Did you know these facts about England

 இங்கிலாந்து பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா? 



இன்றைய நவீன இங்கிலாந்து பற்றிய சில சுவாரசியமான தொகுப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். 


ஐக்கிய நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நிலப் பரப்பையும், ஆட்சி அதிகாரத்தையும், கொண்டிருக்கும் நாடு தான் இங்கிலாந்து. அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் இது, ஐரோப்பிய நாடுகளிலேயே மிகுந்த செல்வாக்கும், அதிகாரமும் கொண்டிருக்கும் தேசம். இங்கிலாந்து நாட்டில் தனி நாடாளுமன்றம் என்று எதுவும் கிடையாது. "ஸ்காட்லாந்து", "வடக்கு அயர்லாந்து", "வேல்ஸ்" என மற்ற நாடுகளின் கூட்டமைப்பையும் சேர்த்து "யுனைடெட் கிங்டம்" என்ற முடியாட்சி அமைப்பினை கொண்டிருக்கிறது இது. 


இன்றும் பல்வேறு உலக நாடுகளில் உள்ள அரசியல் சட்ட அமைப்பானது, பல நூற்றாண்டுகள் பழமையான ஆங்கிலேயர்களின் சட்ட முறையை அடிப்படையாகக் கொண்டது தான். உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் இங்கிலாந்தை, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, வரி விகிதமானது இங்கு மிகவும் குறைவு. இங்கிலாந்தில் உள்ள "லண்டன் பங்குச் சந்தை" தான் உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனம். உலகில் உள்ள 500 மிகப் பெரிய நிறுவனங்களில், 100 நிறுவனங்கள் லண்டன் நகரில் தான் அமைந்திருக்கிறது. உலகில் வேதியியல் மற்றும் மருத்துவத் துறையில் முன்னணியில் இருக்கும் நாடு இங்கிலாந்து தான். 


உலகின் பல அறிவியல் விஞ்ஞானிகள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன், வேதியியல், இயற்பியல் விஞ்ஞானிகளான ஜே. ஜே. தாம்சன், மைக்கேல் பாரடே, ஸ்டீபன் ஹாக்கிங், பரிணாம வளர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எனப் பல விஞ்ஞானிகளைக் கொண்டிருக்கிறது இங்கிலாந்து. உலகின் மிகப் பழமையான ரயில் பாதைகளைக் கொண்டிருப்பதும் இங்கிலாந்து தான். 


கி.பி. 1825 ஆம் ஆண்டுப் பயணிகள் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட, பல ரயில் தண்டவாளங்கள் இன்றும் புழக்கத்தில் இருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. மொத்தம் 53 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இங்கிலாந்து, ஐக்கிய இராஜ்ஜியங்களில் 84 சதவீதம் மக்கள் ஆக்கிரமிப்பைக் கொண்டிருக்கிறது. கல்வியில் புகழ் பெற்று விளங்கும் நாடுகளில் இங்கிலாந்து முக்கியமான இடத்தினை கொண்டு இருக்கிறது. 90 க்கும் அதிகமான பல்கலைக் கழகங்களைக் கொண்டிருக்கும் இங்கிலாந்து நாட்டில் தான், உலகின் மிகவும் பிரபலமான "கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகம்", "இம்ப்பீரியல் காலேஜ் ஆப் லண்டன்", "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்" எனப் பல பல்கலைக் கழகங்கள் அமைந்திருக்கின்றன. 


கிரிக்கெட் விளையாட்டு தோன்றியது இங்கிலாந்து நாட்டில் தான். இன்றைய இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டாகவும் கிரிக்கெட் விளங்குகின்றது. இருந்த போதிலும் இங்கிலாந்தில் விளையாடப்படும் அனைத்து விளையாட்டுகளிலும், புகழ்ப் பெற்று விளங்குவது கால்பந்து தான். இங்கிலாந்து நாட்டின் எம்.ஐ. 5 என்ற புலனாய்வு அமைப்பு தான், உலகின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு துறையாகவும் கருதப்படுகிறது. நாட்டிற்குள் பயங்கரவாதம் ஊடுருவதைத் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கினை கொண்டிருக்கிறது இந்த அமைப்பு. 


சினிமா உலகில் மிகவும் புகழ் பெற்ற "ஜேம்ஸ் பாண்ட்" என்ற கதாபாத்திரம், இந்த அமைப்பை அடிப்படையாக வைத்துத் தான் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டு இறைச்சி அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இங்கிலாந்து தான் முன்னணியில் இருக்கிறது. இங்கிலாந்து மக்கள் உலகில் அதிகம் தேநீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இங்கிருந்து தான் அதிக அளவிலான தேயிலை இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதியானது.

You have to wait 30 seconds.

BEATMARK & EFFECT

Post a Comment

0 Comments