தாய்லாந்து பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
தாய்லாந்து, தென் கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் நாடு. வெள்ளை யானைகளின் தேசம் என்று அழைக்கப்படும் இது, சிறந்த சுற்றுலாத் தளமாகவும் விளங்குகின்றது. தாய்லாந்து பற்றிய, சில சுவாரசியமான தகவல்களைத் தான், இந்தப் பதிவில் நாம் காண இருக்கின்றோம். ஆசிய கண்டத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தாய்லாந்து, மியான்மர், லாவோஸ், கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளைத் தனது நில எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.
இந்தியா, இந்தோனேஷியா மற்றும் மலேசியா போன்ற நாடுகள், இதன் கடல் எல்லைகளாகவும் அமைந்திருக்கின்றன. "நாட்டின் மொத்த பரப்பளவில் 51 வது இடத்தில் இருக்கும் தாய்லாந்து, 64 மில்லியன் மக்கள் தொகையுடன் இருபதாவது இடத்தில் இருக்கின்றது". "உலகில் அதிக காலமாக இன்றளவும், மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் தாய்லாந்திற்கே முதலிடம்". "உலக அளவில் பௌத்த மத மக்கள் அதிகம் வாழும் தேசமும் தாய்லாந்து தான்". "இங்கே 95 சதவீதம் மக்கள் பௌத்த மதத்தைத் தான் பின்பற்றுகிறார்கள்". "தேவதைகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் "பாங்காங்க்" தான் தாய்லாந்தின் தலைநகரமும், மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகின்றது".
தாய்லாந்து நாட்டின் அரசியல் மற்றும் வணிகத்தின் மையப்பகுதியாக இருக்கும் "பாங்காங்க்" தாய்லாந்து நாட்டின் கலாச்சாரப் பிரதிபலிப்பாகவும் இருக்கின்றது. "இங்கே வாழும் மக்களில் 75 சதவீதம் பேர் தாய் இனத்தைச் சேர்ந்தவர்கள்". "14% பேர் சீனர்களாகவும், 3 சதவீதம் பேர் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் வாழ்கிறார்கள்". இது தவிர, பல்வேறு மலைவாழ் இனங்களைக் கொண்டிருக்கும் தாய்லாந்து, இயற்கை வாழ்விடங்களுக்கும், விவசாயத்திற்கும் சிறந்து விளங்குகின்றது. "தாய்லாந்தை வெள்ளை யானைகளின் தேசம் என்று அழைப்பார்கள்". "ஆனால், இதன் அர்த்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும் யானை என்பதில்லை". "இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வித அரிய வகை யானை இனத்தைத் தான் இது குறிக்கின்றது".
"மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இந்த வகை யானைகளைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு, வரிச் சலுகை அளிக்கப்பட்டு அரசு நிலங்கள் பரிசாகக் கொடுக்கப்படுகின்றன". தாய்லாந்து நாட்டில் வெள்ளை யானைகளைப் பயன்படுத்தி எந்த வேலையும் வாங்க மாட்டார்கள். எதற்கும் பயன்படாத இதனைப் கௌரவத்திற்காகவும், பெருமைக்காகவும், பெரும் பொருட்செலவில் இவர்கள் வளர்க்கிறார்கள். இந்து மதத்தில் இந்திரனின் வாகனமாக ஐராவதம் என்று அழைக்கப்படும் இது, பௌத்த மதத்தில் புத்தர் இதன் முதுகில் ஏறி, மாயா தேவியின் கருவில் சென்றதாக ஒரு நம்பிக்கை உண்டு. இதன் காரணமாகத் தான் தாய்லாந்து மக்கள் வெள்ளை யானையைப் புனிதமாக நினைக்கிறார்கள்.
"40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனித நாகரீகம் பரவி இருந்ததாகக் கூறப்படும் தாய்லாந்தில், கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த "கெமர்" பேரரசுவரையில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதம் வாரியான தாக்கங்களேப் பெரும்பளவு இருந்திருக்கின்றன". "கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த சமயத்தைக் கொண்ட பல இராஜ்ஜியங்கள் உருவாகின". "13 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தான், பௌத்த மதம் தாய்லாந்தில் வலுவான நிலையை அடையத் தொடங்கியது".
