இன்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருப்பது கத்தார் நாட்டைப் பற்றித் தான் கத்தார் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், அரபு நாடுகளுக்கு எதிராகத் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதாகவும், என்று கூறி கத்தாருடனான ராஜாங்க உறவினை நிறுத்திக் கொள்வதாக, சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் அறிவித்து இருந்தன. இது கத்தார் நாட்டின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்து இருக்கிறது. பெரும்பாலான மக்கள் கத்தார் நாட்டைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாட்டைப் பற்றிய சில தகவல்களை, நாம் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
A few days ago countries like Saudi Arabia, Bahrain, Egypt and the United Arab Emirates had announced that they would end their diplomatic relations with Qatar saying that Qatar is promoting terrorism and supporting terrorist movements against Arab countries. This has greatly affected Qatar's aviation and economy. Most people are probably not familiar with the country of Qatar. We will know some information about that country in this post
மேற்கு ஆசியாவின், தென் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும், ஒரு சிறிய தீபகற்ப நாடு தான் கத்தார். நமது நாட்டைச் சேர்ந்த அதிலும் குறிப்பாக, நம் தமிழர்கள் அதிக அளவில் இங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நாட்டைப் பற்றிச் செய்திகள், செய்தித்தாள்களில் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. 2022 ஆம் ஆண்டு அதாவது, சென்ற ஆண்டு உலக கோப்பையைக் கால்பந்துப் போட்டித் தொடரைக் கத்தார் தான் நடத்தியது.
Qatar is a small peninsular country located in the south-eastern part of Western Asia. Especially our Tamils from our country are working here in large numbers. News about this country does not often appear in newspapers. In 2022, Qatar hosted the World Cup last year.
இந்த நாட்டில் வேலை வாய்ப்புகளில் உத்திரவாதம் இருப்பதால், சமீப காலமாக நிறைய மக்கள், கத்தார் நாட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டு அதாவது, சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடர்கான கட்டுமான பணிகள் 2017 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டு விட்டன. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரை நடத்திய முதல் அரேபிய நாடு என்ற பெருமையைக் கத்தார் தட்டிச் சென்றது.
Recently, many people have started moving towards Qatar because of the guaranteed job opportunities in this country. The construction work has been started since 2017 for the 2022 World Cup football tournament held last year. Qatar became the first Arab country to host the World Cup.
இந்த வேலைகளில் ஈடுபடுவதற்காகவே, அதிக எண்ணிக்கையில் மக்கள் குறிப்பாக, இந்தியா நேபாளம் போன்ற பகுதிகளிலிருந்து கத்தார் நோக்கிப் படையெடுத்து உள்ளனர். உலகிலேயே அதிக அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடும் இது தான். சென்ற வருடத்தில் 2016 ஆம் ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 700 டாலர்களை கொண்டு இருப்பதாக, சி.ஐ.ஏ. வின் உலக நாடுகளைப் பற்றிய, புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
To engage in these jobs, a large number of people are migrating to Qatar, especially from places like India and Nepal. It is also the country with the highest GDP in the world. Last year in 2016, the gross domestic product was one lakh 29 thousand 700 dollars, CIA said. About the countries of the world, reported in the book.
உலகிலேயே மக்கள் தொகையில், அதிகமான ஆண்களைக் கொண்டிருக்கும் நாடு இந்த நாடு தான். மொத்தம் 25 லட்சம் பேர் மட்டும் வசிக்கும் இந்த நாட்டில், மொத்தப் பெண்களின் எண்ணிக்கை வெறும் ஏழு லட்சம் மட்டும் தான். இந்த நாடு வேலை வாய்ப்புக்கான நல்ல எதிர்காலத்தைக் கொண்டிருந்தாலும், வேலை செய்ய வந்தவர்களை, மோசமான நிலையில் வற்புறுத்தும் அவலமும் இங்குத் தான் நடக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள், அங்கே உள்ள தொழிலாளர்கள் முகாம்களில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
This country has the highest male population in the world. In this country of only 25 lakh people, the total number of women is only 7 lakh. Although this country has a bright future for employment, it is here that the misery of forcing those who come to work into worse conditions is happening here. It is said that most of the affected people are staying in labor camps there.
இங்கே இருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக, "அம்னீஸ்டி இன்டர்நேஷனல்" என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது. வெளிநாடுகளில் பல சொத்துக்களை வாங்கி தனது வர்த்தகத்தையும், விரிவுபடுத்தி இருக்கிறது இந்தக் கத்தார் நாடு. லண்டனின் உயரமான கட்டிடங்களான ஷெரல்ட், ஹார்ட்ஸ், ஷெல்சிபிராக்ஸ், ஒலிம்பிக் கிராமம், கேனரி வாஸ் போன்றவை கத்தார் நாட்டுக்குச் சொந்தமானவைகள் தான்.
"Amnesty International" has stated that the foreign workers here are being harassed. This country of Qatar is expanding its business by buying many properties abroad. Some of London's tallest buildings such as Sherald, Harts, Chelseabrokes, Olympic Village, Canary Wharf, etc. are owned by Qatar.
