லண்டன் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
லண்டன், உலகப் புகழ் பெற்றதும், பல நூறு ஆண்டுகள் பழமையானதுமான லண்டன் இங்கிலாந்து நாட்டின் தலைநகரம். நாம் அனைவரும், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று, பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் இடங்களில் லண்டனும் ஒன்று. உலகம் முழுவதும் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் தலைமையிடமான லண்டன் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பற்றித் தான் இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
கண்களைக் கவரும் கட்டுமானங்களுடன், பல இன, மொழி, பண்பாடு கொண்ட மக்களைக் கொண்டிருக்கும் இந்த லண்டன், கி.பி. 43 ஆம் வருடம் ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட நகரம். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும், லண்டனில் கிட்டத் தட்ட 300 மொழிகளைப் பேசுக்கூடிய பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
உலகின் வேறு எந்தப் பகுதிகளுக்கும் இந்தச் சிறப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் சிறந்த போக்குவரத்து மையமாக இருப்பதும் லண்டன் தான். உலகிலேயே அதிக அளவில் பன்னாட்டு விமானங்களையும், பயணிகளையும் சந்திக்கும் இடமாக லண்டன் திகழ்கிறது. மிகப் பெரிய விமான நிலையமான ஹீத்ரூ தவிர, ஏழு விமான நிலையங்களைக் கொண்டிருக்கிறது லண்டன். லண்டனில் "போஸ்டல் மியூசியம்" என்ற இடத்தில் அமைந்திருக்கும் பாதாள ரயில் தான், ஐரோப்பாவிலேயே மிகவும் பழமையானது.
நூறு வருடங்கள் பழமையான இதன் வழியாகத் தான், டன் கணக்கில் அன்றைய கடிதப் போக்குவரத்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் இருக்கும் பிரசித்தி பெற்ற இடங்களில் மிகவும் முக்கியமானது "பர்கிங்ஹாம் அரண்மனை". இங்கிலாந்து அரசு குடும்பத்திற்கு சொந்தமான இந்த அரண்மனையில் தான், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். லண்டனின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த பகுதியாகவும் இது அறியப்படுகிறது.
லண்டனில் இருக்கும் "பர்கிங்ஹாம் அரண்மனைக்கு" அருகில் அமைந்துள்ளது "வெஸ்ட் மினிஸ்டர்" நாடாளுமன்றம். கி.பி.1834 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்து பிறகு, மீண்டும் அதே வடிவமைப்பில் கட்டப்பட்டு இருக்கிறது. "டவர் ஆப் லண்டன்" கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, எதிரிகளிடமிருந்து நகரத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு வகையான ஆடை அணிகலன்களைக் கொண்டிருக்கும் இங்கே, பிரிட்டிஷ்காரர்கள் பல நாடுகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களும், பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. "பிக் பேண்ட் கடிகாரம்".
லண்டன் மாநகரத்தின் முக்கியமான, அடையாளங்களில் ஒன்று இந்தப் "பிக் பேண்ட் கடிகாரம்". "வெஸ்ட் மினிஸ்டர்" அரண்மனைக்கு வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும், இந்த நான்கு பக்கங்களைக் கொண்ட, இந்த மணிக் கூண்டு கி.பி.1858 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக் கூண்டு இது தான். பிரிட்டனின் நாடாளுமன்றம் இரவில் நடைபெற்றால், அதனைக் குறிக்கும் விதமாக, இந்தக் கடிகாரத்தின் உச்சியில் விளக்கு ஒன்று ஒளிரும்.
இது தவிர, லண்டனின் கூட்டுப் பிரார்த்தனைகள் போன்ற மதச் சடங்குகள், இதிலிருந்தே ஒளிபரப்பப்படுகின்றன. லண்டனின் மற்றொரு முக்கியமான ஒரு அடையாளம் "லண்டன் அப்"என்று அழைக்கப்படும் "பிரம்மாண்டமான சக்கரம்". இதன் ஒவ்வொரு கூண்டிலும் 25 பயணிகள் அமரும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதனை இங்கிலாந்து ராணி "விக்டோரியா"என்பவர் 1876 ஆவது வருடம், தன் கணவர் "ஆல்பர்ட்"என்பவரின் நினைவாக இதனை அமைத்திருக்கிறார்.
1700 டன் இரும்புகளைக் கொண்டு, 175 அடி உயரத்தில், வடிவமைக்கப்பட்டிருக்கும் இது, லண்டனில் அமைந்திருக்கும் பிரம்மாண்டங்களில் ஒன்று. லண்டன் மாநகரத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது "டவர் பிரிட்ஜ்". 43 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இது, சுமார் 200 அடி நீளம் கொண்டது. "புனிதப் பால் தேவாலயம்" லண்டனில் அமைந்திருக்கும் மிகப் பழமையான தேவாலயம் இது தான். ரோமில் அமைந்திருக்கும் தேவாலயத்திற்கு அடுத்த படியாக, ஐரோப்பாவில் அமைந்திருக்கிறது இது.
இது தவிர, பல உலகப் பிரபலங்களின் மெழுகுச் சிலைகளும் லண்டனில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. லண்டனில் நம் நாட்டின் உணவு விடுதிகள், கடைகள், கோவில்கள் என இங்குத் தமிழர்கள் வாழும் பகுதியும் மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாக அமைந்திருக்கிறது. பல்வேறு அருங்காட்சியகங்கள், நினைவாலயங்கள், பூங்காக்கள் எனப் பூலோக சொர்க்கம் போல் விளங்கும் லண்டனை பற்றிய மேலும் பல தகவல்களை மற்றொரு பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
EFFECT Download
0 Comments