Top 10 most beautiful countries in the world | உலகின் முதல் 10 அழகான நாடுகள்

இன்று நாம் உலகின் முதல் 10 அழகான நாடுகளைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். 

 

 

பத்தாவதாக எந்த நாடு இருக்கிறது என்றால், சுவிட்சர்லாந்து. இயற்கை வளங்களுடன் சேர்த்து,  இயற்கை எழில் கொஞ்சும் மிக மிக அழகான நாடு என்று பலர் சொல்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் இருக்கும் மலைகள் மற்றும் ஏரிகள் சர்வதேச நாடுகளின் கவனத்தின் பங்கிற்கு தகுதியானவை என்று சொல்கிறார்கள். சுவிட்சர்லாந்து ஒரு அமைதியான மற்றும் நட்புறவான நாடு என்று சொல்லப்படுகிறது. ஸ்விட்சர்லாந்திருக்கு வருடத்திற்கு, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்களாம். 


அடுத்து ஒன்பதாவது இடத்தில் இருக்கும் நாடு நியூசிலாந்து தான். நியூசிலாந்து மிகவும் அழகான நாடு என்று சொல்லப்படுகிறது. மிகப் பெரிய உயரமான மலைகள், அதிகமான இயற்கை காட்சிகள், டர்கைஸ் ஏரிகள் என்று இப்படி அதிகமான இயற்கை காட்சிகள் நியூசிலாந்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நியூசிலாந்திற்கு ஆயிரம் மைல் தொலைவில் அதாவது, 1600 கிலோ மீட்டர் தூரத்தில் தான் தெற்கு ஆஸ்திரிலியா உள்ளது. இது ஒரு தீவு மாதிரியான நாடு. நியூசிலாந்து மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் தான். இங்கு 48 லட்சத்து 26 ஆயிரத்து 135 மக்கள் வாழ்கிறார்கள். 


அடுத்ததாக எட்டாவது இடத்தில் இருக்கும் நாடு எதுவென்றால் தென்னாப்பிரிக்கா தான். ஆப்பிரிக்க கண்டம் தான் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டம். அதுமட்டுமில்லாமல், மக்கள் தொகை அதிகம் கொண்ட கண்டமும் இது தான். இந்த நாட்டின் குடியரசைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். இவர்கள் என்ன குறிக்கோள் வைத்திருக்கிறார்கள் என்றால் வேற்றுமையில் ஒற்றுமை. தென் ஆப்ரிக்காவின் தலைநகரம் கேப் டவுன். இந்த நாட்டின் மக்கள் 11 மொழிகள் பேசுகிறார்கள். இந்த நாட்டில் நான்கு இன மக்கள் வாழ்கிறார்கள். அதாவது, 79.3  சதவீதம் கருப்பின மக்களும், 9 சதவீதம் வெள்ளை இன மக்களும், 9 சதவீதம் மற்ற இன மக்களும், 2.6 சதவீதம் ஆப்சியர்களும் இருக்கிறார்கள். 


அடுத்ததாக ஏழாவது இடத்தில் இருக்கும் நாடு எதுவென்றால் சீனா. உலகின் நான்காவது மிகப் பெரிய நாடு தான் சீனா. சீனாவில் கால நிலை எப்பொழுதும் மிகவும் அழகாக இருக்கும் என்று சொல்கிறார்கள். சீனாவின் தொட்டில் என்று அழைக்கப்படுவது எல்லோரிகா. இங்குத் தான் "தி கிரேட் வால்" என்று அழைக்கப்படும், உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் இருக்கிறது. சீனாவில் தான் மிகவும் அழகான "லை ரிவரும்" இருக்கிறது என்று சொல்கிறார்கள். 


அடுத்தது ஆறாவது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில். பிரேசில் நாடு ஒரு இயற்கை அழகு நிறைந்த நாடு என்று சொல்கிறார்கள். பிரேசில் நாட்டின் கலாச்சாரமும் மிகவும் நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பிரேசில் தான் உலகத்தின் ஐந்தாவது மிகப் பெரிய நாடு என்று சொல்லப்படுகிறது. பிரேசில் நாட்டில் 26 மாநிலங்கள் உள்ளது. பிரேசில் நாட்டின்  தாய் மொழி போர்ச்சுகீசியம். இது தான் அதிக மக்களால் பேசப்படுகிறது. தென் அமெரிக்கா கண்டத்தின் ஒரு தனித்துவமான நாடு என்றால் அது பிரேசில் தான். பிரேசிலில் 200 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டில் அதிகமான கலாச்சார முறைகளும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். 