கத்தார் ஒரு பழமைவாத நாடாகக் கருதப்பட்டாலும், இங்குப் பழைய கலைப் பொருட்களைக் கொண்டு, கண் காட்சிகளும் நடத்தப்படுகின்றன. 2008 ஆம் ஆண்டு இஸ்லாமிய கலைகளுக்கான அருங்காட்சியம் இங்குத் திறக்கப்பட்டது. அதில் உலகின் மூன்று கண்டங்களில் உள்ள 1400க்கும் அதிகமான பழமையான கலைப் பொருட்கள், இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. கத்தார் நாட்டின் தேசிய மலராகக் கத்தாஃப் என்ற பூவும், தேசிய விலங்காக அரேபியன் ஓரிக்ஸ் என்ற மான் போன்ற விலங்கும், ஃபேல்கான் என்ற பறவை அந்நாட்டின் தேசிய பறவையாகவும், ரியால் கத்தாரின் நாணயமாகவும் இருந்து வருகின்றன. உலகின் எந்த விதமான, ஒரு இயற்கை சீற்றங்களினாலும் பாதிக்க முடியாத, ஒரு நாடக கத்தார் கருதப்படுகின்றது.
Although Qatar is considered a conservative country, eye shows are also held here with old artefacts. The Museum of Islamic Arts opened here in 2008. More than 1400 ancient artefacts from three continents of the world are on display here. Qatar's national flower is the Qatari flower, its national animal is the Arabian oryx, its national bird is the falcon, and its currency is the Qatari Riyal. Qatar is considered a theater that cannot be affected by any kind of natural disasters in the world.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அது அமைந்திருக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலையும், நிலப்பரப்பின் தன்மையையும் பொறுத்து, இங்குப் பூகம்பம் ஏற்படுவதற்கு கூட, .01 சதவீதம் தான் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கத்தாரில் குளிர்காலத்தில் கூட 15 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையும், மற்ற காலங்களில் அதைவிட அதிகமாக உஷ்ணத்தைக் கொண்டிருப்பதால், வருடத்திற்கு 70 மில்லி மீட்டர் என்று அளவிலான, மழைப்பொழிவை மட்டுமே கத்தார் கொண்டுள்ளது.
According to scientists, depending on the surrounding environment and topography, there is even a .01 percent chance of an earthquake occurring here. Qatar receives only 70 millimeters of rainfall per year, with temperatures as low as 15 degrees Celsius even in winter and much hotter during the rest of the year.
கத்தார் நாட்டை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆடம்பரம், தனிநபர் வருமானம், பெண்ணை உற்பத்தி என்று பல பிரமிப்பான விஷயங்களைக் கொண்டிருந்தாலும், நாட்டின் முக்கியமான தேவையான, உணவு உற்பத்தியைப் பொருத்தவரை, 92 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தும், அண்டை நாடுகளில் இருந்தும் தான் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. ஏனெனில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை புல், பூண்டு கூட இல்லாத பாலைவன பிரதேத்தைக் கொண்டு இருக்கும் கத்தாரில், பயிர் செய்து விவசாயம் செய்வது என்பதும், பசுமையான காடுகளைக் கண்ணால் காண்பது என்பதும், அரிதினும் அரிதான ஒன்று தான் என்பதால் அங்கே ஒரு லிட்டர் பெட்ரோலை விடவும், ஒரு லிட்டர் தண்ணீரின் விலை மிக மிக அதிகமாகவே இருக்கும்.
Although Qatar has many amazing things like luxury, per capita income, female production compared to other countries in the world, as far as the country's important need, food production is concerned, 92 percent of its food is imported from foreign countries and neighboring countries. Because in Qatar, where there is no grass or garlic as far as the eye can see, growing crops and seeing green forests with your eyes is a rare thing, and the price of a liter of water is much higher than a liter of petrol there.
2015 ஆம் ஆண்டின் படி, உலகின் விமான ஏர்லைன்ஸ் சேவையில், கத்தார் நாட்டின் கத்தார் ஏர்வேஸ் தான், உலக அளவில் முன்னிலையிலிருந்து வருகின்றது. தோகாய் ஏர்போர்ட்டானது, மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகச் சிறந்த விமானத் தளமாக இருப்பதுடன், உலகில் அறிமுகம் ஆகும், அனைத்து வகையான புதிய விமானங்களையும், தனது ஓடுதளத்தில் பயன்படுத்தி வருகின்றது.
As of 2015, Qatar Airways is the world's leading airline. Doha Airport is one of the best airports in the Middle East and the world's leading airport, with all types of new aircraft operating on its runways.
கத்தார் நாட்டில் விபச்சாரம் என்பது சட்ட விரோதம் என்பதால், இது போன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், பல ஆண்டுகள் மிகக் கடுமையான சிறைத் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிடுகையில், கத்தார் ஒரு அரபு நாடாகவே இருந்தாலும், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் எனப் பிற நாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில், கொண்டிருப்பதால் திறந்த மனப்பான்மை கொண்ட நாடாகவே இது அறியப்படுகிறது. கத்தார் நாடு அரபு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது.
As prostitution is illegal in Qatar, anyone who engages in such activities is given a very severe prison sentence of several years. Compared to other Arab countries, even though Qatar is an Arab country, it is known as an open-minded country because it has a large number of other nationalities such as Europeans and Americans. Qat. ar has Arabic as its official language.
1 Comments
Super 💯💯💯
ReplyDelete