Did you know these facts about Denmark | NEW48

 டென்மார்க் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா? 

டென்மார்க், ஐரோப்பிய கண்டத்தில் அமைந்திருக்கும் நாடான இது, ஆர்ட்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்தப் பகுதிகளின் தென் கோடியிலும், ஐஸ்லாந்தையும் ஒட்டி அமைந்திருக்கின்றது. மக்களின் வாழ்க்கைத் தரம், சுகாதாரம், மருத்துவ வசதி, அடிப்படையில், உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த, நாடாக அறியப்படும் டென்மார்க் பற்றிய, சில சுவாரஸ்யமான தகவல்களைத் தான், இந்த பதிவில் நாம் பார்க்கப் இருக்கின்றோம். 


ஜெர்மனி மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளான, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளையும், பனிப் பிரதேசமான, ஐஸ்லாந்தையும் எல்லைகளாகக் கொண்டிருக்கும் டென்மார்க், 43 ஆயிரத்து 94 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்ட நாடு. மொத்தம் 407 தீவுக் கூட்டங்களை உள்ளடக்கி இருக்கும் இந்த நாட்டில், 70 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். 


தனி நபர் வருமான ஏற்றத் தாழ்வு, மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றான டென்மார்க், 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட, தகவல் சேகரிப்பின் அடிப்படையில், உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் அறியப்படுகின்றது. கி.மு.  ஆயிரத்திற்கும் 1500 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள், வேடர்களாகவும், மீனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். உலகில் அதிக பனிப் பொழிவையும், மழைப் பொழிவையும் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான டென்மார்க், நாள் ஒன்றுக்கு 0.1 மில்லி மீட்டர் விகிதம் வருடத்திற்கு, 180 நாட்களுக்கும் மேலாக, மழையையும், பனிப் பொழிவையும், கொண்டிருக்கிறது. 


டென்மார்க்கில் கார்களைவிட, சைக்கிள் பயன்பாடுகள் என்பது இரண்டு மடங்கு அதிகம். அதன் தலை நகரான, "ஹோபன் ஹேக்கன்னசில்" தினமும் 15 லட்சத்திற்கும் அதிகமான சைக்கிள்கள் பயணம் செய்கின்றன. "உலகிலேயே அதிக எண்ணிக்கையில் நோபல் பரிசு பெற்றவர்களைக் கொண்டிருக்கும் நாடு டென்மார்க் தான்". சிறிய அளவிலான மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், இலக்கியம், மருத்துவம் எனப் பலத் துறைகளில் 14 நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளது இந்த நாடு. 


உலகிலேயே அதிக அளவில் காபி அருந்துபவர்கள் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு அடுத்த படியாக, மூன்றாவது இடத்தில் உள்ளார்கள் டேனிஸ் மக்கள்.  "ஒரு நாளைக்கு சராசரியாக நான்கு கப் காபி குடிக்கிறார்கள் இவர்கள்". ஆஸ்திரேலியா தீவு நாடாக இருந்தாலும் ஒரு கண்டமாக அறியப்படுவதால், கிரின்லாந்து தான் உலகின் மிகப் பெரிய தீவாக உள்ளது. தடிமனான ஒரு பனியால் சூழப்பட்டுக் காணப்படும், கிரீன்லாந்தின் ஒரு பகுதியானது, 1953 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் நாட்டின் ஒரு ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவும் இருந்து வருகின்றது. மொத்தம் 7 ஆயிரத்து 314 மைல்கள் நீளம் கொண்ட டெர்மார்க் நாட்டின் கடற்கரையானது, சீனப் பெருஞ்சுவரின் நீளத்தை விடவும் அதிகம். 


நடைமுறையில் டென்மார்க் நாட்டில் வாழும், அனைத்து மக்களுமே நீச்சல் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.ஏனெனில், டென்மார்க்கின் அனைத்து மாநில பள்ளிகளிலுமே,  நீச்சல் என்பது கட்டாயப் பாடத் திட்டத்தில் இடம் பெற்று இருக்கின்றது. டென்மார்க்கின் கடற்கரைப் பகுதியிலிருந்து, 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்த ஒரு, தங்குமிடமும் அமைந்திருக்காது. மேலும், தரைப் பரப்பில் எல்லைப் பகுதியாக ஜெர்மனியையும் மட்டுமே கொண்டு இருக்கிறது இந்த நாடு. 


உலகின் மிகப் பெரிய உணவு ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது டென்மார்க். சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தினமும் ஏற்றுமதி செய்கின்றது இந்த நாடு. "டேனிஷ் லூர் பாக்" என்ற எண்ணைய் உணவானது, உலகப் புகழ் பெற்ற உணவுப் பொருளாகும். உலகின் 100க்கும் அதிகமான நாடுகளில் இது விற்கப்படுகின்றது. இன்று உலகம் முழுவதும் "இன்டர்நெட் வீடியோ சாட்டினை சாத்தியமாக்கிய ஸ்கைப் ஆனது", "ஜேனஸ் ஃபிரிஷ்" என்ற டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான். 


பிறகு, 2011 ஆம் வருடம் "மைக்ரோசாப்ட்" நிறுவனத்திற்கு, அதனை அவர் 8.5 டாலர்களுக்கு விற்று விட்டார். அடுத்த ஐந்து லட்சத்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான, துல்லியமான நேரத்தைக் கணிக்கக்கூடிய, "வேர்ல்டு கிளாக்" ஆனது டென்மார்க் நகரின், "ஹோபன்ஹேக்கர்" நகரில் தான் அமைந்திருக்கிறது. டேனிஷ் கண்டுபிடிப்பாளரான, "ஜேம்ஸ் ஹோல்சன்" என்பவர் இந்தக் கடிகாரத்தினைக் கண்டுபிடிக்க 27 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டானது, டென்மார்க்கின் பிடித்தமான மற்றும் தேசிய விளையாட்டாக உள்ளது. 


1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், உத்வேகமான செயல் திறன் மூலமாக, உலக அளவில் அறியப்பட்ட டேனிஸ் கால்பந்து அணியானது, 1992 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறது. டென்மார்க் நாட்டில் "விவாகரத்து வழக்கு" என்பது மிகவும் சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்று. "ஐரோப்பாவிலே அதிக விவாகரத்து வழக்குகளைச் சந்திக்கும் நாடு இது தான்". 


20 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள்,  திருமணம் செய்து கொள்ளாமலேயே "பேப்பர்லஸ் மேரேஜ்" என்ற கலாச்சாரத்தைக் கொண்டு, வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ் பெற்ற மனிதரான "வால்ட் டிஸ்னி" ஒரு முறை, டென்மார்க்கின் "ஹோபன் ஹேக்கர்" நகரில் உள்ள, "டைவோலி கார்டன்களைப்" பார்வையிடச் சென்று இருக்கிறார். அப்பொழுது, இது போன்று அமெரிக்காவிலும் ஒன்றை உருவாக்க வேண்டும் எண்ணி, அவர் அமைத்தது தான் "டிஸ்னி லேண்ட்".

You have to wait 80 seconds.

Full Project

Post a Comment

0 Comments