ஆதித்த கரிகாலன் | ஆதித்த கரிகாலன் வாழ்க்கை வரலாறு

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் சுந்தர சோழரின் மகனும், இராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய, சோழ தேசத்தின் ஒரு மாபெரும் வீரனாகிய ஆதித்த கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

இரண்டாம் பராந்தகச் சோழன் என்னும் சுந்தரச் சோழருக்கு இரண்டு மகன்கள். அதில் முதல் மகன் அவனுக்கு நிகரான வீரம் கொண்டவன் அவன் ஒருவனே. அவனே ஆதித்த கரிகாலன் ஆவான். மற்றொருவர் சோழம் என்று சொல்லுக்குப் பொருளாக விளங்கக்கூடிய தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ஆம், அவரே அருள் மொழி வர்மன் என்னும் இராஜராஜ சோழனாவார். இந்தக் காணொளியில் நாம், இரண்டாம் பராந்தக சுந்தர சோழரின் மகனும், பின்னாளில் தமிழகத்தின் தனிப் பெரும் அரசனாக உருவெடுத்த இராஜராஜ சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலனைப் பற்றிக் காண்கிறோம். வரலாற்றில் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், இவருக்கு அவர் வாழ்க்கையில் இறுதியில் என்ன தான் நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை மர்மமாகவே உள்ளது. பாருங்கள் அத்தகைய வீரனான ஆதித்த கரிகாலனைப் பற்றிக் காண்போம்.


ஆதித்த கரிகாலன், இன்றும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்குக் காரணம் அமரர் கல்கி இயற்றிய பொன்னியின் செல்வன் என்னும் நாவலில் ஆதித்த கரிகாலனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கதாபாத்திர நேர்த்தியும், அசாத்திய போர் திறனுமே காரணமாகும். அதுமட்டுமில்லாமல் இவருடைய வீரத்திற்கானச் சான்றுகளைப் இப்பதிவில் இப்போது நாம் காணலாம். வாருங்கள் அப்படிப் பட்ட மாவீரனான ஆதித்த கரிகாலன் என்ன தான் செய்தார் என்று பார்ப்போம். இரண்டாம் பராந்தக சுந்தர சோழரின் மூத்த மகனாக ஆதித்த கரிகாலன் இருந்தார். இதனால், சுந்தர சோழர் மன்னராக இருக்கும்பொழுது ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசராக இருந்தார். அன்றைய காலக் கட்டத்தில் வீட்டில் யார் மூத்த பிள்ளையாக இருக்கிறார்களோ அவருக்கே மன்னருக்கு அடுத்து இளவரசர் பட்டத்தைச் சூட்டி வைத்தனர். இந்த வகையில் தான் இரண்டாம் பராந்தக சுந்தர சோழர் மன்னராக இருக்கும்பொழுது ஆதித்த கரிகாலனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினார்கள். அந்த இளவரசர் பட்டம் ஒன்றும் அவ்வளவு எளிதாக ஆதித்த கரிகாலனுக்குக் கிடைக்க வில்லை. அவர் தந்தையின் கட்டளைகளை ஏற்று போர்க் களத்திற்கு சென்று, சோழ தேசத்தைச் சுற்றி உள்ள 58 தேசங்களில் எவருமே செய்யாத ஒரு வீர தீரச் செயலைச் செய்தார். 


