பெரும்பிடுகு முத்தரையர் | பெரும்பிடுகு முத்தரையர் வாழ்க்கை வரலாறு

 தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம். இன்று நாம் பெரும்பிடுகு முத்தரையர் என்னும் மன்னனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். மூன்று வருடங்களுக்கு முன்பு உயர் நீதி மன்ற மதுரைக் கிளை ஒரு விஷயத்தைச் சொன்னது. அதாவது தமிழகத்தில் பெருமை மிக்க மன்னர்களை நாம் கொண்டாடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மன்னர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் கூறியது. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள்போலப் பல பேரரசர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் நம் தஞ்சையை ஆண்ட மன்னர் யார்? என்று கேட்டால் நாம் அனைவருக்கும் தெரிந்திருப்பது மாமன்னர் இராஜராஜ சோழன் தான். ஆனால், இவர் பிறந்து ஆட்சி புரிந்த ஆண்டு கி.பி. பத்தாம் நூற்றாண்டு. ஆனால் அதற்கு முன்னர் கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டுவரை வரை கிட்டத் தட்ட 300 ஆண்டுகள் தஞ்சை ஆண்ட பேரரசர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? போர்க் கலையிலும், தமிழ்ப் பற்றிலும் சிறந்து விளங்கியவர்கள். நாலடியார் மற்றும் முத்தொள்ளாயிரத்தில் இந்த அரச குடித் தலைவர்களைப் பற்றிப் பல பாராட்டுச் செயல்கள் இருக்கிறது. 


இவர்கள் சில காலம் பேரரசர்களைச் சார்ந்தும், சில காலம் தனிச்சியாகவும் ஆட்சி செய்தவர்கள். மூவேந்தர்களைப் போல் இவர்களும் அவர்களுக்கென்று அவர்களைப் (மூவேந்தர்கள்) போல் ஒரு தனி நாட்டை வைத்திருந்தார்கள். அந்த நாடு தான் முத்தரையர் நாடு. தெற்கு மேலத் தானியிலிருந்து, வடக்கே மேலப்பழுவூர் வரையிலும், கிழக்கே காவலூரிலிருந்து, மேற்கே குளித்தலை வரையிலும் இவர்களுடைய நாடி இருந்ததாகக் கல்வெட்டு அறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.  சோழர்களுக்கு முன்னால் தஞ்சை உருவாக்கி அதை அப்போதே அழகாக வைத்திருந்தவர்கள் முத்தரையர்கள் தான். பல்லவர்களின் பேராதிக்கத்தை நிலை நாட்டுவதிலும், அதேபோல் அவர்கள் சரியும் போதெல்லாம் அவர்களைத் தூக்கி நிறுத்துவதிலும், முத்தரையர்கள் பெரும் பங்கு வகித்தார்கள். பாடப் புத்தகங்களில் சோழர்களின் எழுச்சியை பற்றிப் படிக்கும் போதேல்லாம், இவர்களுடைய பெயர் கண்டிப்பாக வரும். 


முத்திரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கோட்டை கொத்தளங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றினார் என்று இந்த வரியை நாம் படிக்கும்போது, விஜயாலய சோழனின் வீரத்தைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட அதே நேரத்தில், அவர்களுக்கு முன்னால் கோட்டைக் கொத்தளங்களுடன் ஒரு அரச இனம் இருந்திருக்கிறது என்றால் அவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்திருப்பார்கள். அதிலும் பல்லவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய வீரத்தைப் பற்றி நாம் ஆராயும்போது, முத்தரையர்களில் ஒரு சிறந்த மன்னராக, ஒரு பேரரசராக, என்றும் புகழக்கூடிய, சுவரன் மாறன் என்கிற பெரும்பிடுகு முத்தரையரைப் பற்றித் தான் இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். ஆம், சோழர்கள் எப்படி இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும், புகழப்படுகிறார்களோ, அதே போல் முத்திரையர்களில் பல சாதனைகள் புரிந்து, பல கலைகளில் சிறந்து விளங்கிய ஒரு மாமன்னர் தான் சுவரன் மாறன் என்கிற இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர். 


முதலாம் இராஜராஜ சோழனுக்கும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும், முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனுக்கும் ஒப்பானவராகத் திகழ்ந்தவர் தான் சுவரன் மாறன் என்னும் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்று வரலாற்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் போர் வெற்றிச் செய்திகளை அக்காலத் தமிழ்ப் புலவர்களே போற்றிப் பாடி இருக்கிறார்கள். சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்குப் பல போர்க் களங்களில் எமனாக இருந்திருக்கிறார்கள் முத்தரையர்கள். "பால் கொண்ட செவ்வாய் விளைய மொழிப் பருவத்து முன்னம் வேல் கொண்ட மாறன்" என்ற இந்தப் பாடலின் அர்த்தத்தைப் பார்க்கும்பொழுது, தன்னுடைய இளம் பருவத்திலேயே சேரர்களின் தலைநகரான வஞ்சி வரை சென்று,  போரிட்டு வென்றதை இந்த வெண்பா குறிப்பிடுகிறது.


