நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நம் வாழ்வை நம் வாழதலை இதன் பொருட்டு செலவிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது நாம் பொது வாழ்க்கைக்காக செலவிடுகிறோமா தனிப்பட்ட வாழ்க்கைக்காக செலவிடுகிறோமா அப்படி தன் பொது வாழ்க்கையை இந்த தேசத்திற்காக அர்ப்பணித்த மிக முக்கிய தலைவர்களை மட்டும் தான் வரலாறு சுமக்கிறது வரலாறு அவர்களை மட்டுமே நினைவு கூறுகிறது அப்படி தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இந்த நாட்டின் விடுதலை போரிற்காக விடுதலை பெற்ற இந்த தேசத்திற்காக இந்தியா இன்றைக்கு ஒரு நவீன இந்தியாவாக திகழ்வதற்கான அடிப்படைகளை எல்லாம் அமைத்துக் கொடுத்த இந்தியாவின் நவீன சிற்பி ஜவஹர்லால் நேரு பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
சிறைச்சாலை போல் ஒரு தவச்சாலை இல்லை தண்டனைப் போல் ஒரு தவம் இல்லை என்று தனது விடுதலைப் போராட்ட காலங்களில் சிறை வாழ்வை ஒரு தவ வாழ்வாக எண்ணி இறுதிவரை விடுதலை களத்தில் ஒரு துணிவோடு நின்ற மாபெரும் தலைவர் ஜவஹர்லால் நேரு இந்தியாவை ஒரு வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றதோடு மட்டுமல்லாமல் சிறந்த பன்முகத்தன்மை கொண்ட நாடாகவும் பரிமளிக்க செய்ததில் ஜவஹர்லால் நேருவின் பங்கு மகத்தானது.
கி.பி 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் பிரபல வழக்கறிஞரான மோதிலால் நேருவிற்கும் சுருபுராணி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார் ஜவஹர்லால் நேரு இவருக்கு விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என இரண்டு சகோதரிகள் இருந்தனர் இவர் தந்தை மோதிலால் நேரு அந்த காலத்தில் மிக பிரபலமான வழக்கறிஞர் என்பதால் நேரு ஆரம்ப காலம் தொட்டு செல்வம் செழிப்பாக வாழ்ந்து வந்தார் ஆனந்த பவனம் என்கின்ற இவர்களின் வீடு அரண்மனைக்கு நிகராக ஒன்றாக இருந்து வந்தது.
தன் ஆரம்பக் கல்வியை இங்கிலாந்தின் பயில தொடங்கினார் அதன்பின் கல்லூரி படிப்பை படித்து முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று நேரு 1912 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார் சட்டம் படித்த ஜவஹர்லால் நேரு தன்னை போல் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்பதையே அவரின் தந்தையான மோதிலால் நிறுவின் விருப்பமாக இருந்து வந்தது ஆனால் காலம் நேருவின் கரஙகளுக்குள் வேறொரு வேலையை ஒப்படைக்க காத்திருந்தது.
ஜவஹர்லால் நேரு அவர்கள் தன்னுடைய பள்ளி பருவத்தின் போது தனது தந்தையிடம் இரண்டு பேனாக்கள் இருப்பதை பார்க்கிறார் மிகவும் அழகிய பேனாக்கள் தந்தை ஒரு பெரிய வழக்கறிஞர் அந்த இரண்டு பேனாக்களை பார்த்த நேரு அவர்கள் இரண்டு தான் நமது அப்பாவிடம் உள்ளது ஒன்றை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று தந்தைக்குத் தெரியாமல் ஒரு பேனாவை எடுத்துக் கொள்கிறார் இது அறிந்த மோதிலால் நேரு அவர்கள் நேருவை கடுமையாக அடிக்கிறார் அப்போது நேர்மையான வழியில் பெறாத எந்த ஒன்றையும் தனது ஆக்கிக் கொள்ளக் கூடாது என்கின்ற தந்தையின் உடைய கண்டிப்பு நேருவை பொது வாழ்க்கையில் மிகத் தூய்மையாக வைத்திருப்பதற்கு உதவியது என்று நேரு சுயசரிதையை மிகச் சுவாரசியமான சம்பவமாகக் குறிப்பிடுகிறார்.
