சவுதி அரேபியா பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
சவுதி அரேபியா, வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நாடு. கடுமையான சட்டத் திட்டங்களையும், கொடூரமான தண்டனைகளையும் கொண்டுள்ளதால், உலக அரங்கில் இந்த நாட்டைப் பற்றிய, எதிர்மறையான விமர்சனங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். அந்த நாட்டைப் பற்றிய, சில முக்கியமான தகவல்களைத் தான், இந்தப் பதிவில் நாம் காண இருக்கின்றோம்.
மிகப் பெரிய நிலப் பரப்பைக் கொண்ட நாடான சவுதி அரேபியா, ஈரான், கத்தார், குவைத், பக்ரைன், ஓமன் போன்ற நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா, ஹைசாஸ், நசத், அல்அக்சா, அசீத் என்று நான்கு பகுதிகளாக இருந்தது. 1902 ஆம் ஆண்டு "எபிட்சோ" என்பவரால், ரியாத் நகரம் கைப்பற்றப்பட்டு, பல போராட்டங்களுக்குப் பிறகு, அனைத்துப் பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, 1932 ஆம் வருடம், தற்போதைய "சவுதி அரேபியா" என்ற நாடு உருவானது.
சவுதி அரேபியாவின் தலைநகரமாக "ரியாத்" விளங்குகிறது. 1932 ஆம் ஆண்டு சவுதி அரேபியா தனி நாடாக உருவான பிறகு, ஆறு வருடங்கள் கழித்து தான், அங்கே பெட்ரோலியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரேபிய நாடுகளின் முக்கியப் பொருளாதார மூலதனமே தோண்டத் தோண்ட கிடைக்கும், எண்ணெய் வளங்கள் தான். பெரும்பாலான உலக நாடுகளும், தொழிற்சாலைகளும், இங்கே கிடைக்கும் கச்சா எண்ணெய்களை மூலதனமாகக் கொண்டு தான் இயங்குகின்றன.
இதனை "மசகு எண்ணெய்" என்றும் அழைப்பார்கள். கச்சா எண்ணெயானது பீப்பாய் அளவுகளில் தான் குறிப்பிடப்படுகின்றது. ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 159 லிட்டர். இதிலிருந்து தான் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. ஆனால், ஒரு பீப்பாயில் மொத்த அளவில் இவைகளின் அளவு, வெறும் 8 ல் ஒரு பங்கு மட்டும் தான். மீதமுள்ளவைகள் தான் கட்சா எண்ணெய் அல்லது மசகு எண்ணெய் என்று கூறப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தி தான் பிளாஸ்டிக் பொருட்கள், சாலைகளுக்குப் போடப்படும் தார், சல்பியூரிக் ஆசிட், பாரபிக் மெழுகு எனப் பல அத்தியாவசியமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
"கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, உலகில் மிக அதிகமாகக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது சவுதி அரேபியா". "உலகின் மிகப் பெரிய எண்ணைய்க் கிடங்குகளைக் கொண்ட நாடுகளில் வெனிசுலாவிற்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்திலும், இயற்கை வாயு சேமிப்பில் உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது சவுதி அரேபியா". முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, புனிதப் பயணம் மேற்கொள்ள ஆசைப்படும் புனிதத் தலமாகிய "மெக்காவும்", "மெதினாவும்" இங்குத் தான் அமைந்திருக்கின்றன.
ஆனால், மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இதன் எல்லைக்குள் நுழைய அனுமதி இல்லை. வருடந்தோறும் "ஹச்" புனிதப் பயணத்திற்காகப் பல லட்சம் பேர் ஒன்று கூடும், உலகின் மிகப் பெரிய மசூதி "மெக்காவில்" தான் அமைந்திருக்கிறது. தோராயமாக, ஒரு வருடத்திற்கு ஒரு கோடியே 30 லட்சம் வெளிநாட்டு முஸ்லிம் மக்கள், மெக்காவிற்கு வந்து வழிபட்டுச் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவில் அமைந்திருக்கும் "அல்ப்ராட்ஜ் ஆல்பைட் டவர்ஸ்" என்ற ஹோட்டல் தான் உலகின் மிக உயரமான ஹோட்டல்.
இந்த ஹோட்டலில் அமைந்திருக்கும் கடிகாரம் தான் "டாலஸ்ட் கிளாக் டவர்" என்ற பெருமையும் பெற்று இருக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால், 25 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கூட, இந்தக் கடிகாரத்தை நாம் பார்க்க முடியும் என்பது தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய கட்டிடம் என்ற பெருமையும் பெற்று இருக்கிறது "ஆல்பிராட்ச் ஆல்பைட் டவர்ஸ் ஹோட்டல்". உலகின் மிகப் பெரிய பெண்களுக்கான பல்கலைக்கழகம் சவுதி அரேபியாவில் தான் அமைந்திருக்கிறது. "பிரின்சஸ் ரோரா பின் அப்துல் ரகுமான்" என்று அழைக்கப்படும்.
இது, மணிக்கு ஏழாயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய அளவிற்கு பிரத்தியேகமாக, ரயில் வசதியையும் கொண்டிருக்கிறது. முஸ்லிம் மக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் "மெக்கா மாநகரம்" தான் "முகமது நபி" அவர்களின் பிறந்த ஊராகும். அதே சமயம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடும் சவுதி அரேபியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. "சவுதி அரேபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் அறியப்படுகின்றது".
இங்கே ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். "குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் நாடுகளில் முதன்மையான நாடும் சவுதி அரேபியா தான்". கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச்சேர்க்கை, தீவிரவாதம், போதைப் பொருள் கடத்துதல், கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோதமான செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகின்றது.
"சவுதி அரேபியாவில் திரையரங்குகள் இல்லை". "பூங்காக்களைப் பொறுத்தவரை, ஃபேமிலி பார்க், பேட்ச்சுலர் பார்க் என்று தனித் தனியாகவே அமைந்திருக்கின்றன". "உணவகங்களில் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் இடங்களில் கூட, குடும்பமாக வருபவர்களுக்குத் தனியாகவும், பேச்சுலராக வருபவர்களுக்குத் தனியாகவும் இடங்கள் ஒதுக்கப்படுகின்றது." "தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படுகின்றன."
சவுதி அரேபியாவில் இருக்கும் கிங்ஸ் பேட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான், உலகின் மிகப் பெரிய விமானத் தளமாகவும் இருக்கின்றது". "இங்கே இருக்கும் சவுதி அரேம்கோ என்ற நிறுவனம் தான், உலகில் அதிக அளவு குருடாயில் சேமிப்பையும், உலகில் ஒரே நாளில் அதிக அளவு ஆயில் உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளதாக இருக்கின்றது.
"ஆயில் சம்பந்தமான 100 பேட்டன் ரைட்ஸ் வைத்துள்ள ஒரே நிறுவனமாகவும் விளங்குகின்றது இது. "கெமிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்வதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருக்கிறது." "குறிப்பாக, எத்ளின்கிளைக்கான் தயாரிப்பில் இரண்டாவது இடத்தையும், பாலியத்திலின் தயாரிப்பில் மூன்றாவது இடத்திலும், பாலிப் பிரபலின் தயாரிப்பதில் உலகில் நான்காவது இடத்தைப் பிடித்து இருக்கிறது சவுதி அரேபியா". "உலகில் அதிக வாகன போக்குவரத்து உள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று". ஆனால், இங்குக் கார்கள் சொந்தமாகத் தயாரிக்கப்படுவதில்லை.
Beatmark : Download
Effect : Download

0 Comments