அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் மதுராந்தகச் சோழன் என்னும் சோழ மன்னனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். நாம் சென்ற பதிவில் சோழ தேசத்தின் இளவரசராக இருந்த மதுரை ஆண்ட வீரபாண்டியனின் தலையைக் கொண்ட ஆதித்த கரிகாலன் பற்றிக் கண்டோம். இந்தப் பதிவில் கண்டராதித்தரின் மகனும், இராஜராஜ சோழனின் சித்தப்பனுமாகிய உத்தமச் சோழன் என்னும் மதுராந்தகச் சோழனைப் பற்றிக் காண்போம். சென்றப் பதிவில் ஆதித்த கரிகாலன் எப்படி இறந்தார்? அவரை யார் கொன்றார்கள்? குறித்து இனி வரும் பதிவுகளில் கூறுகிறேன் என்று கூறியிருந்தேன். சரி, அனைவரும் வாருங்கள். சோழ தேசத்தின் இளவரசனான ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கு பின் யார் மன்னர் ஆனார்கள், அப்போது சோழ தேசத்தின் நிலை என்ன என்பது குறித்து காண்போம்.
பாண்டிய மன்னரான வீரபாண்டியனின் தலையைக் கொய்த ஆதித்த கரிகாலன் மிகப் பெரும் வீரமிக்க செயலைச் செய்து விட்டு, தன் தந்தையின் கட்டளையை ஏற்றுக் காஞ்சிக்கு சென்று இராஷ்டர கூடர்களின் கொட்டத்தை அடக்க எண்ணிக் கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் தான், தன் தந்தையான இரண்டாம் பாரந்தகச் சுந்தர சோழருக்குக் காஞ்சியில் ஒரு பொன் மாளிகை ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தார். இவர் இங்குப் பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்க மற்றொரு முனையில் அருள்மொழி வர்மன் சோழப் படைகளை வழி நடத்தி இலங்கைகுச் சென்றார்.
இந்த நிலையில் தஞ்சையின் மன்னராகச் சுந்தர சோழர் மட்டுமே இருந்தார். காஞ்சியில் தான் கட்டிய பொன் மாளிகையில் தன் தந்தையை அமர வைக்க வேண்டும் என்று நினைத்தார் ஆதித்த கரிகாலன். இதற்காகக் காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலன் தஞ்சைக்கு எத்தனையோ ஓலைகள் அனுப்பியும், அதற்குப் பதில் மொழி கூறும் விதமாகத் தஞ்சையிலிருந்து காஞ்சிக்கு எந்த ஒரு பதில் ஓலையும் ஆதித்த கரிகாலனுக்கு திரும்ப வரவில்லை. இதிலிருந்தே இளவரசர் ஆதித்த கரிகாலன் தலைநகர் தஞ்சையில் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டான். மாற்று வழியாகத் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒரு வீரனாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் மிகவும் புத்திசாலியாக இருக்கும் ஒரு வீரனிடம் ஒலையைக் கொடுத்துத் தஞ்சைக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணினான் ஆதித்த கரிகாலன்.
அந்த ஓலை தஞ்சை போய்ச் சேர்ந்ததாதா? அந்த எடுத்துச் சென்ற வீரன் எப்படி? யாருக்கும் தெரியாமல் கொண்டு போய்ச் சேர்த்தான்? அந்த ஓலையை எடுத்துச் சென்ற வீரனின் பெயர் நான் சொல்லி ஏன் உங்களுக்குத் தெரிய வேண்டும். எத்தனை முறை ஓலை அனுப்பியும் தஞ்சையிலிருந்து பதில் ஓலைகள் வராததால், இளவரசனான ஆதித்த கரிகாலன் தஞ்சைக்கு தானே வர வேண்டும் என்று எண்ணினான். பின்னர் தஞ்சை வந்த ஆதித்த கரிகாலன், இளவரசாக இருக்கும்போதே சூழ்ச்சியின் மூலமாக அரன்மையில் வைத்துக் கொல்லப்படுகிறார். அவரின் இறப்பு குறித்த விஷயங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது. அவரை யார் கொலை செய்தார்கள்? என்பதை கூடிய விரைவில் நான் ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.
