனைக் கொன்று பூமியை மீட்டெடுத்தாராம். இதனால் பூமிக்கு பன்றிபோல் இருக்கும் விஷ்ணுவின் மீது காதல் வந்ததாம், இப்படி அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு, உறவு கொண்டதால் பிறந்த குழந்தை தான் நரகாசுரனாம். இந்த நரகாசுரன் கடுமையான தவம் செய்து, தன் அம்மாவைத் தவிர, வேறு யாரும் தன்னை கொள்ள முடியாது என்ற ஒரு வரத்தை இறைவனிடம் வாங்கினானாம். இப்படி வரம் வாங்கியதால் தன்னை யாரும் கொள்ள முடியாது என்ற இறுமாப்பில் எல்லோரையும் கொடுமைப் படுத்திக் கொண்டே இருந்தானாம்.
இதனால் மீண்டும் விஷ்ணு கிருஷ்ணராகவும், பூமா தேவி சத்தியபாமாகவும் அவதாரம் எடுத்து, அதாவது, நரகாசுரன் அம்மாவாக அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்றாராம். அது தான் தீபாவளியாம். இந்தக் காமெடி கதையைத் தான், ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்கள் கொண்டாடக்கூடிய தீபாவளிக்கு கதையாகச் சொன்னார்கள். இதெல்லாம் நம்புவது மாதிரியாக இருக்கிறது. ஒரு சராசரி அறிவுள்ள மனிதனுக்கு கூட, இந்தக் கதையைக் கேட்டபிறகு பல்வேறு கேள்விகள் எழலாம்? அதாவது, உருண்டையாக இருக்கும் பூமியை எப்படிப் பாய் போலச் சுருட்ட முடியும்? அப்படியே சுருட்டினாலும், பூமிக்குள்ளே இருக்கும் கடலுக்குள் எப்படி பூமியை ஒளித்து வைக்க முடியும்? அப்படியே ஒளித்து வைத்தாலும், ஒரு பூமியும் பன்றியும் எப்படி உறவு வைத்துக் கொள்ள முடியும்? அப்படியே உறவு வைத்தாலும், எப்படியொரு மனிதன் அதாவது, அரக்கன் குழந்தையாகப் பிறக்க முடியும்?
இதற்கான பதில் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை? இதற்கான கேள்வியை ஏன், நம் முன்னோர்கள் அவர்களிடம் திருப்பிக் கேட்கவில்லை என்றும் தெரியவில்லை? உண்மையிலேயே, தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களை எதிர்த்துப் போரிட்ட தமிழர்களின் தோல்வியைக் குறிக்கும் ஒரு பண்டிகை தான். அவர்களைப் பொறுத்த வரைக்கும் தமிழர்கள் தான் அரக்கர்கள் அதாவது அசுரர்கள். ஒரு காலக் கட்டத்தில், இந்த இந்தியா முழுவதும் நம் தமிழர்கள் தான் வாழ்ந்து வந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் சிந்து சமவெளியில் டி.என்.ஏ. மூலம் கிடைத்து இருக்கின்றன.
இப்படி இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்களின் நிலப் பகுதிகளை இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். நிலங்களை மட்டுமில்லாமல், நம்முடைய மொழி, பண்பாடு போன்றவற்றையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். இதை எதிர்த்துப், பல தமிழ் மன்னர்கள் போரிட்டு இறந்தார்கள். இந்த வரிசையில் நான் ராமன் என்னும் ஆரிய மன்னன் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்து, பல சூழ்ச்சிகளால் இராவணனைக் கொன்றான். இராவணன் தான் இந்தியா முழுவதும் இருந்த சிறு, சிறு அரசுகளுக்கு ஒரு பேரரசராக இருந்தவர்.
இதனால் இராவணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் இனம் மொத்தத்தையுமே அடிமைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஆரியர்கள், தமிழர்களை அரக்கர்கள், அசுரர்கள் என்று சித்தரிக்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பிறகு தான், இந்து மதமும், அதன் சாதிக் கொடுமைகளும் தமிழ் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. ஆண், பெண் இருவரும் சமம் தான் என்று ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த தமிழர்களின் மத்தியில், ஆண் தான் உயர்ந்தவர் என்ற கருத்தை ஆரியர்கள் தான் விதைத்தர்கள். இதனால் தான் கீழடி மற்றும் சிந்து சமவெளி நாகரிகங்களில் எந்த வித மத அடையாளங்களோ அல்லது தெய்வத்தின் சிலைகளோ கிடைக்கவில்லை. இதே போல் கீழடியில் கிடைத்த ஒரு தங்கக் கட்டியில் கூடக் கோதை என்ற ஒரு சாதாரண பெண்ணின் பெயர் தான் எழுதப்பட்டிருந்தது. இதே போல் அதிகமான பெண்பால் புலவர்களும் இருந்தது தமிழ் மொழியில் தான். இப்படி நம்மைத் தோற்கடிக்கப்பட்ட தினத்தைத் தான் அவர்கள் தீபாவளியாக மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள். நாமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறோம்.
