ஆஸ்திரேலியா பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
ஆஸ்திரேலியா, கங்காருகளின் தேசம் என அழைக்கப்படும் இது, இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல்களின் கூட்டமைப்புப் பகுதியில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கண்டம். இதற்கு எந்த நாட்டுடனும் நில எல்லைகள் இல்லாததால், உலகில் இருக்கும் மிகப் பெரிய தீவு நாடும் இது தான்.
தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிக்கான ஆஸ்திரேலியா பற்றிய, சில முக்கியமான தகவல்களைத் தான், நாம் இங்கே காண இருக்கின்றோம். "உலகின் மிகச் சிறிய கண்டமான இது, பரப்பளவில் ஆறாவது மிகப் பெரிய நாடாகவும் இருக்கின்றது". "உலக நாடுகளின் பரப்பளவுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய நாடாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை என்பது மூன்று கோடிக்கும் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது".
மக்கள் அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பதனால், பிற நாட்டைச் சேர்ந்தவர்களின் குடியேற்றங்கள் இந்த நாட்டில் மிகவும் சுலபமான ஒன்று. எனவே தான் கடல் கடந்து வாழும் தமிழர்கள் இங்கே அதிகம் வசிக்கின்றார்கள். "உலகின் மிகப் பழமையான பழங்குடியின மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று". "கிட்டத்தட்ட 42 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள், இன்னும் இங்கு வாழ்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன".
கற்காலத்திற்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், இன்றளவும் வெளி உலகமே தெரியாத பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், இவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்ற பழங்குடி இனத்தவர்களிடமிருந்து, மிகவும் வேறுபட்டவைகளாக இருக்கின்றன என்றும் அறியப்படுகின்றன. "பதினாறாம் நூற்றாண்டுகளில் தான், ஆஸ்திரேலிய கண்டமானது ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது". அவர்களின் வருகைக்குப் பின்னர் தான், "நியூ சவுத் வேல்ஸ்", "காஸ்மேனியா" போன்ற புதிய குடியேற்றங்கள் உருவாகி, இன்றைய நாகரிக மனிதர்கள் வாழும் இடமாக மாறியது இந்த இடம். "17 ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்த நாடு, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா எனப் பல கிளை ஆட்சி அமைப்புகளைக் கொண்டிருந்தது".
"இரண்டாம் உலகப் போர்வரை, ஐரோப்பியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த ஆஸ்திரேலியா, பிறகு அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டது". பிறகு உலகின் பல பகுதிகளிலிருந்தும், உலக மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஆரம்பித்தார்கள். "75 லட்சம் சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் பெரும் பகுதியானது பாலைவன நிலங்களைக் கொண்டது". "அதே சமயம் 34 ஆயிரத்து 218 கிலோ மீட்டர்கள் தூரம், மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட நாடும் இது தான்".
"உலகின் மிகப் பெரிய மலைப்பகுதிகளை கொண்டிருக்கும், ஆஸ்திரேலியாவின் "ஆகுஸ்டஸ்"என்ற மழையானது, உலகின் மிகப்பெரிய கற்பாறையாகவும் கருதப்படுகின்றது". "ஆஸ்திரேலியா கொண்ட மனது மிகவும் தட்டையான அமைப்பைக் கொண்டது". "அது மட்டுமில்லாமல் மனிதர்கள் வாழும் கண்டங்களில் மிகவும் வறட்சியான கண்டமும் இது தான்". "இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் நாட்டின் தென் கிழக்கு கடற்கரை பகுதிகளில் தான் வாழ்கிறார்கள்". "நாட்டின் வடக்குப் பகுதியானது வெப்ப மண்டலப் பகுதியாகும்". இங்கே பெரும்பாலும் வறண்ட புல்வெளிகளும், பாலைவனங்களுமே காட்சியளிக்கின்றன.
"ஆஸ்திரேலியாவில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம்". பிற நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு, உள்ளூர் இடங்களில் ஏற்பட்ட வறட்சி இதன் காரணமாக நீர்க் கட்டுப்பாடு என்பது அந்த நாட்டில் நடைமுறையில் இருக்கின்றது. "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட, அதிக அளவு குடியேற்றத்தால், கிட்டத்தட்ட ஏழு ஆஸ்திரேலியர்களில், மூன்று பேர் வெளிநாட்டவர்கள் என்ற விகிதம் உருவானது". "ஆங்கிலம் இங்கே தேசிய மொழியாக அமைந்திருக்கின்றது". இன்றைய சூழ்நிலையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆங்கிலம் பேசும் இந்த நாட்டில், சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற மொழிகள் வழக்கத்தில் இருக்கின்றன.
"இங்கே குடியேறியவர்களில், பெரும்பாலானவர்கள் இரண்டு மொழிகள் பேசுபவர்களாக இருக்கிறார்கள்". "ஐரோப்பியர்கள் குடியேறிய காலத்தில், கிட்டத்தட்ட 200 முதல் 300 மொழிகள்வரை பேசும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது". இவற்றில் 70 மட்டுமே இன்று வழக்கத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் கிறிஸ்தவர்களேப் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். "உலகிலேயே தோல்ப் புற்றுநோய் அதிகம் உள்ள நாடு ஆஸ்திரேலியா தான்".
"உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளில், அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கின்றார்கள்". "அதே வேளையில் எய்ட்ஸ் நோய் வெற்றிகரமாகப் பரவாமல் தடுத்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று". ஆஸ்திரேலியாவிற்கு 1970 ஆம் ஆண்டிலிருந்து தான் தமிழர்கள் இடம் பெயர ஆரம்பித்தார்கள். "1991 ஆம் வருடம் 11,376 ஆக இருந்த தமிழர்களில், 60% பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது".
"இன்றைய கணக்குப்படி கிட்டத் தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இங்கே தான் வாழ்கிறார்கள்". "இவர்கள் பெரும்பாலும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தான் வாசிக்கின்றார்கள்". "ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காகக் கங்காரு அறியப்படுகின்றது". "இதன் சிறப்பே ஆஸ்திரேலியாவைத் தவிர, உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இது காணப்படுவதில்லை என்பது தான்". "ஆஸ்திரேலியாவின் தேசிய முத்திரையில் இடம் பெற்றிருக்கும் பெருமை விலங்குகளில் கங்காருவிற்கும், பறவைகளில் ஈமுவிற்கு மட்டுமே உண்டு".
ஏனென்றால், இரண்டிற்கும் பின்னோக்கி நடக்கத் தெரியாது என்பதால், முன்னேற்றத்திற்கான அடையாளமாக இவை அரச முத்திரையில் இடம் பெற்று இருக்கின்றன. "ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்". கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் பலம் நாம் எல்லோரும் அறிந்தது தான். இது தவிர, பல சுற்றுலாத் தலங்களையும் கொண்டு இருக்கிறது ஆஸ்திரேலியா.


0 Comments