ஸ்வீடன் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
ஸ்வீடன், ஐரோப்பியப் கண்டத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு தேசங்களில் ஸ்வீடனும் ஒன்று. பரப்பளவு அடிப்படையில் ஐரோப்பாவிலேயே மூன்றாவது பெரிய நாடாக உள்ள ஸ்வீடன் பற்றிய, சில சுவாரஸ்யமான தகவல்களை இந்தத் தொகுப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
17ஆம் நூற்றாண்டில் மத்தியில் உருவான சுவீடன் நாடு, அது உருவான சில ஆண்டுகளிலேயே, ஐரோப்பாவின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்தது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பெரும்பாலும் ஐரோப்பிய மாகாணங்கள் கைப்பற்றப்பட்டு, இன்று 21 மாவட்டங்களை உள்ளடக்கிய, ஐரோப்பிய ஒன்றிய நாடாக விளங்குகின்றது ஸ்வீடன். இதுவரை நடந்த இரண்டு உலகப் போர்களிலுமே நடுநிலைமையுடன் விளங்கிய ஸ்வீடன், ஸ்ரீயா என்ற பழங்குடியின மக்களின் பெயராலேயே, ஸ்வீடன் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
"இரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படும் ஸ்வீடனில்", "நாட்டைச் சுற்றி, மொத்தம் 24 ஆயிரம் சிறியத் தீவுகள் உள்ளன". 17 ஆம் நூற்றாண்டிலிருந்து "ஐரோப்பாவின் மிகப் பெரிய இராணுவ சக்தியாகவும், உலகின் மிகப் பெரிய உற்பத்தியைக் கொண்டிருந்த போதிலும்", "இதுவரை நடந்த இரண்டு உலகப் போர்களிலுமே, ஸ்வீடன் பங்கு எடுத்துக் கொண்டதில்லை". "ஸ்வீடன் தான் உலகிலேயே அதிக வரி விதிப்பினைக் கொண்ட நாடாகும்".
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில், மொத்தம் 52% மக்கள் செலுத்தும் வரியின் மூலமே வருவாயாய் ஈட்டப்படுகிறது இங்கே. சுவீடனில் டாக்ஸ் எனப்படும் வரியை இங்கே, "ஸ்கேட்" என்றும் "டிரஷர்" என்றும் தான் அழைக்கின்றார்கள். உலகின் மிகப் பெரிய பரிசாக, மதிக்கப்படும் "நோபல் பரிசு" 1901 ஆம் ஆண்டு ஸ்வீடனின் "ஸ்டாக் ஹோம்" நகரத்திலிருந்து தான் வழங்கப்படுகின்றது. 1901 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 500 முறைக்கு மேல் வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசானது, 1866 ஆம் ஆண்டில் "டைனமட்டைக் கண்டுபிடித்த ஆல்பர்ட் நோபலின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது".
"மோஸ்" எனப்படும் மிகப் பெரிய மான் வகையானது, ஸ்வீடனின் காட்டுப் பகுதியில் அதிகம் வாழும் ஒரு விலங்காகும். ஒவ்வொரு வருடமும், பல ஆயிரம் மக்களால், இது சாதாரணமாக வேட்டையாடப்படும் ஒன்றாகவும் உள்ளது. இன்று உபயோகத்தில் இருக்கும் சில முக்கியமான கருவிகள், ஸ்வீடன் நாட்டில் கண்டு பிடிக்கப் பட்டவைகளாகவே உள்ளன. இதயத் துடிப்பை கட்டுப்படுத்தும் கருவியான "பேஸ் மேக்கர்", "அல்ட்ராசம் தீப்பெட்டிகள்", "ஆல்ஸ்டிரானநாமிக்கள் லென்ஸ்", "மெரின் ப்ரோபலர்", "குளிர்சாதன பெட்டிகள்" மற்றும் "கம்ப்யூட்டர் மவுஸ்" போன்ற பிரபலமான கண்டுபிடிப்புகள் அனைத்துமே ஸ்வீடனில் கண்டுபிடிக்கப்பட்டவைகள் தான்.