இளவரசராக இருந்த ஆதித்த கரிகாலன் இறந்த பிறகு சோழ தேசத்தில் எண்ணற்ற குழப்பங்கள் நிலவின. ஏன், மன்னரான இரண்டாம் பராந்தக சுந்தர சோழன் தன் முதல் மகனை இறந்ததாலும், அவனைக் கொன்றவர்கள் யார் என்று தெரியாமல் அவர்களை ஏதும் முடியாததாலும், மனமுடைந்த நிலையில் கி.பி.973ல் மரணிக்கிறார் இரண்டாம் பராந்தக சுந்தர சோழர். ஆதித்த கரிகாலன் இறந்த பிறகு, அவர் தம்பியான அருள்மொழி வர்மனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டிருந்தது. இதனைச் செய்தவர் மன்னராக இருந்த இரண்டாம் பராந்தக சுந்தர சோழர் ஆவார். ஆனால் மற்றொரு முனையில், கண்டராதித்தனின் மகனான மதுராந்தக சோழன் என்னும் உத்தம சோழர் சோழ தேசத்தின் சிம்மாசனத்தில் மன்னராக உட்கார ஆசைப்பட்டிருந்தார். இவர் இராஜராஜ சோழனுக்கு சித்தப்பா ஆவார். இவரை மன்னராக்கவே சோழ தேசத்திற்குள் ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தான் ஆதித்த கரிகாலன் இறந்த பிறகு, அவர் தம்பியான அருள்மொழி வர்மனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது. அருள்மொழி வர்மன் இளவரசராகப் பட்டம் சூட்டப்பட்டதிலிருந்து சோழ மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். மற்றொரு முறை எப்படியாவது மதுராந்தக சோழனை மன்னராக்கி விட வேண்டும் என்று நினைத்த சோழ தேசத்தின் அதிகாரிகள் சூழ்ச்சியில், செயல்பட ஆரம்பித்தனர். அதுமட்டுமல்ல அருள்மொழி வர்மன் இளவரசர் ஆனது அந்தக் குழுவிற்குப் பிடிக்காமல் இருந்தது. ஆனால் மக்களோ ஏன், ஒரு புறம் ஆதித்த கரிகாலனைப் பதவிக்காக உத்தம சோழர் தான் கொன்றார் எனவும், சோழ மக்கள் சந்தேகப்பட்டனர். இந்த நிலையில் மன்னரான இரண்டாம் பராந்தகச் சுந்தரச் சோழர் இறந்த பிறகு, சோழ தேசத்தின் மன்னராக அருள்மொழி வர்மனையே மன்னராக்க அனைவரும் எண்ணி இருந்தனர்.
ஆனால் சோழ தேசத்தில் நடந்து கொண்டிருந்த அனைத்துக் குழப்பங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார் அருள்மொழி வர்மன். இந்த நிலையில் அருள்மொழி வர்மன் தனது சித்தப்பாவான மதுராந்தகச் சோழன் என்னும் உத்தம சோழருக்கு மன்னராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது மற்றொரு புறம் சோழ தேசத்தை அழித்தாக வேண்டும் என்று எண்ணிய வீரபாண்டியனின் தலையைக் கொய்த ஆதித்த கரிகாலனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று நினைத்த பாண்டிய தேசத்தின் ஆபத்து உதவிகள் இன்னும் சோழ தேசத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்று எண்ணி இருந்தார் இளவரசரான அருள்மொழி வர்மன். சோழ தேசத்தில் இவ்வளவு குழப்பங்கள் சோழ தேசத்தில் இருக்கும்போது தான் மதுராந்தகச் சோழர் அரசர் பதவிக்கு ஆசைப்பட்டுக் கொண்டு இருந்தார்.
