ரஷ்யா பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
ரஷ்யா, உலகின் மிகப் பெரிய நிலப் பரப்பைக் கொண்டிருக்கும் ரஷ்யா, 1991 ஆம் வருடம் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ரஷ்யன் மொழியானது அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக இருந்தாலும், நாடு முழுவதும் 27 வெவ்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் தான் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாட்டைப் பற்றி, நீங்கள் இதுவரை தெரியாத, சில சுவாரசியமான தகவல்களைத் தான், இன்று நாம், இந்தப் பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
உலகின் மிக நீண்ட ரயில் பாதையைக் கொண்ட நாடு ரஷ்யா தான். "டிரான் சைபீரியன்" என்ற ரயில்வே அமைப்பானது, ரஷ்யாவின் பசிபிக் பெருங்கடல் எல்லையான, "விளாடிஓக்டாக்" என்ற இடத்தில் ஆரம்பித்து, ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோவை அடுத்த, "சென்பீட்டர்ஸ்பர்க்" என்ற இடம்வரை, பிரம்மாண்டமான நீளத்தைக் கொண்டிருக்கிறது. மொத்தம் 30 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இதன், இடைவிடாத பயண நேரமானது 152 மணி 27 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் மிகப் பெரிய துரித உணவுகளின் நிறுவனமான "மெக்டோனால்ஸ்", உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், ரஷ்யாவில் அமைந்திருக்கும் "மெக்டோனால்ஸ் ரெஸ்டாரண்ட்" தான், உலகிலேயே மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் 700 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு வசதி கொண்ட, இந்த உணவகம் தினமும் லட்சக்கணக்கான ரஷ்யர்கள் ஒன்று கூடும் இடமாகவும் இருக்கின்றது.
மொத்தம் 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவில், ஆண்களைவிடப் பெண்களே அதிகம். ஆண்களைவிட பத்து மில்லியன் அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் உள்ளார்கள். இரண்டாம் உலகப் போர் சமயத்தில், லட்சக்கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்கள் இறந்து போனதே, இந்த ஆண், பெண் விகிதாச்சாரக் குறைபாட்டிற்கு காரணம்.
ரஷ்யா தான் உலகின் மிகப் பெரிய நிலப் பரப்பு கொண்ட நாடு. ஒரு கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து நானூறு சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்ட ரஷ்யா, உலகின் மொத்த நிலப் பரப்பில் பத்தில் ஒரு பங்கினைக் கொண்டிருக்கிறது. இதற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் "கனடா" அமைந்திருக்கிறது. உலகின் அதிகமான பணக்காரர்களைக் கொண்டிருக்கும் தேசம் "ரஷ்யா" தான்.
உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத, அளவிற்கு அதிகமான பணக்காரர்களைக் கொண்டு இருக்கிறது, ரஷ்யாவின் தலைநகரான "மாஸ்கோ". இது, உலக பணக்காரர்கள் விகிதத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நியூயார்க் சிட்டியை விட, மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ரஷ்யா தான். ஒரு நாளைக்கு சராசரியாக 99 லட்சம் பேரல்கள், கச்சா எண்ணையை இந்த நாடு உற்பத்தி செய்கிறது.
சவுதி அரேபியா ஒரு கோடியே 9 லட்சம் பேரல்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், 2020 ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் உற்பத்தியில், இந்த இரு நாடுகளையும் அமெரிக்கா பின்னுக்கு தள்ளி விடும் என்று நிபுணர்களால் கூறப்படுகின்றது. அமெரிக்கா இப்பொழுது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மாஸ்கோவின் வேகம் தகுந்த மெட்ரோ ரயில் அமைப்பு தான், உலகின் மிக விரைவான, போக்குவரத்து வசதியைக் கொண்டது.
ஒவ்வொரு 90 வினாடிகளுக்கு, ஒரு முறையும், ரயில்களின் பயண நேரங்கள் திட்டமிடப்படுகின்றன. தினமும் 90 லட்சத்திற்கும், அதிகமான மக்கள் தங்களது நீண்ட பயணத்திற்காக, மெட்ரோ ரயிலைத் தான் பயன்படுத்துகிறார்கள். ரஷ்யாவின் "செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்" தான், உலகின் மிக ஆழமான ரயில் சுரங்கப் பாதை ஆகும். இது 100 மீட்டர் ஆழம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிகளவு "யூரேனியம்" வைத்திருக்கும் நாடு "ரஷ்யா" தான். அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் வீரியமிக்க தனிமம் இது.
அதிகளவு செறி ஊட்டப்பட்ட 695 டன் யுரேனியத்தை, பதுக்கி வைத்திருக்கிறது ரஷ்யா. 604 டன்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் மிகப் பெரிய குடிகாரர்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. ஒரு வாரத்திற்கு தோராயமாக 6.3 அவுண்ட்ஸ் அளவிற்கு, மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள் ரஷ்யர்கள். அமெரிக்கர்கள் 3.3 அவுண்ட்ஸ் அளவிற்கும், தென் கொரிய மக்கள் 13.7 அவுண்ட்ஸ் அளவிற்கு முதலிடத்தில் இருக்கிறார்கள். ரஷ்யாவில் அமைந்திருக்கும் "லேக் பேய்க்கல் "என்ற ஏரி தான், உலகிலேயே மிகத் தூய்மையான நீரினைக் கொண்டிருக்கும் ஏரி. 5387 அடி ஆழம் கொண்ட இந்த மிகப் பெரிய ஏரி, அமெரிக்காவில் அமைந்திருக்கும் "லேக் மிச் கேன்" என்ற ஏரியைவிட, இதன் ஆழம் மிகவும் அதிகம். சுற்றிலும் இயற்கை அறன்களாக மலைகளையும், காடுகளையும், கொண்டிருக்கும் இங்கே படகுகள் செல்ல அனுமதி இல்லை.


0 Comments