அதேபோல் இந்தப் பாடலில், மறப்படை மீனவன் வல்லவன் பல்லவன் சேனைக் கன்று புறப்பட மாறு பொரு களிற்று" இதில் மீனவன் என்றால் பாண்டிய மன்னன் என்று பொருள்.  வலிமை மிக்க படையுடைய பாண்டியனைப் பெரும்பிடுகு முத்தரையர், பல்லவர்கள் சார்பாக நின்று போரிட்டு தனது வலிமை மிக்க யானை படையால் மட்டுமே பாண்டிய படைகளை அழித்தார் என்பதை இந்த வெண்பா விளக்குகிறது. அந்த அளவிற்கு வலிமையான யானை படையும் இவரிடம் அந்தக் காலக் கட்டத்திலிருந்து இருக்கிறது. நூறு ஆண்டுகள் என்பதை ஒரு நூற்றாண்டு என்று சொல்வோம். அதே போல் ஆயிரம் ஆண்டுகள் அதாவது 10 நூற்றாண்டுகள் சேர்ந்ததை ஒரு சதயம் என்று சொல்வோம். தமிழக வரலாற்றில் பல மன்னர்கள் இருந்தாலும் அனைத்து விஷயங்களிலும் சிறந்து விளங்கிய இரண்டு மன்னர்களுக்கு மட்டுமே சதய விழா இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது. ஒருவர் மாமன்னர் இராஜராஜ சோழன். மற்றொருவர்  இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்.


வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்பொழுது கிட்டத் தட்ட 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருடைய சதய விழாவைக் காலம் கடந்தும் இன்றும் மக்கள் வருடந்தோறும் கோல கலமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் மே மாதம் 23ம் தேதி தமிழகத்தில் இவருடைய பிறந்த நாள் சதய விழாவாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. அது மட்டுமல்ல சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கி.பி. ஏழாம் நூற்றாண்டில், தமிழுக்கு மெய் கீர்த்தி கண்டவரும் இவர் தான் என்று சொல்லப்படுகிறது. இவருடைய ஆட்சிக் காலத்தில் ஒன்று அல்ல, இரண்டு அல்ல கிட்டத் தட்ட 14 போர்களைச் சந்தித்து இருக்கிறார். அந்த அனைத்துப் போர்களிலும் வெற்றியும் பெற்று இருக்கிறார். அதிலும் குறிப்பாக இவரேத் தன்னிச்சையாகச் சென்று போரிட்டு வென்ற போர்கள் மட்டும் 14 போர்கள். மேலும்,  பல்லவர்களுக்கு ஆதரவாக, உதவியாக இருந்து இரண்டு போர்களை வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார். 


மணலூர் போர், மறங்கூர் போர், காரையூர் போர், காந்தளூர் போர், கண்ணனூர் போர், கொடும்பாளூர் போர், நெற்போர் என்று சொல்லப் படும் கோனாட்டுப் போர், அண்ணன்வாயில் போர், அழிந்தியூர் போர், வெண்டகோடல் போர், செம்பொன்மாறி போர், புகழிப் போர், திங்களூர் போர், மாமங்கை போர், மணிப்பாறை போர், வஞ்சிப் போர் என இவ்வாறு பதினாறு போர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தோல்வியே காணாத ஒரு பேரரசனாக இருந்திருக்கிறார் பெரும்பிடுகு முத்தரையர். பொதுவாக அரசர்கள் மட்டும் தான் வாகைப் பூவையும், வஞ்சிப் பூவையும் மாலையாகச் சூடிக் கொள்வார்கள். அதிலும் போருக்குச் செல்லும் முன்பு வஞ்சிப் பூவையும், அதன் பிறகு போரில் வெற்றி பெற்றால் வாகைப் பூவையும் சூடிக் கொள்வார்கள். பொதுவாக நம்முடைய அனைத்துத் தமிழ் மன்னர்களும் இந்த வழக்கத்தைத் தான் பின்பற்றி வந்தார்கள். ஆனால், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மட்டும் போருக்குச் செல்லும் முன்பு வாகைப் பூவைச் சூடிக் கொண்டு வெற்றி நமக்குத் தான் என்ற முடிவுடன் செல்வாராம். அந்த அளவிற்கு நம்பிக்கையும், வீரமும், விவேகமும், போர் யுக்திகளும் தெரிந்த ஒரு மாவீரனாக இருந்ததால் தான், தன்னிச்சையாக 14 போர்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு பேரரசன் என்ற பெருமையும், புகழும் இவருக்கு இருக்கிறது. பெரும்பிடுகு என்றால் பேரிடி என்று பொருள். 


