Did you know these facts about Japan

ஜப்பான் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா? 



ஜப்பான், ஆசியக் கண்டத்தில் அமைந்திருக்கும் பல தீவுகளால் ஆன நாடு. பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இது, சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகின்றது. உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி கொண்டதாக விளங்கும், ஜப்பான் நாட்டைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைத் தான், நாம் இந்தப் பதிவில் பார்க்க இருக்கின்றோம். 


கிழக்கு ஆசியப் பகுதியில் மொத்தம் 6852 தீவுகளைக் கொண்டிருக்கும் ஜப்பான், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையுடன், உலக மக்கள் தொகையில் பத்தாவது இடத்தில் உள்ளது. உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார சக்தி கொண்ட, ஜப்பானில் வாழும் மக்களின் சராசரி வாழ்நாள், உலகில் மற்ற பகுதிகளில் வாழும் மக்களைவிட அதிகம். ஜப்பான் பல தீவுக் கூட்டங்களைக் கொண்டு உருவான நாடு என்பதால், அதன் நிலப் பரப்பில் 70% வீதத்திற்கும் மேல், மலைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. 


எரிமலை வெடிப்புக்குப் பெயர் போன ஜப்பானில் 200 க்கும் அதிகமான எரிமலைகள் இருக்கின்றன. கல்வியறிவில் 100% கொண்டிருக்கும் நாடு ஜப்பான் மட்டும் தான். அதே சமயம் ஜப்பானில் வேலையின்மை என்பது, நான்கு சதவீதத்திற்கும் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் தயாரிக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உண்டு. அனிமேஷன் செய்யப்பட்ட ஜப்பான் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உலகில் அனிமேஷன் சார்ந்தபொழுது போக்குகளில், 60 சதவீதத்தைக் கொண்டு இருக்கிறது. 


அனிமேஷன் திரைப்படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுப்பதற்காக, பயிற்சி அளிப்பதற்கு மட்டுமே, 130 க்கும் அதிகமான பள்ளிகள் உள்ளன. ஜப்பானிய மக்கள் உலகின் அதிக சராசரி வாழ்நாளைக் கொண்டிருப்பதால், உலகில் உள்ள மொத்த வயதான மனிதர்களில் 21 சதவீதம் பேர் ஜப்பானில் தான் வாழ்கிறார்கள். ஆண்களின் சராசரி வாழ்நாள் 81 ஆண்டுகளாகவும், பெண்களின் சராசரி வாழ்நாள் 88 ஆண்டுகளாகவும் அமைந்திருக்கிறது. 


கிழக்கு ஆசியாவின் எல்லையில் அமைந்திருக்கும் நாடு என்பதால், உலகில் சூரிய உதயத்தை முதலில் காணும் நாடாக அமைந்து இருக்கிறது ஜப்பான். மொத்தம் 33 மில்லியன் மக்கள் தொகை கொண்டிருக்கும், டோக்கியோ நகரம் தான் உலகிலேயே மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் பெருநகரமாகும். உலகில் வேறு எந்த மக்களையும் விட, அதிகமான மீன் உணவுகளைச் சாப்பிடுபவர்கள் ஜப்பானியர்கள் மட்டும் தான். ஒரு வருடத்திற்கு 17 மில்லியன் டன்கள் மீன் உணவு ஜப்பானிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது. 


இது தவிர, கடல் உணவுகாளன "இறால் மீன்கள்" அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடுகளில், உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது ஜப்பான். ஜப்பானில் 50 லட்சத்திற்கும் அதிகமான "வெண்டிங் மிஷின்கள்" உள்ளன. கிட்டத் தட்ட ஜப்பானின் ஒவ்வொரு தெரு மூளைகளிளும் அமைக்கப்பட்டிருக்கும், இந்தத் தானியங்கி விற்பனை இயந்திரங்கள்மூலம் மது பானங்கள், காபி வகைகள், சிகரெட், காமிக் புத்தகங்கள், முட்டை போன்ற பொருட்கள் விற்பனையாளர் யாரும் இல்லாமல், பணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். 


மிகக் குறைவான கொலைக் குற்றங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஆனால், அதே சமயம் தற்கொலை செய்து கொள்ளும், அமானுஷ்யமான இடங்கள் ஜப்பானில் தான் அமைந்து இருக்கின்றன. "ஹைக்கூ கவிதைகள்" ஜப்பானில் உருவானவைகள் தான். மொத்தம் மூன்று வரிகளில் மட்டுமே அமைந்திருக்கும் இந்தக் கவிதைகள், உலகின் மிகக் குறுகிய கவிதை வடிவமாகப் பார்க்கப்படுகின்றது. ஜப்பானில் விற்கப்படும் 90% செல்போன்கள் "வாட்டர் புரூப்" கொண்டவைகளாகவே அமைந்திருக்கும். 


ஜப்பானியர்கள் குளிக்கும்போது கூடச், செல்போனை பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டு இருப்பதே இதற்குக் காரணம். ஜப்பானியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது மரியாதை நிமித்தமாகக் கைகுலுக்கிக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, சிரம் தாழ்த்தி வணங்குவதையே பாரம்பரிய வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மீது கொண்டிருக்கும் மதிப்பானது, இதன் மூலமாகவே ஆழமாக வெளிப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 

உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான சிட்டி என்று ஜப்பானின் "டோக்கியோ" நகரம் தான் அழைக்கப்படுகிறது. ஜப்பானில் 4 என்பது ஒரு ராசியே இல்லாத எண்ணாகக் கருதப்படுகிறது. ஜப்பான் மக்கள் அனைவரும் கடைகளில் ஏதாவது, பொருள் வாங்கினால் கூட மூன்று அல்லது ஐந்து பொருள்கள் தான் வாங்குவார்களே தவிர, 4 பொருட்கள் வாங்க மாட்டார்கள். ஜப்பானியர்கள் எதாவது கட்டடம் கட்டினால் கூட நான்கு மாடியில் நிற்காது. 


பெரும்பாலும் 4 என்ற எண்ணை அவர்கள் தவிர்த்து விடுவார்கள். ஜப்பானில் ரயில்கள், பேருந்துகள் பெரும்பாலும் தாமதமாகவே வராது. பேருந்துகள், ரயில்கள் அப்படித் தாமதமாக வருவது மிகவும் அபூர்வமானது. அப்படியே தாமதமாக வந்தாலும் 8 முதல் 15 வினாடிகள் தான் தாமதம் ஆகும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்துவிட்டால், நாம் எடுத்த டிக்கெட் பணத்தை திரும்பக் கொடுத்து விடுவார்கள். ஜப்பானியர்கள் அந்த அளவிற்கு நேரம் தவறாமல் இருப்பார்கள்.


EFFECT  DOWNLOAD



You have to wait 30 seconds.

BEATMARK

Post a Comment

0 Comments