ஒவ்வொரு வருடமும் இராவணனின் உருவ பொம்மையை எரித்து, அவர்களின் வஞ்சத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல், நிஞாயம் கற்பிக்கும் வகையில், இராவணன் கெட்டவர், சீதை கடத்திவிட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே சீதை, இராவணனின் மகள் தான் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. சரி, இதைப் பற்றிப் பேசினால், நாம் பேசிக் கொண்டே செல்லலாம். உண்மையிலேயே இராவணனை கெட்டவன் என்று நம்மை நம்பு வைப்பதன் மூலமாக, நம்மைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளி, அதன் பிறகு, அவர்களின் பேச்சைக் கேட்க வைப்பது தான் ஆரியர்களின் சூழ்ச்சி.
இதே போல் 15ஆம் நூற்றாண்டிலிருந்து தான், அதாவது, விஜயநகரப் பேரரசு காலத்திலிருந்து தான் தீபாவளி தமிழ் நாட்டில் பெருமளவு கொண்டாடப்பட்டது. இராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் கூடத் தீபாவளி கொண்டாடப் பட்டதற்கான எந்த ஒரு வரலாறும் கிடைக்கப் பெறவில்லை. இதே போல் சங்க கால நூல்களில் கூடத் தீபாவளியைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. அதாவது தமிழ் நூல்களில். சமஸ்கிருத நூல்களில் மட்டும் தான் தீபாவளி கொண்டாடியதற்கான குறிப்புகள் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் பல்வேறு தமிழ் அறிஞர்களான பாரதிதாசன், மா.ராசமாணிக்கனார், மறைமலை அடிகள், கா. சுப்பிரமணியன், கி. பரந்தாமன், பெரியார் போன்ற பல அறிஞர்கள், தீபாவளி தமிழர் பண்டிகை கிடையாது.
தமிழர்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக ஆரியர்கள் கொண்டாடப்படுவது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தோம் என்றால் நமக்கே உண்மை புரியும். உண்மையான தமிழர்கள் பண்டிகை எல்லாமே கொஞ்சம், கொஞ்சமாக, மறைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாகத், தைப்பொங்கல், தைப்பூசம், ஆடிப் பெருக்கு, கார்த்திகை திருநாள், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்றவர்கள் தான் நம் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய பண்டிகைகள்.
ஆனால் தமிழர்களை மூளைச் சலவை செய்து, தீபாவளி பண்டிகையை முக்கிய பண்டிகையாகவும், மற்ற பண்டிகளுக்கு ஏதோ பேருக்குக் கொண்டாடும் பண்டிகையாக மாற்றி விட்டார்கள் ஆரியர்கள். இந்த உலகத்திலேயே தன் இனத்தின் வீழ்ச்சியையே, வெகுவிமர்சையாகக் கொண்டாடுவது நம் தமிழ் இனமாகத் தான் இருக்க முடியும். இனி மாற வேண்டியது நாம் தான். இதைத் தான் பாரதிதாசன், தீவாளியா என்ற பாடலின் மிகவும் கடுமையாகச் சொல்லி இருப்பார்.
நரகனைக் கொன்ற நாள் நல்விழா நாளா?நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா தீயனா? அசுரன் என்றவனை அறைகின்றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே? இப்பெயரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை ராக்காதர் என சிலர்? பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவை களை நாம் என்ன வேண்டும்? என்னா ததையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்புகள் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொல வேண்டாம்? ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது உனக்கு எது தெரியும் உள்ள நாளெல்லாம் நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? என்று கேட்பவனை ஏளடா குழந்தாய் உனக்கு எது தெரியும் உரைப்பாய் என்று கேட்கும் நாள் மடமை கிழிக்கும் நாள் அறிவை ஊட்டும் நாள் மானம் உணரும் நாள் இந்நாள் தீவா வளியும் மானத் துக்குத் தீவாளி ச்சிஎன்று விடுவரே என்று பாரதிதாசன் கூறியுள்ளார்.
0 Comments