இதனாலேயே பின்னாளில் இவரின் தலையைச் சோழ தேசத்தின் பட்டத்து இளவரசர் மணி மகுடம் தேடி வந்து அலங்கரித்தது. அத்தகைய போர்க் களத்தில் அப்படி என்ன தான் நடந்தது? ஆதித்த கரிகாலன் அப்படி என்ன தான் செய்தார்? என்பதை உங்களுக்குக் கூறாமல் நான் எங்குச் சென்று விடப் போகிறேன். சோழ தேசத்தை இரண்டாம் பராந்தக சுந்தர சோழர் ஆட்சி செய்து கொண்டிருக்கும்பொழுது, வடக்கில் காஞ்சி வரை இராஷ்டிர கூடர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் சோழர்களுக்குக் கீழ் இதனால் வரைக்கும் வரி செலுத்தி வந்த பாண்டியர்கள் இந்த மன்னரின் ஆட்சி காலத்தில் தலையெடுக்க ஆரம்பித்தனர். அவ்வளவு ஏன், சோழ தேசத்தின் மீது போர் தொடுக்கக் கூட ஆயத்தமானார்கள். ஆம், அப்போதைய பாண்டிய தேசத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தவன் வீரபாண்டியன் ஆவான். இவன் கண்டராதித்தர் காலத்தில் இருந்தே சோழர்களை எதிர்க்கவும், வீழ்த்தவும் நீண்ட நாட்களாக இவன் பெரும் படைகளைத் திரட்ட எண்ணி இருந்தான். ஆம், இவன் ஒரு படி மேலேச் சென்று சோழர்களுக்கு இனி மேல் பாண்டியர்கள் வரி செலுத்த மாட்டார்கள் எனவும், தனியாகப் பாண்டிய தேசத்தை விடுவித்துக் கொண்டார் வீரபாண்டியன். இது நடந்தது கண்டராதித்தரின் ஆட்சி காலத்தில் தான். இதனை நெய்தல் பட்டங்கள் இன்றும் சான்றாகக் கூறுகின்றன.


இத்தகைய காலக் கட்டத்தில் தான் இரண்டாம் பராந்தக சுந்தர சோழர் சோழ தேசத்தின் மன்னராகப் பொறுப்பேற்றார். அவர் சோழ தேசத்தின் எல்லைகளைத் தம் முன்னோர்களைப் போன்று விரிவடையச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்காகச் சில வியூகத்தின் மூலம் போர்ப் படைகளை அனைத்துத் திசைகளிலும் அனுப்ப வேண்டும் என்று நினைத்தார். அதில் ஒரு முயற்சியாகவே, மன்னரான இரண்டாம் பராந்தக சுந்தர சோழர், ஆதித்த கரிகாலனை அழைத்துச் சோழ தேசத்தை நீண்ட நாட்களாக வீழ்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் பாண்டிய மன்னன் வீரபாண்டியன். அது மட்டுமில்லாமல் சோழர்களுக்கு இனிப் பாண்டியர்கள் வரி செலுத்த மாட்டார்கள் எனவும் கூறியுள்ளான் அந்த மதுரையை ஆண்டு கொண்டிருக்கும் வீரபாண்டியன். அவனை வீழ்த்தித் திரும்பவும் சோழர்களுக்குக் கீழ் வரி செலுத்த வைத்தாக q qq கரிகாலா என்கிறார் மaன்னரான சுந்தர சோழர்.


இதன் பிறகு, ஆதித்த கரிகாலன் அரசே சோழ தேசத்தின் புகழை நிலைநாட்டவும், சோழர்களின் வீரத்தைப் பறைசாற்றவும் தகுந்த பாடத்தைக் கற்பிப்போம் கட்டளையிடுங்கள் அரசே என்கிறார் ஆதித்த கரிகாலன். இதனை அடுத்து மன்னரான சுந்தர சோழன் ஆம், கரிகாலா மதுரை நாம் கைப்பற்றியே ஆக வேண்டும் ஆனால், பின்பு ஆதித்த கரிகாலன் என்ன ஆனால், அரசே இதனைக் கேட்ட சுந்தர சோழர் பாண்டியர்களை வீழ்த்த நாம் படைகளை அனுப்பினால் அவர்களுக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து படைகள் மதுரை நோக்கி வருமே என்றார் மன்னரான சுந்தர சோழர். இதன் பின்பு, ஆதித்த கரிகாலன் அரசே இவ்வளவு தானா இரு பெரும் திசைகளிலும் வீரத்தையே தன் முழு மூச்சாய்க் கருதும் சோழப் படைகளை அனுப்பலாமே அரசே என்றார் ஆதித்த கரிகாலன். இதனைக் கேட்ட மன்னர், ம்ம் எவருமே எதிர்பார்க்காத வியூகம் தான் கரிகாலா. ஆனால் ஒரு பெரும் படையை நீ வழி நடத்திச் செல்வாய். மற்றொரு பெரும் படையை யார்? வழி நடத்திச் செல்வார்கள் என்று மன்னர் சுந்தர சோழர், ஆதித்த கரிகாலரிடம் கேட்டார்.


