ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தில் அமைந்திருக்கும் நாடு தான் நார்வே. உலக அமைதியை விரும்பும் நாடுகளில் நார்வேயும் ஒன்று. அந்த நாட்டைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றித் தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
அதிக அளவிலான கடல்நீரற்ற பகுதிகளையும், மலைகளையும் கொண்டுள்ள பகுதி தான் நார்வே. நாட்டின் மொத்த பரப்பளவில் ஐந்தில் மூன்றில் பங்கு மலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. உலக வரைபடத்தில் அகலம் குறைவாகவும், நீளம் அதிகமாகவும் காணப்படும் நார்வே. உலகிலேயே, மிக நீண்ட கடற்கரையைக் கொண்டது. மொத்தம் 25 ஆயிரம் கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட இதன் கடற்கரை, உலகின் பசுமையான மலைக் காடுகளையும், பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது.
ஸ்வீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இதன் நில எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. ஐரோப்பிய கண்டத்திலேயே மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்ட நாடும் இது தான். மொத்தம் 94 சதவீதம் கிறிஸ்தவர்கள் மட்டும் வாழும் இங்கே, மொத்த மக்கள் தொகை வெறும் 50 லட்சம் தான். மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட நீர்வளம் அதிகம் உள்ள இந்த நாடு, சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாகப் பாறை எண்ணெய், பெட்ரோலியம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.
ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு மனித இனம் வாழ்ந்து வந்ததாக அகழ்வாராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. கிட்டத் தட்ட பூமியின் வட துருவ எல்லையில் அமைந்திருக்கும் நார்வே குளிர்காலத்தில் கடுமையான உறை பனியால் சூழ்ந்து இருக்கும். பூமியின் மைய 23 டிகிரி சாய்வாகச் சுற்றிக் கொண்டிருப்பதால், குளிர்காலங்களில் பெரும்பாலும் இருள் சூழ்ந்தே காணப்படும். இதற்கு நேர் மாறாக, வெயில் காலங்களில் நார்வேயின் வடக்கு பகுதிகளில், நள்ளிரவு நேரத்திலே சூரியன் தென்படும்.
இதனால் தான் நார்வே நள்ளிரவிலும், சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கே கடுமையான பருவநிலை, நீர் வளம் போன்றவை அதிகமாக இருந்தாலும், மண் வளம் இல்லாத காரணத்தால் விவசாயம் இங்குக் குறைவு தான். அதனால் உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை பெரும்பாலும், இறக்குமதியை தான் நம்பி இருக்கிறது நார்வே. ஆனால், கடல் வளம் அதிகமாக உள்ளதால், உலகிலேயே சால்மன் மீன்களை அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. நார்வேயில் இருக்கும் அனைத்து சிறகைகளின் அறைகளிலும் இன்டர் நெட் வசதி உண்டு.
இங்கே இன்டர்நெட் பயன்பாடு என்பது 97 சதவீதமாக இருக்கிறது. 12 வயதுக்கு குறைவானவர்களிடம், விளம்பரம் செய்வது அங்கே சட்ட விரோதம். அதே போல் 18 வயதுக்கு பிறகு, பெற்றோர்களைப் பிரிந்து தனித்து வாழ்வது அங்கே கட்டாயம். நார்வேயில் வாழும் தமிழர்களுக்கு, இது கட்டாயம் கடிமான விஷயம் தான். இதனை மையப்படுத்தி, நார்வேயில் தயாரிக்கப்பட்டு வெளியான, வெளியான தமிழ் படம் தான் "நயன் சி ஆஸ்லோ" உலகிலேயே மிக நீளமான நீருக்கடியில் அமைந்த சுரங்கப் பாதை நார்வேயில் தான் உள்ளது. 237 மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் லேத்தல் சாலை சுரங்கப் பாதை தான் உலகிலேயே மிக நீளமான சுரங்கப் பாதையும் கூட. அதன் நீளம் 24.5 கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உலகில் கப்பல்களுக்கான முதல் சுரங்கப்பாதை அமைக்கப் போவதும் நார்வே தான். கடலோரப் பள்ளத்தாக்குகள் அதிகம் உள்ளதால், கப்பல் போக்குவரத்து விபத்துகளைத் தடுப்பதற்காக, 1.7 கிலோ மீட்டர் அளவிற்கு மலையைக் குடைந்து இந்தச் சுரங்க நீர் வழித் தடம் அமைக்கப்பட உள்ளது. இதனால் பல நூறு கிலோ மீட்டர்கள் கப்பல்கள் சுற்றிச் செல்வது தடுக்கப்படும். முழுமையாகக் கட்டி முடிக்கக் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள்வரை ஆகும் என்பதால், 2029 இல் இந்தச் சுரங்கப் பாதையில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க, திட்டமிட்டு இருக்கிறது நார்வே அரசு. நார்வே நாம் பார்த்து, வியப்படையக்கூடிய பல விஷயங்களைக் கொண்டிருக்கிறது. அதன் வட துருவப் பகுதிகளில் அமைந்திருக்கும் துறைமுகங்கள், தேவாலயங்கள், நகரங்கள், மலைப் பகுதிகள், நள்ளிரவில் சூரியன் உதிக்கும் காட்சிகள் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.
நார்வேயில் பெர்கன் நகரத்தில் உள்ள பிரைஜென் என்ற துறைமுகம், யுனெஸ்கோ பாதுகாத்து வரும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. 700 வருடங்கள் பழமையான பொருட்கள், ஓவியங்கள் என இங்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கே இருக்கும் சில அறைகளில் அமானுஷ்யத்தன்மை மாறும்பொழுது, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்றும், கடல் அரக்கன் தோன்றிக், கப்பல்களைக் கவிழ்த்து விடுவான் என்ற நம்பிக்கை பல வருடங்களாக மாளுமிகளிடமிருந்து வந்திருக்கிறது. பானா என்ற பகுதியில் அமைந்திருக்கிறது பேண்ட் ஆப் என்ற தேவாலயம், மிகவும் பழமையான ஸ்டேவ் எனப்படும், மிகப் பழமையான தேவாலய வடிவங்களைக் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் இவை, மரத்தால் கட்டப்பட்டவை. ஐரோப்பியாவின் பெரும்பாலான பழமையான தேவாலயங்கள் அனைத்தும் இந்த வடிவத்தில் தான் அமைந்திருக்கிறது.
சுற்றிலும் பைன் மரங்களும், இயற்கை சூழலும் தேவாலயத்தின் அழகை இன்னும் மிளிரச் செய்யும் விதமாகவே அமைந்திருக்கிறது. மரத்தால் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் நான்கு புறமும், கைகள் போன்ற நீண்ட அமைப்புடன் காணப்படுகின்றன. இதனைப் பற்றிய வரலாறுக் கதைகளும், குறியீடுகளும் ஐரோப்பிய வரலாற்று தேவாலயச் சரித்திரத்தில் எழுதப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான பொருட்கள், பெரும்பாலும் கப்பல்கள், படகுகள் மூலமாகவே கிடைக்கின்றன. நார்வே முழுவதும் கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், தரைப் போக்குவரத்தை விட, நீர்வழிப் போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பி இருக்கிறது. நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கிறது "ட்ராம்சோ" என்ற நகரம். இந்தப் பகுதி தான் நள்ளிரவில் சூரியன் உதிக்கும் இடம். வட துருவக் கடலில் உள்ள சுறா மீன் கூட்டம், சுற்றிலும் படர்ந்த மழை காடுகள் எனப் பூலோக சொர்க்கமாகவே காட்சியளிக்கிறது நார்வே.
Shake Effect Download
0 Comments