இதனை அறிந்த அருள்மொழி வர்மன் ஆதித்த கரிகாலன் இறந்த பிறகு, சுற்றி இருந்த எந்தத் தேசமும், எந்த நேரத்திலும் சோழ தேசத்தின் மீது படை எடுக்கலாம். இந்த நேரத்தில், நான் மன்னரால் என் சித்தப்பாவான மதுராந்தகச் சோழர் வருத்தப்படுவார். அதுமட்டுமின்றி சோழ தேசத்தின் ஒரு சில அதிகாரிகளால் சோழ தேசத்திற்குள்ளேயே ஏதாவது ஒரு குழப்பமும் ஏற்படலாம் என்று எண்ணி இருந்தார் இளவரசரான அருள்மொழி வர்மன். மற்றொரு புறம் ஆனால், மக்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தார் அருள்மொழி வர்மன். ஏனெனில் மக்களின் செல்வனாம் இந்தப் பொன்னியின் செல்வன் அடுத்ததாக மன்னர் ஆவார் நம்மைச் சிறப்பாக ஆட்சி செய்வார் என்று தவமாய் தவமிருந்தனர் சோழ தேசத்தின் மக்கள். ஆனால் இவை அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இளவரசர் அருள்மொழி வர்மன் மதுராந்தக சோழர் என்னும் உத்தம சோழருக்குச் சோழ தேசத்தின் மகுடத்தைச் சூட்டி மன்னர் ஆக்கினார் அருள்மொழி வர்மன்.
இது நடந்தது கி.பி.973 ஆம் ஆண்டு. சோழ தேசத்தின் செல்லப் பிள்ளையும், சோழ தேசத்தின் இளவரசனமாகிய அருள்மொழி வர்மனே மதுராந்தகச் சோழரை மன்னராக்கியதால் மக்களிடமிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் அவருக்கு வரவில்லை. இதன் பின்பு மன்னரான உத்தம சோழன் இளவரசராக இருந்த ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் மீது, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் உத்தம சோழர் சோழ தேசத்து மக்களின் சந்தேகதுக்குரிய நபராகினார். அது மட்டுமின்றி அவரின் ஆட்சியின் மீது சோழ தேசத்தின் மக்களுக்கு அவ நம்பிக்கையும் ஏற்பட்டது. இதனை மறுக்கும் விதமாக உத்தமசோழர் தனது கருத்தை அடிக்கடி தெரிவித்தாலும் மக்கள் அதனை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. சோழ தேசத்து மக்கள் இளவரசரான அருள்மொழி வர்மனே தங்களுக்கு மன்னராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தான் இளவரசர் ஆன அருள்மொழிவர்மன் தன்னுடைய நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை விடுகிறார். இளவரசர் ஆன அருள்மொழிவர், ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை சோழ தேசம் கண்டிப்பாகப் பழிவாங்கும் சோழ தேசம் முழுவதும் பாண்டிய ஆபத்துதவிகள் ஊடுருவி இருக்கிறார்கள் அதுமட்டுமின்றி நாம் சோழ தேசத்தை வீழ்த்த வடக்கே எல்லைகளில் இராஷ்டிரக் கூடர்களும், தெற்கே சிங்களப் படைகளும் நம் மீது படையெடுக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. சோழ தேசத்திற்குள்ளேயும் சோழ தேசத்தைச் சுற்றியும் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது மக்களாகிய நீங்கள் ஆளும் மன்னனின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தால், சோழ தேசம் அழிவை நோக்கிச் சென்று விடும். உடம்பில் 96 புண்களுடன் இருந்த போதும் போர்க் களத்திற்கு புகுந்து சோழர்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தவர் விஜயாலயச் சோழன். தன் தந்தையான விஜயாலயச் சோழன் தொடங்கிய அத்தியாயத்தை அடுத்த எல்லைக்கு விரிவடை செய்தவர் இம்மன்னர் ஆம் ஆதித்த சோழன்.
அதன் பின்பு அரியணை ஏறிய காவிரியின் இரு கரை ஓரங்களிலும் 108 சிவாலங்கள் எழுப்பிய அவரது மகனான முதலாம் பராந்தகச் சோழன் அவரது ஆட்சியை நிலை நிறுத்தியும், சோழ தேசத்தின் புகழையும் பின்னாளில் அரியணை ஏறிய, அவரது மகனான சோழ தேசத்து மக்களின் தண்ணீர் பிரச்சனையையும், தாகத்தையும் தீர்க்கும் விதமாகப் போர்க் களத்திற்கு செல்லும் வீரர்களை வைத்து, ஒரு ஏரியை வெட்டிய இராஜாதித்த சோழரின் வழிவந்த, சிவனின் மீது உள்ள அளவு கடந்த பற்றினால், திரும்பும் திசை எல்லாம் சிவனுக்கு சிவாலயங்கள் எழுப்பிய கண்டராதித்தரின் வழிவந்த அவரது மகனான மதுராந்தகச் சோழனின் ஆட்சி காலத்தில் மக்களாகிய நீங்கள் அவரின் ஆட்சியின் மீது அவ நம்பிக்கை கொண்டு இருந்தால், அத்தேசம் அழிந்து போனது என்ற நிலை வேண்டாம் என்று இராஜராஜ சோழன் மக்களிடம் கைகூப்பி வேண்டிக் கேட்டுக்கொண்டார்.