இதன் பின்பு ஆதித்த கரிகாலன் அரசே, நம் சோழ தேசத்தில் வீரத்திற்குப் பஞ்சமா அல்லது படை வீரர்களுக்குத் தான் பஞ்சமா? விண்ணும் மண்ணும் கூட ஒரு நிமிடம் அதிசயத்து நிற்கும் இவனின் வீரத்தை பார்த்து, அப்படிப் பட்ட வீரத்தை கொண்ட எனது தம்பியான அருள்மொழிவர்மனை விடவா? இந்த மாபெரும் சோழப் படைகளை வழி நடத்திச் செல்ல ஒரு மாவீரன் இந்தச் சோழ தேசத்தில் இருக்கிறான். இதன் பின்பு, அரசர் ஆதித்த கரிகாலா அருள்மொழிவர்மன் இருப்பது என் சிந்தனை எட்டவில்லையே! அவனைத் தன்னந்தனியாக இலங்கைக்கு அனுப்பினால் தனி ஒருவனாக இலங்கையை தன் வசம் கொண்டு வந்து விடுவானே என்கிறார் மன்னரான இரண்டாம் பராந்தக சுந்தர சோழர். இதன் பிறகு இரு பெரும் படைகளை, இரு பெரும் திசைகளில் தன்னுடைய இரு மகன்களைப் படைத் தளபதிகளாக வைத்து அனுப்ப எண்ணுகிறார். அதில் முதல் கட்டமாகத் தன் தந்தையின் கட்டளையை ஏற்றுச் சோழ தேசத்திலிருந்து, ஒரு பெரும் படையுடன் வீரபாண்டிய வீழ்த்தச் சோழ தேசத்திலிருந்து மதுரையை நோக்கிப் புறப்படுகிறார் ஆதித்த கரிகாலன். அப்போரில் அவருக்கு வயது வெறும் 16 வயது தான். இப்போர் இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் சேவூர் என்ற இடத்தில் நடைபெறுகிறது. இப்போர்க் களத்தில் ஒரு புறம் சோழப் படைகள் இருக்க, மறு புறம் வீரபாண்டியனின் படைகள் வந்து நின்றன. அப்போர்க் களத்தில், எங்கு இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழர் படையெடுத்து வந்தால் தோற்று விடுவார் என்று எண்ணி, இச்சிறுவனைப் போர்க் களத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறாரோ என்று ஏளனமாகப் பேசினார்கள் பாண்டியர்கள்.


இதனை அடுத்துப், போர்க் களத்தின் நடுவே சோழப் படைத் தளபதியின் குரலானது, எங்களது மன்னரான இரண்டாம் பராந்தக சுந்தர சோழர் வரவில்லை, அதற்குப் பதிலாகச் சோழ தேசத்தின் புலிக் கொடியை ஏந்தி, வீரமிக்க குட்டிப் புலி வந்துள்ளது என்று முழக்கமிட்டார். இதன் பின்பு, போர்க் களத்தில் சத்தம் இல்லாமல், ரத்தம் மட்டும் வீழ்ந்து கொண்டிருந்தது. இரு பெரும் படைகளிலும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வீரர்கள் வேளுக்கும், வாளுக்கும் பலியாகினர். இருந்த போதும் பாண்டியர்களின் ஆதிக்கமே அப்போர்க் களத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தான் பாண்டிய மன்னன், சிறுவன் என நினைத்த அந்தக் குட்டி புலியானது, எப்ப பெரும் படைகள் எதிர்த்து வந்தாலும், ஏன் சீறி வரும் குதிரைகளைக் கூட, தாண்டிச் சீறிச் சென்றது. ஆம், எதிரில் வந்து கொண்டிருந்த அனைத்து பாண்டியப் படைகளையும் தன்னுடைய கூரிய வாளினால், பாண்டியப் படைகளைக் கொன்று குவித்து, ரத்தம் தெறிக்க சுத்தம் செய்துக் கொண்டிருந்தார் ஆதித்த கரிகாலன். இதனை அடுத்து அப்போர்க் களத்தில் தன்னைச் சிறுவன் என நினைத்துக் கொண்டிருந்த வீரபாண்டியனை நேருக்கு நேராகச் சந்திக்க எண்ணினான் ஆதித்த கரிகாலன்.