1916 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு கமலா கவுல் என்பவரை தன் இல்வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார் 1917 ஆம் ஆண்டு இவர்களுக்கு இந்திரா பிரியதர்ஷினி என்னும் பெண் குழந்தை பிறக்கிறது இவர்தான் பின்னால் இந்தியாவில் மூன்றாவது பிரதமராக வந்த இந்திரா காந்தி நேருவின் தந்தையான மோதிலால் நேரு காங்கிரஸ் கட்சியில் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல்வாதி என்பதால் நேருவும் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு தந்தையோடு இணைந்து காங்கிரஸ் கட்சியின் சுதந்திர செயல்பாட்டுகளில் கலந்து கொள்கிறார் 1916 ஆம் ஆண்டு நடந்த லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் நேரு காந்தியை சந்திக்கிறார் இந்தியாவின் இரு பெரும் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்திப்பாக அமைகிறது இருவருமே இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர்கள் என்பதுடன் இன்னும் பல ஒற்றுமைகளாலும் இருவருக்குள்ளும் ஒரு ஆழமான புரிதலும் நட்பு ஏற்படுகிறது அன்று முதல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான முன் ஏற்பாடுகள் ஆகுகின்றன 1919 ஆம் ஆண்டு பஞ்சாப் அருகே உள்ள அமிர்தசரத்தில் என்னும் இடத்தில் ஆங்கில அதிகாரி ஜெனரல் டயர் அவரது தலைமையில் நடைபெறும் ஜாலியன் வாலாபாக் படுகொலை ஜவஹர்லால் நேருவை மிகவும் கோபம் கொள்ள செய்கிறது இந்த சம்பவம் தான் ஜவஹர்லால் நேரு மிகத் தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஓர் மிக முக்கிய காரணமாக அமைகிறது.
1919 ஏப்ரல் 13-ஆம் தேதி பஞ்சாபின் தலைநகர் அமுதசரத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்கின்ற மிகப்பெரிய பூங்காவில் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது சைபுத்தின் கிளி மற்றும் சத்திய பால் அவர்களை ஆங்கில அரசு கைது செய்கிறது இந்த கைதியை கண்டித்து அந்தப் பூங்காவில் ஜாலியன் வாலாபாக்கில் மிகப்பெரும் திரளான கூட்டம் கூடி இருக்கிறது குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என ஊரின் பெரும்பாலான ஆயிரக்கணக்கான அங்கு கூடி இருக்கின்றார்கள் அப்பொழுது அங்கே பிரிட்டிஷார் போலீஸ் அங்கே வருகிறது ஜெனரல் டயர் என்பவர் அங்கே கூடியுள்ள ஆயுதம் இயங்காத நிறைத பாணிகளாக இருந்த பொது மக்களை எந்தவிதமான அறிவிப்பும் இன்றி சுட துவங்குகிறார் அவர் சுட்டுக் கொண்டே இருக்கிறார் மக்கள் விழுந்து குருவிகளைப் போல செத்துக் கொண்டே இருக்கிறார்கள் வெள்ளைய அரசு தன்னுடைய கணக்குப் படி 379 பேர் இறந்ததாக பதிவு செய்கிறது ஆனால் அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அன்று இருந்ததாக நமக்கு வரலாற்று தகவல்கள் சொல்கிறது அப்படி இந்த சுட்டுக் கொலை சம்பவம் நடக்கும் போது ஒரு பெரிய விசாரணை கமிஷனை ஆங்கில அரசு அறிவிக்கிறது அப்போது ஜெனரல் டயர் அந்த விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் அவர் அங்கே சென்று சொல்கிறார் என்னிடம் அவர்கள் அனைவரையும் சுடுவதற்கான தோட்டாக்கள் இல்லை இருந்திருந்தால் ஒருவர் கூட அங்கே உயிர் பிழைத்திருக்க முடியாது அவர்களை நான் எல்லாம் கொன்று குவித்திருப்பேன் அப்படி எல்லாம் அவர்களை நான் கொன்று குவிப்பதற்கான காரணம் வெள்ளைய ஆட்சியை பற்றிய மிகப் பெரிய பயம் பஞ்சாப் முழுவதிலும் நிலவ வேண்டும் மக்கள் ஆங்கில அரசியலுக்கு எதிராக ஒருபோதும் போராட கூடாது என்று நினைப்பே வரக்கூடாது என்பதற்காக இந்த அச்சத்தை அவர்களது மனதில் வர வைப்பதற்காக நான் சுட்டேன் என்ற பகிரங்க சாட்சியத்தை ஜெனரல் டயர் அவர்கள் இந்த விசாரணை கமிஷன் முன் அளிக்கிறார்.
