தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம். இன்று நாம் மருது சகோதரர்கள் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
மொக்க பழனியப்பன் என்பவருக்கும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி பெரிய மருது பாண்டியர் பிறந்தார். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து 1753 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 தேதி சின்ன மருது பாண்டியர் பிறந்தார். இவர்கள் பிறந்த ஊர் முக்குளம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது.
பெரிய மருது பாண்டியர் கொஞ்சம் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால் அவரை வெள்ளை மருது பாண்டியர் என்றும் மக்கள் அன்புடன் அழைத்தனர். இளைய மருது பாண்டியர், பெரிய மருது பாண்டியரைவிட, உயரம் கொஞ்சம் குறைவாக இருந்ததால் அவரைச் சின்ன மருது பாண்டியர் என்றும் மக்கள் அன்புடன் அழைத்தனர்.
பெரிய மருது, சின்ன மருது இவர்கள் இருவரும் சிவகங்கைச் சீமை மன்னர் முத்து வடுகநாதரின் போர்ப் படையில் படை வீரர்களாகச் சேர்ந்து தங்களது வீரத்தையும், திறமையின் நிரூபித்தனர். இவர்கள் இருவரின் வீரத்தைக் கண்டு வியந்து போன மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்கள் இருவரையும் தனது படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார்.
நம் இந்திய வரலாற்றை வடக்கிலிருந்து எழுதுவதை விட, தெற்கிலிருந்து எழுதினால் தான் மிகவும் உண்மையாக இருக்கும் என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் ஒரு மித்த கருத்தாகும். ஒரு சில விடுதலை வரலாற்று குறிப்புகளில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்று எதெல்லாம் இருக்கிறதோ அதெல்லாம் வட இந்தியாவில் தான் நடந்ததாக வரலாற்றை எழுதி இருக்கிறார்கள்.
வரலாற்று நிகழ்வுகள் சங்க காலத்திலோ அல்லது 500, 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை இவர்கள் மறைப்பதற்கே கொந்தளிக்கும் நாம், சமீபத்தில் அதாவது 220 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வெள்ளையனுக்கு எதிராகப் போர்க் கொடி ஏந்திப் பிடித்த நம் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறது இன்றைய இந்திய வரலாறு. இந்தப் பதிவை நீங்கள் படித்து முடிக்கும் இருக்கும்பொழுது உங்கள் கண்களில் உள்ள நீர் வற்றிப் போயிருக்கும். இரண்டு, உங்கள் கையில் இருக்கும் அனைத்து முடிக்கும் வீரம் முளைத்து நின்று கொண்டிருக்கும்.
ஏனென்றால் இந்த மாவீரர்களின் வாழ்வில் நட்பாலும், துரோகத்தாலும், வலியாலும், வீரத்தாலும் நிறைந்ததால்தான் இன்று வரை நம் அனைவரின் மனதிலும் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தென்னிந்திய வரலாற்றில் மட்டுமல்ல, நம் இந்திய வரலாற்றில் கூடத் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைக் கொண்டவர்கள் தான் நம் மருது பாண்டியர்கள். வட நாட்டில் பிரிட்டிஷ் இந்திய ராணுவப் படையில் விசுவாசம் மிக்க பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் ஒருவரான மங்கள் பாண்டே வெள்ளையர்களின் வெற்றிக்காகப் போராடியவர்களில் இவரும் முக்கியமான ஒருவர்.
ஆனால் அவ்வப்போது பிரிட்டிஷ்காரர்கள் தங்களை எதிர்த்த இந்திய சிப்பாயையும், முஸ்லிம் சிப்பாயையும் ஒழுக்கத்தைக் காரணம் காட்டி, சுட்டுக் கொன்றதை மங்கள் பாண்டே எதிர்த்தார். தங்களுடைய தியாகத்தையும், பண்பாட்டையும், மதிக்காத பிரிட்டிஷ் ஆட்சிக்கு, எதிராகப் புரட்சி செய்யுமாறு, தன்னுடைய சகாக்களைத் தூண்டி விட்டார் மங்கள் பாண்டே. தனது மேலதிகாரியைத் தாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, 1857 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாள் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப் பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகச் சிப்பாய் கலகம் படித்தது. மங்கள் பாண்டே இறப்பு மற்றும் அதன் பின், ஏற்பட்ட பல பொருளாதாரப் பிரச்சனையால், குமுறிக் கொண்டிருந்த மக்களின் கோபமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக உருவானது தான் சிப்பாய் கழகம்.