இதனைக் கண்ட வீரபாண்டியன் சோழ தேசத்தின், படைத் தலைவன் பாண்டியர்களை எதிர்க்கக் குட்டிப் புலி, வந்திருக்கிறது என்று தானே கூறினான். ஆனால் வந்திருப்பதோ, காட்டில் அனைத்து மிருகங்களையும் தனது கம்பீரத்தால், சிங்கத்தைப் போன்ற தனி ஒருவனாக, அனைவரையும் கொன்று குவித்து வருகிறானே இவன், என வியந்தார் பாண்டிய மன்னரான வீரபாண்டியன். இதன் பின் பாண்டிய மன்னனான வீரபாண்டியனும், ஆதித்த கரிகாலனும் போர்க் களத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இப்போரில் இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையானது மிகக் கடுமையாக இருந்தது. இந்தச் சண்டை நடுவில் ஆதித்த கரிகாலனின் வாலில் ரத்தம் மட்டுமே படிந்து கொண்டிருந்தது. ஆம், ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையைச் சீவினார். இக்கணம் வீரபாண்டியனின் தலையானது மண்ணில் சரிந்து விழுந்தது. இதனை அடுத்து அப்போரில் சோழர்கள் வெற்றி அடைந்தனர். இப்போரில் அடைந்த வெற்றியைச் சிறப்பிக்க வரலாற்றில், எந்த ஒரு மன்னரும் செய்யாத ஒரு செயலைச் செய்யத் துணிந்தார் ஆதித்த கரிகாலன். ஆம், அப்போர்க் களத்தில் சரிந்து விழுந்த வீரபாண்டியன் தலையை எடுத்துக் கொண்டு பல்லக்கில் வைத்துத் தஞ்சை முழுவதும் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வரச் செய்தார் ஆதித்த கரிகாலன். 


பின்னர் இச்செயலானது, சோழ தேசத்தின் மீது படையெடுக்க நினைத்த அனைத்து மன்னர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும், மிரட்டலாகவும் இருந்தது. ஏன், இச்செயலுக்குப் பின், சோழ தேசத்தைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் சோழ தேசத்தின் மீது படையெடுத்து வரச் சற்று தயங்கியே நின்றனர். ஆம் பெரும் 16 வயதில் சோழ தேசத்தின் பெரும் படையைத் தலைமையேற்றுச் சென்று பாண்டிய மன்னனான வீரபாண்டியனின் தலையைத் துண்டித்தவன் அதே ஆதித்த கரிகாலன் தான். இதனைத் திருவாலங்காடு செப்பேடு இன்றும் வீரத்துடன் எடுத்துரைக்கிறது. இதுவரை சோழ தேசத்தை ஆண்ட அனைத்து மன்னர்களின் வீரமும் ஒரு சேர ஒருங்கிணைந்து பிறந்தவர் தான் இந்த ஆதித்த கரிகாலன் என்று சோழ தேசத்தின் மக்கள் நினைத்தார்கள். தமிழகத்தின் தெற்கே வீரபாண்டியின் தலையை எடுத்து விட்டு, வடக்கு நோக்கிக் காஞ்சியில் சோழ தேசத்தின் காவலனாகவும், அரணாகவும் இருக்க ஆதித்த கரிகாலனுக்கு இளவரசர் பட்டம் சூட்டி, இராஷ்டிர கூடர்களை எதிர்க்கக் காஞ்சிக்கு அனுப்பி வைக்கிறார் இரண்டாம் பராந்தக சுந்தர சோழர்.