 

அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் நாடு இத்தாலி. தெற்கு மத்திய ஐரோப்பில் இருக்கிறது. இத்தாலி ஒரு படகு வடிவத்தில் இருக்கும் நாடு என்று சொல்லப்படுகிறது. இத்தாலி மிகவும் பழமையான நாடுகளில் ஒன்றாகும். அதாவது, 3000 ஆண்டுகள் பழமையான நாடு தான் இத்தாலி. இத்தாலியின் பட்டப் பெயர் என்னவென்றால், பெல்க்பீஸ். இத்தாலி நாட்டின் மக்கள் தொகை 60 கோடியே 4 லட்சத்து 64 ஆயிரத்து 826 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இத்தாலி அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடாகக் கருதப்படுகிறது. 


அடுத்ததாக நான்காவது இடத்தில் எந்த நாடு இருக்கிறது என்றால் அயர்லாந்து. அயர்லாந்து தான் சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், அயர்லாந்து நாட்டின் காலநிலை தான். மிகவும் அழகான "சாண்டி பீச்" "ராக்கி கோஸ்ட் லைன்" ஆகியவைகள் அயர்லாந்து நாட்டில் தான் இருக்கின்றன. அயர்லாந்து தான் உலகத்தில் இரண்டாவது மிகப் பெரிய கிழக்கு தீவு என்று சொல்லப்படுகிறது. அயர்லாந்தில் மிகவும் பாதுகாப்பான இடம் எதுவென்றால், ரோஸ் காமன் மற்றும் லாங்பூர். இங்குத் தான் குற்றங்கள் எதுவும் நடக்காமல் மிகவும் பாதுகாப்பான பகுதிகள் என்று சொல்லப்படுகிறது. 


அடுத்ததாக மூன்றாவது இடத்தில் எந்த நாடு இருக்கிறது என்றால் இந்தியா. நம் இந்தியாவை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக் கொண்டே போகாலாம். அந்த அளவிற்கு மிகச் சிறந்த மற்றும் இயற்கை வளங்கள் கொண்ட நாடு. சுற்றுலாப் பயணிகளுக்கு, மிகச் சிறந்த தேர்வாக நம் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் அவ்வளவு அதிசயங்கள் இருக்கிறது.  இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. இந்தியா தோராயமாக, 2 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹால் நம் இந்தியாவில் உள்ள ஆக்ராவில் தான் இருக்கிறது. அது மட்டுமில்லாமல், கால நிலைகள் கூட மிகவும் அழகாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 


அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு என்னவென்றால் யுனைடெட் ஸ்டேட்ஸ் அமெரிக்கா. அமெரிக்காவில் காலநிலை எப்பொழுதும் மிகவும் அழகாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, இரண்டாவது அதிக பேர் விரும்பும் இடமாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நகரங்கள் எல்லாம் மிகவும் தனித்துவமாக மற்றும் அத்தலட்டிக்காக இருக்கும். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நியூ யார்க் மிகவும் அழகாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அமெரிக்காவில் 50 மாநிலங்கள் இருக்கிறது.  அமெரிக்கா 244 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. 


அடுத்ததாக முதலிடத்தில் எந்த நாடு இருக்கிறது என்றால் கனடா. கனடா மிகவும் அழகான நாடு என்று அனைவராலும் சொல்லப்படுகிறது. ஏனென்றால், கனடாவில் இருக்கும் காடுகள், நகரங்கள் என்று அனைத்தும் மிகவும் அழகாக இருக்கும். கனடாவில் மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள், ஏரிகள், குளங்கள் என்று நிறையவே இருக்கிறதாம். கனடாவில் 60% ஏரிகள் தானாம். அதுமட்டுமில்லாமல், கனடா ஒரு சிறந்த கட்டிடக்கலைக்கு உதாரணமாக விளங்குகிறது. கனடா அமெரிக்காவின் வடக்குப் பகுதி நாடு என்று சொல்கிறார்கள். கனடாவின் பட்டப் பெயர் என்றால் "கிரேட் ஒயிட் நார்த்".

You have to wait 30 seconds.

BEATMARK

Post a Comment

0 Comments