Did you know these facts about Dubai?
ஒரு காலத்தில் எண்ணெய்க் கிணறுகள், ஒட்டகம் மேய்க்கும் இடமாக இருந்த துபாய், இப்பொழுது உலகத்தின் உல்லாச நகரமாகத் திகழ்கிறது. இன்று உலகில் வாழும் பலருக்கு, துபாயைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது வாழ் நாள் குறிக் கோளாக இருக்கும். அப்படி என்ன தான் இருக்கிறது இந்தத் துபாயில். அதனைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
Once a place of oil wells and camel grazing, Dubai is now the world's entertainment capital. For many people living in the world today, sightseeing around Dubai is a lifelong goal. What is there in this Dubai? We will know some interesting information about it in this post.
துபாய் மிகக் குறுகிய காலத்திலேயே, வளர்ச்சி பெற்ற ஒரு நகரமாகவே விளங்குகின்றது. நீண்ட காலமாகவே துபாய் முத்துக் குளித்தல் போன்றவற்றிற்காக அறியப்பட்ட இடமாக இருந்த போதிலும், அபுதாபி பகுதியிலிருந்து, பணியாசி என்னும் இனக் குழுவினர், அல்மக்தூம் குடும்பத்தினர் தலைமையில், இந்த இடத்தில் குடியேறியதன் விளைவாகவே, இதன் நவீன கால வரலாறு ஆரம்பமாகின்றது. மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் பொருளாதார வளர்ச்சி எட்டியது தான் இந்தத் துபாய்.
Dubai has become a thriving city in a very short span of time. Although Dubai has long been known for pearl bathing, its modern history begins with the settlement of the Baniyasi ethnic group from Abu Dhabi, led by the Al Maktoum family. Dubai has achieved tremendous economic growth in a very short period of time.
2014 ஆம் ஆண்டு ஜெனிவாவிற்கு பிறகு, உலகின் மிக அதிக விலை உயர்ந்த ஹோட்டல் அறைகளாக, துபாயின் ஹோட்டல் அருகில் மதிப்பிடப்பட்டு இருக்கின்றன. அமெரிக்க உலகளாவிய ஆலோசனை நிறுவனமான, மெர்சர் மூலம் மத்திய கிழக்கில் வாழும் சிறந்த இடங்களில் துபாய் மதிப்பிடப்படுகிறது. பாரசீக வளைகுடாவின் கரை ஓரத்தில் அமைந்திருக்கும் இந்தத் துபாய், நேரடியாக அரேபியப் பாலைவனத்தில் அமைந்திருக்கிறது. துபாயானது இன்று உல்லாச உலகமாக இருப்பதற்குக் காரணமே, செயற்கையாக உருவாக்கப்பட்ட பனை மரத் தீவுகள் தான். இந்தச் செயற்கைத் தீவைக் கட்டி முடிப்பதற்கு மட்டும் ஏறத்தாழ 125 மெட்ரிக் கியூப் மணல் தேவைப்பட்டிருக்கிறது.
After Geneva in 2014, Dubai's hotels were rated as the most expensive hotel rooms in the world. Dubai is rated among the best places to live in the Middle East by Mercer, an American global consultancy. Located on the shores of the Persian Gulf, Dubai is located directly in the Arabian Desert. The man-made palm tree islands are the reason why Dubai is the entertainment world it is today. About 125 metric cubes of sand were required to complete the construction of this artificial island.
துபாயின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 85% பேர் வெளி நாட்டு நபர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. பெரும்பாலும் வேலை விஷயமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் தான் இங்கு அதிகமாக வசிக்கிறார்கள். "ஃபெராரி", "பென்ட்லி", "லம்போகினி" போன்ற உலகின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் எல்லாம், துபாயில் போலீஸ்காரர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல மில்லியன் டாலர்கள் புரளும் விளையாட்டான ஒட்டகப் பந்தயத்தில், அந்த ஒட்டகங்களை ஓட்டுவதற்கு ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள். இந்த ரோபோக்களின் விலை மட்டும் 300 முதல் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
It is worth noting that 85% of Dubai's total population is foreigners. People from countries like India, Pakistan and Bangladesh mostly live here for work purposes. It is noteworthy that the world's most expensive luxury cars like "Ferrari", "Bentley", and "Lamborghini" are the cars used by police officers in Dubai. Camel racing, a multi-million dollar sport, uses robots to drive the camels. It is worth noting that the price of these robots is only 300 to 10 thousand US dollars.