1920 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது உத்திரபிரதேசத்தில் நடந்த முத்துலாமே இயக்கம் நேரு தலைமை தாங்கினார் அதனால் கைது செய்யப்பட்டு சிறை செல்லப்பட்ட ஜவஹர்லால் நேரு ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெற்றுக் கொல்லப்பட்டதும் விடுதலையானார் அதன் பிறகு 1923 ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜவஹர்லால் நேரு 1929 ஆம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் நேரு தலைமையில் முழு சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இம்மாதிரியான தொடர்ச்சியான பல கட்சிகளில் நடவடிக்கைகளால் வழி நடத்தியதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத சக்தியாகவும் காந்தியடிகளின் நம்பிக்கை கூறிய தலைவராகவும் மாறுகிறார் ஜவர்கலால் நேரு.
அதே நேரத்தில் பட்டேல் ராஜாஜி போன்ற காங்கிரஸில் இருந்த பல சிந்தனை தலைவர்களும் நேருக்கு உடன்பாடுகளும் ஏற்படுகிறது 1946 க்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் இயக்கம் முன்னெடுத்து நடத்திய பல்வேறு போராட்டங்களில் சார்பாக சுமார் 9 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார் ஜவஹர்லால் நேரு இவ்வாறான சிறை வாழ்க்கையின்போது அவர் தன் சொந்த வாழ்க்கையில் பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேர்கிறது குறிப்பாக 1936 ஆம் வருடம் அல்மோரா சிறையில் இருக்கும் போது உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த அவரது மனைவி கமலால் நேரு காலமாகி விடுகிறார்.
ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலங்களில் தான் உலகப் புகழ்பெற்ற பல படைப்புகள் உருவாகின உலக வரலாற்றின் பார்வைகள் இந்திய தரிசனம் மற்றும் அவரின் சுயசரிதைகள் ஆகியவை இந்தியாவில் மட்டுமல்லாது உளரின் பலரது கவனத்தையும் இழுத்து உள்ளது 1935 மற்றும் 1936 ஆகிய இரண்டு ஆண்டு சிறை தண்டனை காலங்களில் மட்டும் சுமார் 188 புத்தகங்களை வாசித்திருக்கிறார் ஜவகர்லால் நேரு மேலும் மேலும் சிறையில் இருந்தபோது தன் மகளான இந்திரா காந்திக்கு அவர் எழுதிய பல கடிதங்கள் வரலாற்று பொக்கிஷங்களாக இன்றும் வரையிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சுதந்திரத்திற்கு பிரதான இந்தியா என்பது 300 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்ட இந்தியாவாகவும் பல்வேறு மத இன மொழிகளால் மோதல்களால் சிதறுண்ட இந்தியாவாகவும் இருந்தது பல்வேறு தேசிய இனங்கள் வாழுகின்ற இந்த பெரும் நிலப்பரப்பில் இந்தியா என்கின்ற ஒன்றுபட்ட தேசமாக உருவாக்குவதும் அவருக்கான உரிமைகளை பகிர்ந்து அளிப்பதும் இந்தியாவில் அப்போது ஆட்சியாளர்களின் பெரும் சவாலாகவே இருந்து வந்தது எனவே இந்தியாவை ஆளும் அதிகாரத்தை தேர்ந்தெடுப்பதில் இந்திய மக்களின் அனைவரின் பங்கு இருப்பது போன்று ஜனநாயக வடிவமை இந்தியாவிற்கு பொருத்தமாக ஒன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்பினார் ஜவஹர்லால் நேரு எனவே 1951 மற்றும் 1952 ஆண்டு நடக்க இருக்கும் இந்தியாவின் முதல் பொது தேர்தலுக்கு முன் இந்திய மக்களின் அனைவருக்கும் வாக்கு என்ற முறையில் ஏற்படுத்த விரும்பினார் அப்படி உருவானது தான் இந்தியாவின் பெண்கள் உட்பட அனைவருக்குமான வாக்களிக்கும் உரிமை.
