சீனா பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
சீனா, வளர்ந்து வரும் வல்லரசு நாடான சீனா, உலகின் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் நாடு சீனா. ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடான சீனா, உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாகப் பரப்பளவின் படி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டைப் பற்றிய, சில முக்கியமான தகவல்களைப் பற்றித் தான், இன்று நாம் இந்தப் பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
உலகின் மிகப் பழைமையான நாகரீகங்களைக் கொண்டிருக்கும் சீனா, வடசீனப் பகுதியில், மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. ஐரோப்பிய நாடுகளில் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, இருந்த மிகப் பழமையான நாகரிகம் இதுவாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சியா என்ற அரச வம்சத்தினரால், ஆளப்பட்டு வந்த சீனா, 1911 ஆம் வருடம் குடியரசு நாடாக உருவானது.
சீனாவின் கிழக்கில் வட கொரியாவும், வடக்கில் மங்கோலியாவும், வட கிழக்கில் ரஷ்யாவும், மேற்கில் கஜகிஸ்தான், கிர்க்கிஸ்தான், ஆகிய நாடுகளும் மேற்குப் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் போன்ற பகுதிகள் நில எல்லைகளாக அமைந்திருக்கின்றன. சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில், இரண்டு பங்கு மலைப்பாங்கான இடங்களைக் கொண்டது. இமயமலைத் தொடரானது, இந்திய, சீன எல்லையில் தான் அமைந்துள்ளது. இங்கே இருக்கும் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரம், சீனாவால் உரிமை கோரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா, நிலையான பாதுகாப்பு படையையும், அணு ஆயுதங்களையும் கொண்டிருக்கும் மிகவும் பலம் வாய்ந்த நாடாகவும் விளங்குகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சீனா, உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலக அளவில் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலும், இறக்குமதில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சீனாவின், மின்னணு சாதனங்கள் இந்தியாவில் மிகப் பெரிய ஆதிக்கத்தைக் கொண்டு இருக்கின்றன.
சீனத் தயாரிப்புகளைக் கொண்ட செல்போன்கள், இன்றும் இந்தியச் சந்தையில் விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கின்றன. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 இனங்களைக் கொண்ட, மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில், 93 சதவீதம் பேர் "அன்" என்ற இனத்தையும், மற்றவர்கள் "பௌத்தம்", "இஸ்லாம்", "கத்தோலிக்கம்", "காவோயிஸம்" போன்ற மதங்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
அதிக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல குடும்ப நலத் திட்டங்களை, அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டங்களின் மூலம் மக்கள் தொகையானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், 117 ஆண்களுக்கு, 100 பெண்கள் என்ற பாலின விகிதாச்சாரக் குறைபாட்டிற்கு வழிவகுத்ததாக அமைந்து விட்டது அந்தத் திட்டங்கள். இங்குச் சீன மொழியானது அதிகார மொழியாக இருந்தாலும், "மாண்டரிங்" என்ற மொழி தான் அதிக மக்கள் பேசக்கூடிய மொழியாக இருக்கிறது.
சீனா தான் உலகில் அதிக அளவில் பாறை எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகும். சீனாவில் அமைந்திருக்கும் "க்ரீகாட்ஜியர்ஜ்" என்று அழைக்கப்படும் "மூன்று ஆள் பள்ளத்தாக்கு அணை" தான். உலகின் பிரம்மாண்டமான ராட்சச அணை. உலகின் மிகப் பெரிய நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமும் இது தான். 670 அடி உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்டமான அணை, 7575 அடி நீளம் கொண்டது. மிகவும் தடிமனாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அணையின் கட்டுமானத்தின்போது, 4 லட்சத்து 23 ஆயிரம் டன் இரும்பினைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த அணையின் நீர் மட்டம் கடல் மட்டத்தைவிட 175 மீட்டர். அதாவது, 574 அடி உயரம் அதிகமாக உள்ளபோது, சராசரியாக 660 கிலோ மீட்டர் நீளமும், 1.12 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட, மிகவும் அழுத்தமான நீர்த் தேக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இதன் காரணமாகப் பூமி சுற்றும் வேகமானது, 0.006 மைக்ரோ செகண்ட் என்ற அளவிற்கு, குறைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. சீனாவில் 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னும் குகைகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "சேங்ஷி" என்ற இடத்தில் வாழும் இவர்களின் பெரும்பாலான இருப்பிடங்கள், மலைகளிலும் பாறைகளிலும் குகைகள் குடையப்பட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.
உலகிலேயே புறாக்களை இராணுவத்தில் பயன்படுத்தும் நாடு சீனா தான். சீனாவின் மத்திய நகரமான "ஷேங்டோ "என்ற இடத்தில், மக்கள் விடுதலை ராணுவத்தின், ஒரு சிறப்புப் பிரிவில் புறாக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் தகவல் தொடர்பில் முக்கியமான தருணங்களில், கோளாறு ஏற்படும்போது புறாக்களைப் பயன்படுத்திக்கிறது சீன ராணுவம். பத்தாயிரத்திற்கும், அதிகமான "மெசஞ்சர்" புறாக்களுக்குச் சீன ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.
உலக நாடுகளில் வெளியாகும் பெரும்பாலான புத்தகங்கள், அதன் தன்மையைக் கொண்டும், எழுத்தாளரின் மதிப்பைக் கொண்டும் தான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் சீனாவில் பெரும்பாலான இடங்களில், அதன் எடையைப் பொறுத்து, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது ஆச்சரியமான ஒன்று. 1.3 பில்லியன் அளவிற்கு மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருப்பதால், உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு சீனர்களாகத் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்க ஒரு விஷயம்.
உலகின் முக்கியமான லேபில்களைக் கொண்ட இசை நிறுவனங்களின் பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய, சீனாவிற்கு மட்டும் பிரத்தியேகமாக அனுமதி வழங்கி இருக்கிறது "கூகுள் நிறுவனம்". சீனாவில் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் பென்சில்கள் அனைத்துமே, மஞ்சள் நிறத்தில் தான் அமைந்திருக்கும். 1890 ஆம் வருடம், கிராபைக்களுடன் கூடிய, பென்சில் சீனாவில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. சீனாவில் முட்டைகளை மனிதனின் சிறுநீரில் தான் வேக வைப்பார்கள். உலக மக்களின் உணவு கலாச்சாரத்திலிருந்து, வேறுபட்டுக் காணப்படும் சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் அருவருக்கத் தக்க வகையிலே அமைந்திருக்கும். பாம்பு, பல்லி என்று கண்ணில் பட்டதை எல்லாம் சாப்பிடக்கூடிய சீனர்கள், பெரும்பாலானோருக்கு பால் சார்ந்த உணவுப் பொருட்கள் என்றால் அலர்ஜி என்பது ஆச்சரியமான தகவல்.
2006 ஆம் வருடம் சீனாவில் 50 ஆயிரத்துக்கு அதிகமான நாய்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் "ரேபிஸ்" நோயால் அடுத்தடுத்து மூன்று பேர் இறந்து போனது தான். சீன அரசால் இதற்கெனத் தனிப் படை அமைக்கும், முன்னர் நாய்களை அடித்துக் கொள்பவர்களுக்கு 63 சென்ட் பணம் அந்த நாய்களின் உரிமையாளர்களாலேயே கூலியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
0 Comments