அதன் பிறகு, பல நூற்றாண்டுகள், பல்வேறு இராஜ்ஜியங்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்து வந்திருக்கின்றன. "தற்போதைய காலக் கட்டத்தில் ஐரோப்பியர்களின் செல்வாக்கு இங்கு அதிகம் இருந்தாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே, ஐரோப்பிய குடியேற்றம் ஏற்படாத ஒரே நாடு தாய்லாந்து மட்டும் தான்". ஆனால், மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு 19 ஆம் நூற்றாண்டுகளில், இங்குப் பெரும் மாற்றங்களையே ஏற்படுத்தி இருக்கிறது. "1932 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அடுத்து, முழுமையான மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்தக் காலக் கட்டத்தில் ராணுவ ஆட்சியும், ஜனநாயக முறையிலும் நடைபெற்று வந்தாலும், மரபு வழி அரசர்களைத் தான் இன்று வரை தலைவர்களாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்". இரண்டாம் உலகப் போரில், ஜப்பான், அமெரிக்கா என உலக நாடுகளுடனான போரில், பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, போரின் முடிவில் தாய்லாந்து அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்தது. "தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கியமான பங்கினைக் கொண்டு இருக்கிறது". "தாய்லாந்தின் 76 மாகாணங்களில் மரவள்ளிக் கிழங்குகள் பயிரிடப்படுகின்றன".
"உலகில் மிக அதிக அளவில் மரவள்ளிக் கிழங்குகள் ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்து முதல் இடத்தில் இருக்கிறது". "உலகின் மொத்தக் கிழங்கு உற்பத்தியில் தாய்லாந்திலிருந்து மட்டுமே, 70 சதவீதத்திற்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது". "தாய்லாந்து உலக மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது". தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கில், அமைந்திருக்கிறது இந்து சமயக் கடவுளின் ஐராவதம் கோவில். இத்தாலி நாட்டின் பளிங்குக் கற்களைக் கொண்டு, 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இருக்கிறது. இதனைச் சுற்றி திருமால், விநாயகர் என மற்ற இந்துக் கடவுள்களும் இடம் பெற்று இருக்கின்றன.
"பாங்காக்கில் அமைந்திருக்கும் மற்றொரு கோயில், வாட் ஃப்ராக் யூ என்பதாகும்". இந்தக் கோவில் அரசர், முதலாம் ராமவால் 1785 இல் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள மரகதப் புத்த சிலையானது தவம் செய்வது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசர் மட்டுமே இதன் அருகில் செல்ல அனுமதிக்கப்படுகிறார். "கோ ஃபை ஃபை ஐலேண்ட், தாய்லாந்தின் "கிராபி" என்ற பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் தீவு". "கோ என்றால் தாய்லாந்து மொழியில் தீவு என்று அர்த்தம்". இந்தப் பகுதியில் நிறைய தீவுக் கூட்டங்கள் இருந்தாலும், இந்தத் தீவில் தான் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். "2000 ஆண்டு வெளிவந்த டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த, "தி பீச்"என்ற திரைப்படம் இங்குத் தான் உருவானது".
"இது தவிர, "ஏழாம் அறிவு" படத்தில் வரும் "முன்னந்தி சாரல் நீ" என்ற பாடலும் இங்குத் தான் படமாக்கப்பட்டு இருக்கிறது". "இந்தியாவில் ஆங்க் பேக் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான "டோனி ஜா" தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் தான்". பெரும்பாலான தாய்லாந்து திரைப்படங்கள் கிராமப்புறங்களை மையப்படுத்தியே அமைந்திருக்கும். "தாய்லாந்தின் இயற்கை சுற்றுலாத் தலங்களில் புக்கர் தீவும் ஒன்று". சீன வம்சாவளி இனத்தைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் வசிக்கும், இங்கே உள்ள "ஷாம்கோக்" என்ற கோவிலில் ஆண்டுதோறும், அக்டோபர் மாத தொடக்கத்தில் அளகு குத்தும் திருவிழா நடைபெறுகிறது.
பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறும் இது, அங்கே மிகவும் பிரசித்தி பெற்றது. "தாய்லாந்தில் இருக்கும் மற்றொரு முக்கியமான நகரம் பட்டாயா". "தாய்லாந்து நகரத்தில் பாலியல் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடம் இது தான்". தாய்லாந்தில் பாலியல் தொழில் மிகவும் சகஜமான ஒன்று. இது அந்த நாட்டு அரசினாலேயே அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாங்காக் போன்ற நகரங்களில் உள்ள மஜாஜ் சென்டர்களில், பாலியல் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. இது தவிர, தாய்லாந்து எண்ணில் அடங்காத பல சுற்றுலாத் தலங்களைக் கொண்டு இருக்கிறது.
Beatmark Download
Effect Download

0 Comments