அதனால் தான் இவருடைய பெயருக்கு முன்னால் பெரும்பிடுகு முத்தரையர் என்ற சிறப்புப் பட்டம் சேர்த்து பெரும்பிடுகு முத்தரையர் என்று அழைக்கப்படுகிறார். தஞ்சை மாவட்டம் செந்தலை சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒரு கல் தூண் ஒன்று கிடைத்தது. தற்சமயம் அந்தக் கல் தூணில் உள்ள கல்வெட்டுகள் காலத்தால் சிதைவுற்று இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகளின் வழியாகத் தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் போர் வெற்றிச் செய்திகளைப் பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வேளை அந்தக் கல்வெட்டுகள் அனைத்தும் அழியாமல் நமக்கு முழுமையாகக் கிடைத்திருந்தால், முத்தரையர்களின் ஆட்சி காலத்தில் அன்றைய தமிழகம் எப்படி இருந்தது என்று நம்மால் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்தக் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டிருந்தவைகள் அனைத்தும் கன்னித் தமிழில் வெண்பாக்களால் பொறிக்கப்பட்டிருந்தது.


அதே போல் புதுக்கோட்டை மாவட்டம் கில்லுக் கோட்டையிலும் இவரைப் பற்றிய நடுகல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதே போல் மேலும், வல்லத்தில் வானளவு கோட்டை கட்டியதால் வல்லக்கோன் என்றும், தஞ்சையும், வல்லத்தையும் வரலாற்றில் பதித்ததால் தஞ்சைக் கோன் என்றும், போர் வாள்களைக் கட்டித் தழுவும் கைகளை உடையதால் வாள்மாறன் என்றும், சத்ருக் களை அதாவது, எதிரிகளைத் தன் வீரத்தால் விரட்டி அடித்து ஓட விட்டதால் சத்ருக் கேசரி என்றும், கயவர்களின் சூழ்ச்சியை முறியடித்துக் கள்வருக்கு, கள்வராக எதிரிகளை எதிர்த்து மண்டியிட வைத்ததால் கள்வருக்கு கள்வன் என்றும், எதிரிகளோடு மல்போர் செய்ததால் சத்துரு மல்லன் என்றும், அபிமான தீரன், வாள்வரி வேங்கை, அதி சாகசன், ஶ்ரீமாறன், தமராலயன், செரு மாறன், வேல் மாறன், சாத்தன் மாறன் எனச் சுவரன் மாறனுக்குப் பல சிறப்புப் பெயர்களும், பல பட்டப் பெயர்களும் இருந்திருக்கிறது.


மேலும் இவர் யானைப் படையில் சிறந்து விளங்கியவர் என்பதற்குத் தமிழ்ப் புலவர்கள் எழுதிய பல  வெண்பாக்கள் இன்றும் சாட்சி இருக்கிறது. இரண்டாம் நந்தி வர்மப் பல்லவரின் படைத் தலைவரான உதயச் சந்திரானும், சுவரன் மாறனும் இருவரும் கூட்டாகச் சேர்ந்து சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராகக் குறைந்தது 12 போர்களில் ஈடுபட்டதாக வரலாற்று ஆசிரியர் மகாலிங்கத்தின் கருத்து இருக்கிறது. அது மட்டுமல்ல வெற்றிக் கடவுளான கொற்றவையைப் பிடாரி என்றும் அழைப்பார்கள். தன் வெற்றிகள் அனைத்திற்கும், தான் வழிபட்ட கொற்றவை கடவுளே காரணம் என்று தன்னுடைய கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் பெரும்பிடுகு முத்தரையர். தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகக் காவிரிக் கரை ஓரத்தில் இருக்கும் வளமாக இருந்த நேமம் என்ற கிராமத்தில் ஒரு பிடாரி கோயிலையும் இவர் கட்டி இருக்கிறார். அங்குக் கிடைத்த கல்வெட்டில், பெரும்பிடுகு  முத்தரையனாயின சுவரன் மாறன் எடுப்பித்த பிடாரி கோவில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இராஜராஜ சோழனாலும் அவருக்குப் பல வருடத்திற்கு முன்னால், பல மன்னர்கள் குன்றுகளும், காடுகளும், ஓடி ஒளிய, கழுகுகளும்,  ஓநாய்களும், பின் தொடர, போர்க் களத்தில், தன்னிகரில்லாத ஒரு பேரடி வீரனாகக் கர்ஜித்து, வெற்றிகள் பலக் கொண்ட தஞ்சைக்கோன் என்று அழைக்கப் பட்ட சுவரன் மாறன் என்னும் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையராலும், இன்றும் பெருமையோடு நிற்கிறது நம் தஞ்சை மண். முத்தரையர்களில் மிகவும் புகழ் பெற்ற மன்னர் தான் இந்தச் சுவரன் மாறன் என்னும் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர். இந்த உலகமுள்ள வரை இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.


Effect Download


Post a Comment

0 Comments