அவர் இராஷ்டிர கூடர்களை எதிர்க்கச் சென்றதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. ஆம், வஞ்சக முறையில் இராஜாஜித்த சோழனை வீழ்த்தியதும் தான். இவரே சுந்தர சோழருக்குப் பின் மன்னராக அறிவிக்கப்படும் நிலையில் இருந்தார். ஆனால், இராஷ்டிர கூடர்களையும் வீழ்த்தி விட்டு மன்னராக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தார் ஆதித்த கரிகாலன். மற்றொரு புறம் இலங்கைப் படைகளின் கொட்டத்தை அடக்கவும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் செங்கோல் மற்றும் கிரீடத்தை கைப்பற்றவும் இராஜராஜ சோழனை இலங்கைக்கு அனுப்பினார் மன்னரான இரண்டாம் பராந்தக சுந்தர சோழர். இவ்வாறாகத் தெற்கே வீரபாண்டியனின் தலையை எடுத்த மாபெரும் வீரனான ஆதித்த கரிகாலன் வடக்கே காஞ்சியிலும், மற்றொரு புறம் சோழ தேசத்தின் செல்லப் பிள்ளையான அருள்மொழி வருமன் என்னும் இராஜராஜ சோழன் இலங்கைக்கு படை எடுத்துச் சென்றிருந்தனர். ஆம், இந்த நிலையில் தஞ்சையின் தங்க சிம்மா சமாசனத்தில் சின்கமெனக் கம்பீரமாக அமர்ந்திருந்தார் இரண்டாம் பிராந்தக சுந்தர சோழர்.


ஒரு புறம் வீரபாண்டியனின் தலையைத் துண்டித்த ஆதித்த கரிகாலனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று சபதம் எடுத்திருந்தனர் பாண்டிய தேசத்து  மன்னனின் அதிகாரிகள். இவர்களைத் தான் பாண்டிய தேசத்தின் ஆபத்து உதவிகள் என்று அழைப்பார்கள். மற்றொரு புறம் சோழ தேசத்தின் ஆட்சிக்குள்ளேயே எண்ணற்ற குழப்பங்கள் நடந்தன. மன்னரான சுந்தர சோழனுக்கு பிறகு, கண்டராதித்தரின் மகனான உத்தமச் சோழன் என்னும் மதுராந்தகச் சோழருக்குத் தான் இளவரசர் பட்டம் சூட்டி இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் சோழ தேசத்தில் சூழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தது. இதனை எதையுமே அறியாமல் இளவரசரான ஆதித்த கரிகாலனோ காஞ்சியில் தன் தந்தை சுந்தர சோழருக்காக ஒரு பொன் மாளிகை ஒன்றைக் கட்டிக் கொண்டு இருந்தார். அதன் பின்பு, தஞ்சையில் உள்ள தன் தந்தையைக் காஞ்சிக்கு அழைத்து வர தஞ்சைக்குச் சென்றார் ஆதித்த கரிகாலன். தஞ்சைக்கு வந்த ஆதித்த கரிகாலன் அரண்மனையில் எவரும் எதிர்பார்க்காத வகையில் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.  ஆம், சிறுவயதிலேயே போர்க்களத்திற்குள் புகுந்து பாண்டியப் பேரரசின்  மன்னனான வீரபாண்டியனின் தலையை எடுத்தும், அதே ஆதித்த கரிகாலனைத் தஞ்சைக்கு வரவழைத்து, சூழ்ச்சியின் அடிப்படையில் அவரைக் கொன்றார்கள். அப்பெரும் வீரனான ஆதித்த கரிகாலனை யார் கொன்றது?  அவருக்கு அடுத்து அரியணை ஏறியது யார்? அந்த மன்னர்கள் என்ன செய்தார்கள்? என்று நம்முடைய அடுத்தடுத்தப் பதிவுகளில் பார்ப்போம்.


Effect Download



Post a Comment

0 Comments