"எச்.ஐ.வி. வைரஸைக்" கண்டறியும் "எச்.ஐ.வி. ட்ராக்க்கர் கருவியும்" ஸ்வீடனில் கண்டுபிடிக்கப்பட்டது தான். "ஸ்வீடனில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் மிகவும் சுவையானதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்குமாம்". குறிப்பாகச், "சால்மியாகீ என்ற பெயரில் தயாரிக்கப்படும் கருப்பு நிற ஐஸ்கிரீம்கள்" அங்கே மிகவும் பிரபலமான ஒன்றாகும். "எல்விஸ்", "பிரீஸ்லே பீட்டர்ஸ்", "மைக்கேல் ஜாக்சன்" ஆகியோர்களுக்கு பிறகு, உலகின் அதிகமான விற்பனையான இசைத் தட்டுகளைக் கொண்டதாக, ஸ்வீடனின் "ஏ.பி.பி.ஏ. பாப் இசை குழு" தான் உள்ளது.
1972 இல் உருவாகி, ஒரு கட்டத்தில் ஸ்வீடனின் மிகப் பெரிய ஏற்றுமதி வருமானத்தை, பெற்றுத் தந்த இந்த இசைக்குழு, 1983 இல் உடைந்தது. 1944 ஆம் ஆண்டிலேயே ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக மாற்றிய நாடு ஸ்வீடன் தான். இது தவிர, "1972ல் ஆண், பெண்ணாகவும், பெண், ஆணாகவும் பாலின அடையாளத்தை மாற்றிக் கொள்ள அனுமதி அளித்த முதல் நாடும் ஸ்வீடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது". "உலகில் அதிகமாக ஏரிகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஸ்வீடனும் ஒன்று". சிறிதும், பெரிதுமாக 95 ஆயிரத்து 700 ஏரிகளைக் கொண்டு விளங்கும் இது, நாட்டின் மொத்த பரப்பளவில் ஒன்பது சதவீதத்தை ஏரிகள் எடுத்துக் கொள்கின்றது.
இன்று உலகில் உள்ள, பெரும்பாலானவர்களால் விரும்பி விளையாடப்படும் "கேண்டி க்ரஷ் கேம்" ஆனது, "கிங்க்" என்ற சுவீடன் நாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும், கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்து, உபயோகப்படுத்தி வரும் இந்த விளையாட்டின் மூலம், "கிங்" நிறுவனம் 2013 ஆம் ஆண்டு, கணக்கெடுப்பின்படி ஸ்வீடனின் சிறந்த பொழுதுபோக்கினை வழங்கும் நிறுவனமாகவும் அறியப்பட்டது.
ஸ்வீடன் நாட்டின் தலைமை இடமாக அறியப்படும், "ஸ்டாக்ஹோம் நகரம், வெனிஸ் ஆப் தி நார்த்" என்று அழைக்கப்படுகின்றது. இந்த நகரத்தைச் சுற்றி, நீரால் சூழப்பட்டுள்ள 12 தீவுகளும், 42 பாலங்களும் அமைந்துள்ளன. முழுவதும் ஐஸ் நிறைந்த பனிக் கட்டிகளால் கட்டப்பட்ட முதல் ஹோட்டலானது, 1980 ஆம் ஆண்டு ஸ்வீடனில் உள்ள, "ஜூக்காஸ் ஜார்வி" என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. நான்காயிரம் டன் அடர்த்தியான பனிக் கட்டிகளுடன், 60 அறைகளைக் கொண்டிருக்கும் இந்த இடம், டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம்வரை மட்டுமே செயல்படுகின்றது.
மேலும், இங்கே வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உறைந்து விடாமல் இருக்க, "ஃபீவர்", "நைலான்" போன்ற உடைகளும் வழங்கப்படுகின்றன. வீடு நாட்டில் உள்ள, பெரும்பாலான மரத்தால் அமைக்கப்பட்ட வீடுகள், "சிவப்பு வண்ணத்திலேயே பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கும்". துருவப் பகுதியில் அமைந்திருக்கும் குளிர் நிறைந்த ஸ்வீடனில், குளிரை அதிகமாக உட்புகாமல் தடுக்கவே, இந்தச் சிவப்பு வண்ணச் சாயங்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன.


0 Comments