இதைத் தான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறது நம் வரலாற்று புத்தகம். ஆனால் இவர்கள் எழுதிய இந்த வரலாற்றுக்கு முன்பே, கிட்டத் தட்ட 56 ஆண்டுகளுக்கு முன்பே, சாதி, மத பேதமின்றி ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டியவர்கள் நம் மருது பாண்டியர்கள். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்காக இந்திய துணை கண்ட முழுமைக்கும், இந்திய வரலாற்றில் முதல் முறையாக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு போர் அறிவிப்பை வெளியிட்டார்கள். அது தான் ஜம்புத் தீவு பிரகடனம்.
அதில் சின்ன மருது அவர்கள் எழுதியதை இப்பொழுது நாம் படித்தாலும், கேட்டாலும், நமக்கு வீரம் முறுக்கிக் கொண்டு வரும். அந்த அறிவிப்பில் இருக்கும் வார்த்தைகள் என்ன தெரியுமா? இந்நாட்டில் வாழும் அனைத்து சாதி, மத மக்களுக்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், ஐரோப்பியர்கள் இந்த அரசாங்கத்தைத் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு, நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி, ஆட்சி அதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடைய ஒற்றுமையும், அமைதியும், நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் பழி தூற்றிக் கொண்டது மட்டுமல்லாமல், இந்த நாட்டை அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.
இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகள் எல்லாம் மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். சோற்றுக்குப் பதில் நீர் மட்டுமே என்பது உணவாகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் கடைசியில் மனிதன் இறந்து தான் ஆக வேண்டும். ஆகப் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க் கோலம் பூண்டு பட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சி இருக்காமல் செய்ய வேண்டும். அப்போது தான் ஏழைகளும், கஷ்டப்படுபவர்களும் நிம்மதியாக வாழ முடியும். அதே நேரத்தில், அந்த ஈனர்களுக்கு நாயைப் போலத் தொண்டு ஊழியம் செய்து, சுக வாழ்வு வாழ விரும்புபவன் எவனாக இருந்தாலும், அத்தகையப் பிறவிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்.
ஆதலால், மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் ராணுவம் அல்லது மற்ற தொழில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும், மற்றும் அந்த ஈனப் பிறவிகளுக்குக் கீழ் தொண்டு ஊழியம் புரியும், உயர் அதிகாரிகள் முதல் சிப்பாய்கள்வரை போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரம் இருந்தால், கீழ்க்கண்டவற்றை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களான அந்த ஈனர்களை நாம் எங்குப் பார்த்தாலும் கண்ட இடத்திலேயே அவர்களை அழித்து விட வேண்டும். அந்த ஈனப் பிறவிகளுக்கு, எவன் ஒருவன் தொண்டு ஊழியம் செய்கிறானோ, அவனுக்கு இறந்த பிறகு மோட்சம் கிடையாது. இதனை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி முடிக்குச் சமமானது.
இதனை ஏற்றுக் கொள்ளாதவனின் பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப் பிறவிகளுக்குத் தங்கள் மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியர்களின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள். இதைப் படிப்பவர்களோ, கேட்பவர்களோ இதில் கூறி இருப்பதை மக்களிடம் பரப்புங்கள். எவன் ஒருவன் சுவற்றில் ஒட்டப்பட்ட இந்த வாசகத்தைச் சுவற்றிலிருந்து கிழிக்கிறானோ, அவன் பஞ்சமா பாதகத்தைச் செய்தவன் ஆவான். இப்படிக்கு மருது பாண்டியர். பேரரசர்களின் ஊழியன். ஐரோப்பியர்களின் ஜென்ம விரோதி. ஆயுதத்தால் மட்டுமல்ல, எழுத்துக்களால் கூட, வெள்ளையனை எதிர்க்க முடியும் என்று மக்களுக்கு எடுத்துக் காட்டியவர்கள் நம் மருது பாண்டியர்கள்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட இந்த முதல் போர் அறிவிப்பு தான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிவிப்பைக் கேட்டவர்கள், படித்தவர்கள் அனைவரின் மனதிலும், சுதந்திரம் என்னும் போர் வெறி அணைக்க முடியாத காட்டுத் தீயைப் போல எரிந்து கொண்டிருந்தது. ஆக, மங்கள் பாண்டே என்பவரால் உருவான முதல் சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படும் சிப்பாய் கலகம் தோன்றுவதற்கு, 56 ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவில், மக்கள் மனதில் அந்தப் போராட்ட எண்ணத்திற்கான அந்தத் நெருப்பிற்கான திரியை ஏற்றியவர்கள் மருது பாண்டியர்கள். இது தான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று வரலாற்றில் சேர்ப்பதற்கு, வட இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கு மனம் வரவில்லை. இதே போல் தான் இன்னொரு நிகழ்வையும் மறைத்திருக்கிறார்கள்.