இதனைக் கேட்ட சோழ தேசத்தின் இளைஞர்களின் கண்கள் சிவந்து நீரானது ததும்பி நின்றன. சோழ தேச மக்களும் எதுவும் பேச முடியாமல் நின்றனர். இதன் பின்பு மதுராந்தக சோழர், அருள்மொழி வர்மா இனி சோழ தேசத்தின் மன்னராக நீயே இருந்து விடு. இந்த மணிமகுடம் என் தலையில் இருப்பதை விட, உன் தலையில் இருப்பதே இந்த மணிமகுடத்திற்கும் சோழ தேசத்திற்கும் சிறப்பு என்று மதுராந்தகச் சோழர் கூறினார். இதனைக் கேட்ட அருள்மொழி வர்மர் மதுராந்தக சோழர் கூறியதைக் கேட்டு மறுத்துவிட்டு நின்றார். பின்பு, அருள்மொழி வர்மர் மன்னராக இருந்தபடி நீங்களே சோழ தேசத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் சித்தப்பா. சோழ தேசத்தின் படைத்தலைவனாக இருந்து, சோழ தேசத்தின் எல்லையில் நம்மை வீழ்த்தக் காத்திருக்கும் படைகளை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் அருள்மொழி வர்மன்.
இதன் பின்பு, மதுராந்தகச் சோழரின் ஆட்சிக் காலத்தில் இராஷ்டர கூடர்களுடன் போர் ஏற்பட்டது. இப்போரில் திருவண்ணாமலை முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளைக் கைப்பற்றியது சோழ தேசம். இப்போரே உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போராகும். இப்போரில் படைத் தளபதியாக இருந்து, வழி நடத்திச் சென்று வெற்றிகளைக் குவித்தவர் அருள்மொழி வர்மன் ஆவார். இதன் பின்பு, உத்தம சோழன் சோழ தேசத்தில் புதிய நாணயங்களை வெளியிட்டார். அந்த நாணயங்களைச் சோழ தேசத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பியும் வைத்தார். இதனை இன்னும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, உத்தம சோழன் தன் தந்தையை போலவே சிவ பக்தராக இருந்ததால், சோழ தேசத்தின் பல சிவாலயங்களை புதுப்பித்துச் சிறப்பித்தார்.
இச்செயல் சோழ தேச மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதுமட்டுமின்றி உத்தம சோழன் சோழ தேசத்து மக்களுக்கு ஆடுகள், மாடுகள் செல்வங்கள் என அனைத்தையும் தானமாக வழங்கினார். இதனால் உத்தமசோழரையும் சோழ தேசத்து மக்கள் கொண்டாடினார்கள். ஒரு புறம் சோழ தேசம் இப்படி மகிழ்ச்சியில் இருக்க, மற்றொரு புறம் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, சோழ தேசத்து மக்களின் கனவு ஏன், நம்முடைய கனவும் மெய்ப்படும் நாளும் வந்தது. ஆம், இளவரசராக இருந்த அருள்மொழி வர்மன் என்னும் இராஜராஜ சோழன் மன்னராகும் காலமும் வந்தது. ஆம், அவர் மன்னராவதை நம்முடைய அடுத்தப் பதிவில் பார்ப்போம். தன் அண்ணனைக் கொன்றவர்களை அடுத்ததாக அரியணை ஏறிய அருள்மொழி வர்மன் என்ன செய்தார் என்பதையும், அது மட்டுமின்றி, அருள்மொழிவர்மன் மன்னரானதும் சோழ தேசத்தைச் சுற்றி இருந்த அனைத்துத் தேசங்களும் சற்று நடுக்கத்துடனே பார்த்துக் கொண்டிருந்தது. மதுராந்தகச் சோழர் மிகவும் சிறப்பாகத் தான் சோழ தேசத்தை ஆட்சி செய்தார்.
Beatmark Download
Effect Download

0 Comments