நவீன இந்தியாவை உருவாக்கும் முதல் படியாக நேருவின் ஆட்சிக்காலத்தில் திட்ட கமிஷன்கள் உருவாக்கப்பட்டது அதன் ஐந்து ஆண்டுகள் திட்டம் என்னும் அரசின் குறைந்தபட்ச திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன தொழிற்சாலைகள் மற்றும் விவசாய துறைகளில் முதலீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிய தெளிவான வரையறைகள் உருவானது மின்சாரம் சுரங்கம் கனரகம் போன்ற தொழில்கள் தனியாருக்கு தாரை பார்க்காமல் அரசை ஏற்று நடத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டது இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகை நாடாக இருந்ததால் உணவு பற்றாக்குறையும் அதற்கு ஏற்றது போல் இருந்தது எனவே விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் நீர் பாசன திட்டங்களும் ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தி பெருக்கவும் ஏற்படுத்தப்பட்டன குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வளர்ச்சி தான் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பதால் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் பல புதிய நிறுவனங்கள் நேருவின் ஆட்சிக்காலத்தில் தான் உருவானது அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் இந்திய தொழில் நுட்ப கழகங்கள் இந்திய மேலாண்மை கழகங்கள் தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை என இன்றைய வளர்ச்சி மிக்க இந்தியாவிற்கான அத்தனை அடித்தளங்களும் ஜவஹர்லால் நேருவின் தொலைநோக்கு பார்வைகளால் கிடைத்த இந்தியாவின் வரங்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
அனைவருக்கும் கட்டாய கல்வி கூடங்களில் இலவச மதிய உணவு திட்டங்கள் போன்றவற்றை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டனர் இரண்டாம் உலக போருக்கு பின்பு உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்கா ரஷ்யா என்ற இரண்டு வல்லரசு நாடுகளை பின்னால் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நின்றது ஜவஹர்லால் நேரு யாரு யாருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இலலை என்ற நடுநிலையான முடிவை மிகத் துணிச்சலாக எடுத்தார் இந்திய மட்டும் இன்றி அணிசேரா நாடுகள் என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கி ரஷ்ய அமெரிக்க சார்புகள் அற்ற மூன்றாம் உலக நாடுகள் என்னும் புதிய சொற்பகத்தை உருவாக்கினார் ஐந்து உறுப்புகளாக கொண்ட உருவான அணிசேரா நாடுகள் தற்போது 120 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட பெரும் அமைப்பாக மாறி நிற்கிறது அண்டை நாடுகளின் எல்லைகளையும் இறையாண்மைகளையும் மதிக்க வேண்டும் என்கின்ற பஞ்ச சில கொள்கைகளும் நேருவின் வெளிப்படையான வெளியுறவு கொள்கைகளுக்கு சாட்சிகளாக அமைந்தன தேசப் பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதன் பொருட்டு அணு ஆராய்ச்சி செய்வதில் எப்பொழுதும் எதிர் கருத்து உடையவராகவே இருந்தார் ஜவஹர்லால் நேரு.
1963ஆம் மூன்றாம் ஆண்டிலிருந்து நேருவின் உடல்நலத்தில் சில பின் நிலைகள் ஏற்பட தொடங்கியது இதனால் சில மாதங்கள் காஷ்மீரில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டார் ஆனால் அதுவும் கூட சிலரின் விமர்சனத்திற்கு உள்ளானது சீனாவின் மீதான எல்லை பிரச்சனைகளின் தோல்விகள் சிக்கல்களை திசை திருப்புவது நோக்கமாக அப்படி நடந்து கொள்கிறார் என்று கூறப்பட்டாலும் 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் நாள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நேரு மாரடைப்பால் காலமானார் நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இந்தியாவை ஒரு மாறாத ஜனநாயக நாடாக மலர செய்தது எல்லோருக்குமான சமத்துவ உரிமையை வழிகாட்டியது இந்தியா என்கின்ற பரந்த நாட்டை 17 ஆண்டு காலம் ஆட்சி செய்தது என ஜவஹர்லால் நேரு இந்திய வரலாற்றில் போற்றத்தக்கவர்களாக இருந்தாலும் நேருவின் மீதும் ஆற்றல் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இப்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன ஆனாலும் கண்ணீர் இருக்கும் வரை நமது கடமைகளும் இருந்து கொண்டே தான் இருக்கும் என இலட்சிய தாகத்தோடு தன் வாழ்வை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்து அந்த தலைவரின் நினைவு கூற வேண்டிய கடமை நமக்கும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்
Beatmark Download
Effect Download

0 Comments