இந்தோனேசியா பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
பல்லாயிரக்கணக்கான தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேஷியா, தென் கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள, ஒரு மிகப் பெரிய தீவு நாடாகும். இந்தியாவைப் போலவே, பல்வேறு மதங்களைச் சார்ந்த, மொழிகளைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். உலக அளவில் பல சுற்றுலாப் பணிகளை ஈர்க்கும் இந்தோனேசியா பற்றிய, சில முக்கியமானத் தகவல்களைப் பற்றி, இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். "உலகின் மிகப் பெரிய தீவு நாடு இந்தோனேசியா தான்". "இது சுமார் 17000 திற்கும் அதிகமான தீவுகளைக் கொண்டுள்ளது".
பல்லி இனத்தைச் சேர்ந்த "கொமோடோ டிராகன்" என்ற விலங்கு தான் இந்தோனேசியாவின் தேசிய விலங்காக உள்ளது. "காடுகளை அழிப்பதில் உலகிலேயே முன்னனியில் உள்ள நாடும் இந்தோனேசியா தான்". அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. "உலக அளவில் அதிக இஸ்லாமிய மக்கள் வாழும் நாடு இந்தோனேசியா தான்". "இந்தோனேஷியாவில் உள்ள கவா ஐஜான் எரிமலை நீல நிற வண்ணத்தில் எரிமலைக் குழம்பை வெளியேற்றுகிறது". "இந்தோனேசியாவில் வாழும் பெண்களில் பெரும்பாலானோர், சராசரியாக 4 அடி, 10 அங்குலம் அல்லது அதற்குக் குறைவாகத் தான் வளர்கின்றனர்". "கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தோனேசியாவைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன், "அர்தி ரைசால்" தனது நாள் ஒன்றுக்கு 40 சிகரெட்களை பிடிக்கும் பழக்கத்தால் செய்தித் தாள்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டான்".
"இந்தோனேசியாவில் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது". "விலங்குகள் மற்றும் தாவர இனங்களை ஆய்வு செய்வதற்கான சொர்க்க பூமியாக விளங்குகிறது இந்தோனேசியா". "இங்கு 2010 ஆம் ஆண்டு 200 க்கும் அதிகமான புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன". "ஜாவன் டைனோசரஸ் என்னும் அரிய வகை காண்டாமிருகம், இந்தோனேசியாவில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன". இவற்றை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காண முடியாது.
"இந்தோனேசியாவில் உள்ள கெளிமட்டு எரிமலையின் உச்சியில், மூன்று சிறிய அளவிலான ஏரிகள் அமைந்துள்ளன". "இந்த ஏரிகளின் நீரானது அவ்வப்போது, கருப்பு, சிவப்பு, பச்சை என்று நிறம் மாறுகின்றன". எரிமலையிலிருந்து வெளியாகும் பல்வேறு தாதுக்கள் நீரில் கலப்பதால், இவ்வாறு பல வண்ணங்களில் நீர் காட்சியளிக்கிறது. "அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது". "இந்தோனேசியாவில் சுமார் 255 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்". "உலகிலேயே பாமாயில் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடும் இந்தோனேசியா தான்". இங்குத் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்களில், பல்வேறு வடிவில் பாமாயில் சேர்க்கப்படுகின்றது.
"இந்தோனேசியாவில் இந்து மதம், இஸ்லாம் மதம், புத்த மதம், ப்ராட்டஸ்டேண்ட், கத்தோலிக்கம், கன்பூசியனிசம் ஆகிய ஆறு மதங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன". எனினும், இரு வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் சட்டப் பூர்வமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாது. இவர்களில் யாரேனும் ஒருவர் மதம் மாறினால் மட்டுமே, அந்தத் திருமணம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்படும். "இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள, போரோ புதுர் புத்த ஆலயம் தான், உலகிலேயே மிகப் பெரிய புத்த நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது". "ஒன்பது அடுக்களை கொண்ட, ஒரு மலையை ஒத்திருக்கும் இதன் உயரம், 113 அடி ஆகும்". "இதனைக் கட்டி முடிக்க 75 ஆண்டுகள் ஆனதாகக் கூறப்படுகிறது".
"இந்தோனேசியா மற்றும் மொனாக்கோ ஆகிய நாட்டின் தேசிய கொடிகள் ஒரே மாதிரியானவை". எனினும், இவ்விரு நாட்டின் கொடிகள் அளவில் மட்டுமே வித்தியாசப்படுகிறது. "இரண்டாம் உலகப் போரின்போது, இந்தோனேசியாவைக் கைப்பற்றிய ஜப்பான், அதன் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க, 1942 முதல் 1945 வரை தனது பிடியில் வைத்திருந்தது". அக்காலக் கட்டத்தில் 4 மில்லியன் இந்தோனேசிய மக்கள், பஞ்சம் மற்றும் கட்டாயப் பணிச் சுமை காரணமாக உயிரிழந்தனர். "இந்தோனேசியாவில் பன் மொழிகள் பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்". "இங்கு ஏறக்குறைய 700 மொழிகள் பேசப்படுகின்றன".
"உலகிலேயே அதிக எரிமலைகளைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில், ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு எரிமலை வெடிப்பாவது நிகழ்ந்து விடுகிறது". "அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ஒபாமா, தனது பால்ய காலத்தின் ஒரு பகுதியை, இந்தோனேசியாவில் தான் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது". இந்த "உலகில் மொத்தம் 57 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றது". "அந்த 57 நாடுகளில், உலகில் அதிக இஸ்லாமிய மக்கள் வாழும் ஒரே நாடு இந்தோனேசியா தான்". "இரண்டு கண்டத்திற்கும், இரண்டு பெருங்கடலுக்கும் இடையில் அமைந்திருக்கும், உலகத்தோட ஒரு மிகப் பெரிய தீவுக் கூட்டம் தான் இந்தோனேசியா". "உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய தீவான சுமத்ரா தீவு, இந்தோனேசிய நாட்டின் மிகப் பெரிய தீவு".
"உலகத்தின் 3.45 சதவீதம் மக்கள் இந்தோனேசிய நாட்டில் தான் வாழ்கிறார்கள்". "இந்தோனேசியா நாட்டின் ஆட்சி மொழி இந்தோனேசியன்". "இந்தோனேசியா ஏராளமான, மிக அழகான இயற்கை வளங்களைக் கொண்ட நாடு".
Effect Download


0 Comments