அதுதான் இந்திய வரலாற்றில் முதல் படு கொலை என்று சொல்லப்படும் ஜாலியன் வாலாபாக் படு கொலை. 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் படு கொலை உண்மையில் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களின் ஒரு வெறியாட்டம் தான். அதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் நாம் இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். அங்குக் கூடி இருந்த நம் இந்திய மக்களுக்குப் பயம் வர வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே ஆங்கில ராணுவ அதிகாரியான ரெஜினல் டயர் என்பவரின் ஆணைப்படி, அவர்களைக் கொன்று குவித்தார்கள். இந்தப் படு கொலையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 379 பேர்.
இந்திய வரலாற்று புத்தகத்தில் ஒரு ரத்தம் படிந்த பக்கம் தான் இந்தப் படு கொலை என்பதில் எந்த வித ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், இதைத் தான் நம் இந்திய சுதந்திர வரலாற்றின் முதல் படு கொலை என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தப் படு கொலை நடப்பதற்கு 118 ஆண்டுகளுக்கு முன்பே, கிட்டத் தட்ட 500 மக்களை, அதிலும் ஒரு சில அப்பாவி மக்களை, ஆங்கிலேய அரசு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், தூக்கிலிட்டுக் கொன்றும், நாடு கடத்தியும் உள்ளது. அது எங்குத் தெரியுமா? அதுவும் நம் தென்னிந்தியாவில் தான். நம் சிவகங்கை மாவட்டத்தில் தான். திருப்பத்தூர் படு கொலைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டு இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். காரணம் வரலாற்றை உரிய முறையில் சேர்க்க தவறிய ஒரு சில மக்கள். ஆனால் அதைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு இந்தியனின், முக்கியமாக ஒவ்வொரு தமிழனின் முக்கிய கடமையாகும்.
பெரிய மருது, சின்ன மருது இருவரும் தன் வாழ்க்கையை மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். இருவரும் தான் சாகும் வரை வெள்ளையனுக்கு எதிராகப் வீரத்துடன் போராடிக் கொண்டே இருந்தார்கள். பெரிய மருது சின்ன மருது இருவரும் வில் வித்தை, வால் சண்டை, வேள் கம்பு வீசுதல், வளரி எரிதல், ஈட்டி எறிதல், சிலம்பாட்டம், குதிரை ஏற்றம் என அனைத்து வித்தைகளிலும் மிகவும் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். மருது பாண்டியர்களுடன் ஒவ்வொரு முறையும் வெள்ளைக்காரர்கள் சண்டைக்கு வரும்பொழுது மிகவும் பயத்துடனே வருவார்கள். அதற்குக் காரணம் சின்ன மருது, பெரிய மருது இருவரும் வளரி வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். வளரியை வைத்து இருவரும் பல ஆயிரக்கணக்கான, லட்ச்க்கணக்கன ஆங்கிலே வீரர்களைக் கொன்று குவித்தார்கள். இதனாலே ஆங்கிலேயர்கள் இவர்களுடன் சண்டைக்கு வருவதற்கு மிகவும் பயந்தார்கள்.
இறுதியில் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி திருப்பத்தூர் அருகே உள்ள காளையர் கோவிலில் சின்ன மருது பெரிய மருது இருவரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். சின்ன மருது, பெரிய மருது இவர்கள் இருவரைப் போன்ற வீரர்கள் இந்த உலகில் இதற்கு முன் பிறந்ததும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை. அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் தமிழர்களாகிய நாம் அனைவரும் போற்றி வணங்குவோம்.
Beatmark Download
Effect Download
0 Comments