2013 ஆம் ஆண்டு மட்டும் 2250 டன் தங்கத்தை, ஒட்டு மொத்தமாக வர்த்தகம் செய்திருக்கிறது துபாய். இது 354 யானைகளின் எடைக்குச் சமம். உலகின் மாபெரும் ஆடம்பர ஹோட்டல் ஆன, புர்ச் அரா அபீல் உச்சியில் உள்ள, டென்னிஸ் கோர்ட் தான் உலகில் மிகவும் உயரமானது. இங்கு அகேசி மற்றும் பெடரர் போன்ற மாபெரும் விளையாட்டு வீரர்கள், இங்கு விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால், அங்கு உள்ள பஸ் ஸ்டாப்களில் கூட, ஏசி வசதி செய்து இருக்கிறார்கள். உலகின் மிக உயரமான கட்டிடமான "புர்ஜ் கலிபா" இங்குத் தான் அமைந்திருக்கிறது.
In 2013 alone, Dubai traded 2250 tons of gold. This is equal to the weight of 354 elephants. The tennis court at the top of Burch Ara Abeel, the world's largest luxury hotel, is the highest in the world. It is noteworthy that great athletes like Agassi and Federer have played here. Due to the high sun exposure in Dubai, even the bus stops are equipped with AC. The world's tallest building "Burj Khalifa" is located here.
163 மாடிகளைக் கொண்ட இது, 828 மீட்டர் நீளம், 2716 அடி உயரம் கொண்டது. 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் "புர்ச் கலிபா" கட்டிடம் 2010 ஆம் ஆண்டு தான் கட்டி முடிக்கப்பட்டது. சுமார் மூன்று ஈ.பி.ல். கோபுரங்களை ஒன்று மேல் ஒன்று நிற்க வைத்தால், எந்த அளவிற்கு உயரம் கிடைக்குமோ அந்த அளவிற்கு இந்தக் கட்டடம் உயரமானது. இந்தக் கட்டிடத்தின் வெளிப் புறக் கண்ணாடிகளை வருடத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலே, 30 பேர் சேர்ந்து வேலை செய்தாலே, அந்த வேலையைச் செய்து முடிக்கக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகுமாம். மிக உயரமான கட்டிடம், அதிக எண்ணிக்கையிலான கதவுகள், மிக உயரமான லிஃப்ட் என்று சொல்லிப் பல உலக சாதனைகளுக்குச் சொந்தமானது தான் இந்தப் "புர்ச் கலிபா" கட்டிடம்.
It has 163 floors, is 828 meters long and 2716 feet high. Built in 2004, this "Burch Khalifa" building was completed in 2010. In about three E.P. If the towers are stacked one on top of the other, the building is as tall as it gets. If the exterior windows of this building were to be cleaned once a year, 30 people working together would take at least three months to complete the job. The "Burch Khalifa" building holds many world records for being the tallest building, the most doors, and the tallest elevator.
துபாய் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடாக இருந்தாலும், பிற நாட்டைச் சேர்ந்தவர்களே இங்கு அதிகம் வசிக்கிறார்கள். குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக இருந்தாலும், அனைத்து மதத்தினரையும் ஆதரிக்கும் நாடாகவே விளங்குகிறது துபாய். லண்டனுக்கு அடுத்த படியாக அதிக நட்சத்திர ஹோட்டல்களைக் கொண்ட இரண்டாவது பெரிய நகரம் துபாய் தான். லண்டனில் மொத்தம் 75 நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கிறது என்றால், துபாயில் மொத்தம் 60 நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கிறது. உலகின் தலை சிறந்த நாடுகளில் துபாயும் மிக முக்கியமான ஒரு நாடு.
Although Dubai is an Islamic country, there are many people from other countries living here. Although it is a predominantly Hindu and Christian country, Dubai is a country that supports all religions. Dubai is the second largest city with the most number of star hotels after London. While London has a total of 75 star hotels, Dubai has a total of 60 star hotels. Dubai is one of the most important countries in the world.
SHAKE EFFECT Download
0 Comments